மிகவும் எளிமையான வரிகளும், சிறப்பான இசையும்... இப்பாடலை அக்காலத்தில் பட்டி தொட்டியெங்கும் பரப்பியது என்றால் அது மிகையில்லை. எனக்குப் பிடத்த பாடல்களில் இதுவும் ஒன்று..!
இதில் கதாநாயகியாக நடித்தவர், ஜி.வரலட்சுமி. அவருடைய தங்கையாக மைனாவதி நடித்தார் (இவர் நடிகை பண்டரிபாயின் தங்கை)... பெண்களின் ராஜாங்கம்தான் எப்படி இருக்கும். ஒரு நாட்டை பெணகளே ஆண்டு வந்தால் எப்படி இருக்கும் எனபதுதான் கதை. ஆண்கள் எல்லோரும் இப்படத்தில் வீட்டிலிருந்தபடி சமைப்பார்கள். பெண்கள் காவல் காக்க வீரர்களாகச் செல்வார்கள். (இந்த தகவல் மட்டும் சரிதானா என்பதை விபரமறிந்தவர்கள் பின்னூட்டத்தில் கூறினால் நலம்..)
இப்பாடல் உருவான விதம் ஒரு சோகம் கலந்த சுவரசியமாகும்... இதோ
ஒரு சமயம் பொதுவுடமை இயக்கத்திற்காக நாடகம் நடத்த சென்றிருந்த பட்டுக்கோட்டையார் நாடகத்திற்கு சரியான வசூல் இல்லாமல் தங்கள் குழுவினருடன் பசி, பட்டினியுமாக சென்னை திரும்ப பேருந்தில் ஏறினார். பேருந்தில் அமர்ந்திருந்த தங்கள் குழுவினர் அனைவரும் சோர்ந்த முகத்துடன் காணப்பட்டார்கள். அவர்கள் சோகத்தை மாற்றி அவர்களுக்கு குதூகலத்தை தர பட்டுக்கோட்டையார் அங்கேயே ஒரு பாடல் எழுதி, அதனை சத்தமாக பாட ஆரம்பித்தார். அந்த பாடலை கேட்டதும் நாடக குழுவினருக்கு பசி பறந்துவிட்டது. அனைவரும் குதூகலமாக கைகளை தட்டி பாட ஆரம்பித்தார்கள்.
'சின்னக்குட்டி நாத்தனா
சில்லறைய மாத்துனா
குன்னக்குடி போற வண்டியில்
குடும்பம் பூரா ஏத்துனா!'
இந்த பாடலை கேட்டு மகிழ்ந்து அவரது குழுவினர், 'அண்ணே பாட்டு ரொம்ப அருமையா இருக்கு. இந்தப் பாட்ட அப்படியே ஒரு படத்துக்கு குடுங்கண்ணே'' என்று கேட்டுக் கொண்டார்கள். அதன்படியே அந்தப் பாடலை மாடர்ன்ஸ் தியேட்டர் தயாரித்த 'ஆரவல்லி' படத்திற்கு தந்துவிட்டார் பட்டுக்கோட்டையார்.
2 comments:
குலேபகவாலி என்ற படத்தில் பகாவலி என்ற அரசி ஆளும் நாட்டிலே
ஆண்கள் வீட்டிலேயும் பெண்கள் நாட்டிலேயும் பணி புரிவர்
வாங்க தோழரே...
தாங்கள் சொல்வது உண்மைதான்... என்னுடைய சிறுவயதில் பார்த்த படம் இது...
அடிக்கடி கேட்க வாங்க..!
Post a Comment