ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, 5 April 2010

ஒண்ணாம் படியெடுத்து..! - விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனின் கிராமியப் பாடல்


கிராமியப் பாடல்களை பட்டி தொட்டியெங்கும் பரப்பியவர்களில் திருமதி. விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் குழுவினருக்கும் பங்கு உண்டு...

அக்குழுவினரின் துள்ளலிசைப் பாடல் வரிசையில் இதோ ஒரு பாடல்... 'ஒண்ணாம் படியெடுத்து... ஒசந்த பூவாம்..' 
 
ஒண்ணாம் படியிலிருந்து மெல்லிசையாக ஆரம்பிக்கும் இப்பாடல்..ஓவ்வொரு படியாக ஏறியபடியே...துள்ளலிசையாக மாறும்... இப்பாடலை
கேட்டாலே போதும்... தானாக உங்கள் மனமும் உடலும் துள்ளாட்டாம் போடும்...

என இப்பாடலில் நையாண்டி மேளம், உருமி மேளம் போன்ற கிராமிய இசைக் கருவிகள் தனி ஆவர்த்தனம் செய்திருப்பது இதன் மற்றொரு சிறப்பம்சமாகும்...

திருமதி விஜயலட்சுமியும், அவரது குழுவினரும் சேர்ந்து... தமிழக கிராமத்து, காவல் தெய்வங்களின் பேர்களை ஒவ்வொரு படியிலும் சொல்லியபடியே பாடி அசத்துவார்கள்... இடையே வரும் பெண்களின் குலவை சத்தம் நம்மை உசுப்பேற்றும்... சிலிர்ப்பூட்டும்..!

அன்பான புயல் அவர்களுக்கு...

இப்பாடலை தாங்கள் என்னிடம் கேட்டு இரு மாதங்களாகி விட்டது.. எனது தேடலில்தான் இவ்வளவு தாமதம் நண்பரே... இதில் கொடுமை என்னவெனில்.. எனது சேமிப்பில் ஏறகனவே இப்பாடல் இருந்திருக்கிறது.. இது தெரியாமல் எங்கெங்கோ (இரு மாதங்களாக) தேடித் தொலைத்திருக்கிறேன்... என் பிழை பொருட்டு எனை மன்னிக்க வேண்டுகிறேன்...

இவருடன்  சேர்ந்து நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருப்பின் இலவசமாய் பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!


ஒண்ணாம் படி எடுத்து..! - கிராமியப் பாடல் | Music Upload
 
 
நன்றி: திருமதி. விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் & குழுவினர்
----------
Blogger FloraiPuyal said...
விஜயலட்சுமியின் ஒண்ணாம் படியெடுத்து என்று தொடங்கும் பாடல் கிடைக்குமா? மற்றும் வெண்பாவிலமைந்த திரைப்பாடல் ஏதும் இருக்கிறதா? நன்றி.
23 January 2010 03:30




6 comments:

soorya said...

அன்பு நண்பருக்கு,
அவர்கள் பாடிய எல்லாமுமே எனக்கு வேண்டும்.
நான் ஓர் ஈழத்தமிழன், நீண்டகாலமாக டென்மார்க்கில் வாழ்கிறேன்.
நான் அவர்களின் பரம இரசிகன்.
...
நீங்கள் அனுப்புவதாயின்
பணத்தை எங்கே கட்டுவதென்று சொல்க.
.............

எனது தொடர்புகள்,
sooryavinothan@gmail.com
adha4@yahoo.com
எனது அன்பையும் வாழ்த்துகளையும் சொல்க அவர்களுக்கு.
நன்றியுடன்.
சூர்யா.

மோகனன் said...

அன்புத் தோழருக்கு...

அன்பனின் வணக்கம். நலம், நலமே விழைய ஆவல், தாங்கள் எனது தளத்திற்கு வந்து பாடலை ரசித்தது மட்டுமின்றி... அது குறித்து தகவல்களையும் கேட்டமைக்கு மிக்க நன்றி..!

தாங்கள் வேண்டுகோளை கட்டாயம் நிறைவேற்றுகிறேன் தோழரே...

என்னைத் தொடர்பு கொள்ள...: moganan@gmail.com

Floraipuyal said...

அன்பிற்குரிய மோகனன்,
இப்பாடலை வெகுகாலமாகத் தேடிவருகிறேன். என் வேண்டுகோளை ஏற்று இப்பாடலைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. உங்கள் பணி சிறக்கட்டும்.

மோகனன் said...

அன்பான புயல் அவர்களுக்கு..!

இப்பாடலை தாமதமாக வழங்கியமைக்கு என்னை மன்னிக்க வேண்டுகிறேன்...

தங்களுகாக இப்பாடலை பதிவிட்டேன்... மூன்று மாதங்களாயிற்றே... எங்கே தாங்கள் இப்பதிவை பார்க்காமல் இருந்து விடுவீர்களோ என பயந்து கொண்டிருந்தேன்...

தாங்கள் இப்பதிவை பார்த்த, கேட்டு ரசித்தமைக்கு மிக்க நன்றி...

அடிக்கடி கேட்க வாங்க..!

Anonymous said...

nice song, thanks

regards
senthil

மோகனன் said...

நன்றி செந்தில்