ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday 4 March 2010

ஓராயிரம் பார்வையிலே..! - பழைய திரைப்படப் பாடல்



‘ஓராயிரம் பார்வையிலே… உன் பார்வையை நானறிவேன்..!’ மிகவும் அருமையான அக்காலத்து, சோகமான காதல் பாடல் இது..!

இப்பாடல் இடம்பெற்ற திரைப்படம்: வல்லவனுக்கு வல்லவன், 28.05.1965-ல் வெளியான இத் திரைப்படத்தின் இயக்குனர் சுந்தரம். இப்படத்தின் கதாநாயகன் யார் தெரியுமா..? அக்கால வில்லன் நடிகரான அசோகன்தான்.

இந்த படத்தை தயாரித்தது… அக்கால மிகப்பெரிய சினிமா கம்பெனியான ‘சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்’ (இது என்னுடைய மாவட்டம் என்பதில் எனக்கு தனிப்பெருமையும் உண்டு).

இப்பாடலின் வரிகளுக்கு சொந்தக்காரர் நம் கவியரசு கண்ணதாசன். இசையமைப்பு, திரு வேதா அவர்கள், பாடியவர்… வேற யார்... நம்முடைய டி.எம்.எஸ்தான்.

இப்பாடலின் வரிகளும், இசையும்… அதில் முகிழ்ந்து கரையும் டி.எம். சௌந்தரராஜனின் குரலும்… அத்தனையும் தமிழ்த் தேனமுது…

இப்பாடலில் காதலியின் நினைவை எப்படியெல்லாம் தேடுகிறார் கண்ணதாசன்..! காதலர்களின் இதய வலிகளுக்கு இப்பாடல் ஒரு சரியான மருந்து என்பேன் நான்..!

எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இப்பாடலும் ஓன்று. எனது குருவான திருவாளர். தி.ரா. கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும் பிடித்த பாடல் இது..!

கேட்டுப் பாருங்க…! தேவையெனில் இலவசமா பதிவிறக்கமும் செஞ்சிக்கோங்க..! உங்களுக்கு பிடித்த பாட்டை என்னிடம் கேளுங்க..!



 ஓராயிரம் பார்வையிலே..! | Upload Music

இப்பாடலின் திரைவடிவம் இதோ..!





2 comments:

கலா said...

வணக்கம் தமிழ்தோட்டம் {தளம்}வழியாக
உங்கள் தளங்களைப்
பார்வையிட்டேன் மிக அருமை பழைய
பாடல்களைக் கேட்கக் கூடியதாக உள்ளது
நன்றி தயவு செய்து{ நான் தேடும் பாடல்}
இருந்தால் உங்கள் இடுகையில் சேருங்கள்

இருவல்லவர்களில்....
திரு.செளந்தரராஜன்
பி.சுசிலா அவர்கள் பாடிய....

நான் மலரோடு தனியாக ஏன் ..
இங்கு வந்தேன்.......
நன்றி

மோகனன் said...

வணக்கம் கலா..

கண்டீப்பாக உங்கள் ஆவலை பூர்த்தி செய்கிறேன்... சற்று காலதாமதமாகலாம்... ஆனால் கண்டீப்பாக நிறைவேற்றுகிறேன்...