ஆசையே அலை போலே நாமெலாம் அதன் மேலே..! என்ற அற்புதமான பாடலை, இன்று நேயர் விருப்பப் பாடலாக பதிவிலிடுகிறேன்..!
ஜனவரி 14, 1958, தைத் திருநாளன்று ஏ.கே.வேலன் கதை, திரைக்கதை, இயக்கம் தயாரிப்பில் வெளியான ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலாகும்.
கவியரசர் கண்ணதாசனில் வைர வரிகளுக்கு, திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவனின் அட்டகாசமான இசையமைப்பில், திருச்சி லோகநாதன் அவர்கள் பாடிய பாடலிது...
இப்பாடலில் மனிதன் வாழ்வை இரண்டே சரணங்களில் அடக்கி விடுவார் கவிஞர். முதல் சரணத்தில் பருவ வயதும், இரண்டாம் சரணத்தில் முதுமை வாழ்வும் பற்றி எளிதாக விளக்கி விடுவார்... வாழ்க்கையில் எது வரவு எது செலவு என்பதை மூன்றாவது சரணத்தில் சொல்லி விடுவார்... அந்த வரிகள்....
‘வாழ்வில் துன்பம் வரவு
சுகம் செலவு இருப்பது கனவு!
காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்?’
இப்பாடலை நேயர் விருப்பப் பாடலாகக் கேட்ட பழனிவேல் கிருஷ்ணசாமி அவர்களுக்கு எனது நன்றிகள். இப்பாடல் எனக்கும் பிடித்த பாடலாகும். உங்களுக்குப் பிடித்திருப்பின் இப்பாடலை நீங்கள் இலவசமாக தரவிறக்கமும் செய்து கொள்ளலாம்.

------------------------------------