ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday 26 February 2014

தட்டிப் பார்த்தேன் கொட்டாங்குச்சி..! - நேயர் விருப்பப் பாடல்

எனது வலைப்பக்க நண்பர்களுக்கு... இந்த மோகனனின் வணக்கங்கள்... இந்த தளம் எப்படிப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியும். ஆனந்த விகடனில் பாராட்டப்பட்ட தளம் இது என்பதையும் அறிவீர்கள்.  இத்தளத்தில்கடைசியாக ஜூன் 2011-ல் பதிவிட்டதோடு சரி... இந்த வலைப்பக்கத்தை என்னால் நடத்த இயலவில்லை. பொருளாதார சிக்கல்களே இதற்கு காரணம். பல்வேறு வாசகர்கள் இந்த தளத்தை நடத்துங்கள்... நடத்துங்கள்... என்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வேண்டுகோள் விடுத்துக் கொண்டே இருந்தனர். உங்களின் வேண்டுகோளினை ஏற்றும் மீண்டும் இந்த தளத்திற்கு உயிரூட்டுகிறேன். இதற்கு நிதிஉதவி தேவைப்படுகிறது. பாடல்களை வாங்குவதற்கு, இணையத்தில் பதிவேற்றுவதற்கு என்று... இந்த தளத்தின்மேல் உண்மையான அக்கறை கொண்டுள்ள நண்பர்களிடமிருந்து நிதிஉதவியை இந்த தளம் எதிர்பார்க்கிறது... விளம்பரம் கொடுத்து நிதிதருவதாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள சித்தமாயிருக்கிறேன். விருப்பமுள்ள நண்பர்கள் dearganesanஅட்gmail.com-ல் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்... நன்றி...

இன்று முதல் வாரத்திற்கு ஒருமுறை கிராமிய பாடலோ அல்லது வாசகர்கள் கேட்கும் அரிதான பாடல்களோ இடம் பெறும் என உறுதி கூறுகிறேன்...

*******

இனி அன்பு நண்பர் யூர்கன் கிருகியர் கேட்ட 'தட்டிப்பார்த்தேன் தொட்டாங்குச்சி' பாடல் இன்றைய நேயர் விருப்பப் பாடலாக இடம்பெறுகிறது. (2010-ல் கேட்ட பாடல் இது... மன்னித்துக் கொள்ளுங்கள் தோழரே... நீண்ண்ண்ண்ண்ட தாமதத்திற்கு...)

1983-ல் டி. ராஜேந்தரின் இயக்கத்தில் வெளியான 'தங்கைக்கோர் கீதம்' படத்தில் இடம்பெற்ற சோகப் பாடல் இது. படத்தின் கதை என்னவென்றால், குடிகாரத்தந்தையால், அம்மா இறந்துவிட, பத்துவயது சிறுவனாக இருக்கும் டி. ராஜேந்தர் தன் தங்கையை ஒற்றை ஆளாக நின்று காப்பாற்றுகிறார். அப்படி வளர்க்கப்படும் தங்கைக்கு படாதபாடுபட்டு திருமணம் செய்து வைக்கிறார், திருமணமான பின்பு அண்ணனையே தூக்கி எறிகிறாள்... இருவரின் பாசமும் என்ன ஆயிற்று என்பதுதான் இப்படம். தங்கையாக நளினி நடித்திருப்பார்.
வரதட்சணை கொடுமையை மையமாக சித்தரித்து எடுக்கபட்ட படம் இது.

இப்படத்தின் பாடல்கள், இசை, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் அனைத்தும் டி. ராஜேந்தர் அவர்களேதான். இந்த பாடலைப்பாடியதும் அவரேதான்...

இனிமே பாட்டப் போடறேன் வாங்க...
இனிமையான பாட்டை கேக்கலாம் நீங்க...
கேட்டபின் சந்தோஷமா போங்க...

இப்பாடலை நேயர் விருப்பப் பாடலாக கேட்ட நண்பர் திரு. யூர்கன் கிருகியருக்கு எனது நன்றி. எங்களுக்குப் பிடித்த பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்.. உங்களுக்குப் பிடித்திருப்பின் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!


தட்டி பார்த்தேன் கொட்டாங்குச்சி..! | Muziboo


--------------------------------- 


யூர்கன் க்ருகியர் said...
அடுத்த முறை டி ராஜேந்தரின் "தட்டி பார்த்தேன் கொட்டாங்குச்சி" பாடலை போடவும்.
நன்றி

@ இந்த படத்தை தயாரித்தது டி. ராஜேந்தரின் மனைவி உஷா ராஜேந்தர். தஞ்சை சினி ஆர்ட்ஸ் என்ற பெயரில் தயாரித்து இருக்கிறார். இதற்குப் பிறகுதான் சிம்பு சினி ஆர்ட்ஸ் உருவானது.


@ கதாநாயகனாக டி. ராஜேந்தர் நடித்திருக்க, மற்றொரு நாயகனாக சிவகுமார் நடித்திருப்பார்.


@ நடிகர் சத்யராஜ், இந்த காலகட்டத்தில் வளரத்துடிக்கும் ஒரு நடிகராக இருந்திருக்கிறார். இப்படத்தில் இவருக்கு வில்லன் வேடம். டைட்டில் கார்டில் செந்தாமரை, வெண்ணிற ஆடை மூர்த்தி, இடிச்சபுளி செல்வராஜ் ஆகியோர் பெயர்களோடு சத்யராஜ் பெயரும் இதில் இடம்பெற்றிருக்கும்.


@ இப்படத்தில் 'தஞ்சாவூரு மேளம்... தாலி கட்டும் நேரம்...' என மற்றொரு சூப்பர்ஹிட் பாடலும் இடம்பெற்றிருக்கிறது.


@ இதில்  மற்றொரு சுவரசியம் என்னவென்றால், இப்படத்தில் அறிமுகமாகும் ஒரு நடிகருக்கு டைட்டில் கார்டில் தனியாக பேரை போட்டிருப்பார்கள்.

@ அந்த அறிமுக நடிகர், மறைந்த நகைச்சுவை நடிகர் திரு. நாகேஷ் அவர்களின் மகன் ஆனந்த்பாபு. இவர் அறிமுகமான படம் இதுதான்.




6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான பாடல்... சுவாரஸ்யமான தகவல்களுக்கும் நன்றி...

உங்களின் முயற்சி சிறக்கவும் வாழ்த்துக்கள்...

மோகனன் said...

நன்றி தோழரே... எப்போதும் போல்... தாங்களே முதல்வர் இங்கும்...

கார்த்திக் சரவணன் said...

வருக வருக...

தொடருங்கள்...

மோகனன் said...

நன்றி தோழரே...

தொடரத்தான் ஆசைப்படுகிறேன்... பார்க்கலாம்...

- George Navaretnarajah said...


Dear brother,

Could u pl. find and include the foll. song. Thank u.

Song : Sinnansiru kanmalar

sembavala wai malar sinthidum alage vaarayo Vannathamil manikkam...

arriro anbe arraro... Paappa un appavai parthalthan thookkamo sainthe madithanil sainthalthan thookkamo naali ulagu nallorkal kaiyil namum makilvom...

- George Navaretnarajah

மோகனன் said...

தங்களின் அன்புக்கு நன்றி தோழரே...

நிச்சயமாக இப்பாடலை எடுத்துத் தருகிறேன்...