அப்பாடல்தான் இன்று நான் பதிவிலிடப் போவது... "எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்? பணத்தை எங்கே தேடுவேன்?"
இப்பாடலை பாடியதும் இவர்தான்... இசையமைப்பு யாரென்று கேட்கிறீர்களா..? இசைச் சக்ரவர்த்திகளான எம்.எஸ்.விஸ்வநாதன் & ராமமூர்த்தி ஆகியோர்...
இப்பாடலின் வரிகளத்துனையும் வைரங்களாகும்... உதாதரணத்திற்கு
அரசியல்வாதிகள் முதல் அரசு உயரதிகாரிகள் வரை கறுப்புப் பணம் வைத்திருப்பதை...
கருப்பு மார்க்கெட்டில் கலங்குகின்றாயோ?
கஞ்சன் கையிலே சிக்கிக் கொண்டாயோ? - என்றும்போலிச்சாமியார்களின் பித்தலாட்டங்களை
சாமிகள் அணிகளில் சரண்புகுந்தாயோ?
சந்நியாசி கோலத்தோடு உலவுகின்றாயோ? - என்றும்ஏழைகளிடம் இல்லாமல்... பணக்காரார்களிடம் இருப்பதையும்... தேர்தலில் விளையாடுவதையும்...
இருப்புப் பெட்டிகளில் இருக்கின்றாயோ?
இரக்கமுள்ளவரிடம் இருக்காத பணந்தனை
எங்கே தேடுவேன் பணத்தை
தேர்தலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ?
தேக சுகத்துக்காக ஊட்டி சென்றாயோ? - என அப்பட்டமாக தோலுரித்துக் காட்டுவார்... இந்த வரிகள் இன்றைக்கு மட்டுமல்ல... என்றைக்கும் பொருந்த்மல்லவா..?(இப்படத்தின் கதையை எழுதியவர் கலைஞர் கருணாநிதி. இப்படத்தில் நடித்தவர்கள்: சிவாஜி கணேசன், பத்மினி, என்.எஸ். கிருஷ்ணன் மற்றும் டி.ஏ.மதுரம் ஆகியோர்...)
--
அன்பு நண்பர் ஆனந்தபாலன் அவர்களே... உங்கள் அவாவை பூர்த்தி செய்ய வருகிறது இப்பாடல்...
அவரோடு சேர்ந்து நீங்களும் இப்பாடலை கேட்டு மகிழுங்கள். வேண்டுமெனில் இலவசமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்..! உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்..!
2 comments:
நண்பரே எப்படி பிளாக்கில் music player கொண்டுவருவது என்பதை தெரிவிக்கவும்.
எனது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்தால் நன்றாக இருக்கும்
நன்றி!
gingeeindian@gmail.com
அன்பு நண்பரே...
Muziboo எனும் தளம் உள்ளது. இதில் சென்று உங்களுக்கு என்று ஒரு பயனர் கணக்கை உருவாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் வேண்டிய பாடலை பதிவேற்றம் செய்தால், அதற்கென தனிநிரல் ஒன்றை இந்த தளம் இரண்டு வரிகளில் தரும். அதை காப்பி செய்து உங்கள் பிளாக்கரில் பேஸ்ட் செய்துவிட்டால் போதும். வந்துவிடும்...
நன்றி..!
Post a Comment