ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday 29 June 2010

பொதுவாக என் மனசு தங்கம்..! - திரைப்படப் பாடல்..!

'சூப்பர் ஸ்டார்' ரஜினி காந்த் நடிப்பில் 1980-ல் வெளியான முரட்டுக்காளை படத்தில் இடம்பெற்ற துள்ளலிசைப் பாடல்தான் 'பொதுவாக என் மனசு தங்கம்.. ஒரு போட்டியின்னு வந்து விட்டா சிங்கம்...' என்ற பாடல்தான் இன்று நான் பதிவிலிடுவது...

இப்பாடலின் வரிகளை எழுதியவர் திரு.  பஞ்சு அருணாச்சலம், இசையமைப்பு நமது இசைஞானி இளையராஜா. குரல் கொடுத்து உயிரூட்டியவர் மலேசியா வாசுதேவன் அவர்கள். இபட்டத்தை இயக்கியவர் ரஜினியின் பிரதான இயக்குனரான எஸ்.பி.முத்துராமன்.

இப்படம் ரஜினியின் 64வது படம், தமிழ்த் திரையுலகில் அவருக்கு மாபெரும் திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்த, மாபெரும் வெற்றிப் படம். இப்படத்தில் இடம்பெற்ற அத்தனைப் பாடல்களும் அட்டகாசமான பாடல்கள்.

இருப்பினும் கிராமத்து இசைக்கருவிகளான உருமி மேளம், நையாண்டி மேளம், நாதஸ்வரம் என அனைத்தும் கலந்து, துள்ளிவரும் துள்ளலிசையோடு வரும் பாடல் இது. இப்பாடல் மனதிற்கு உற்சாகத்தைத் தரும் என்பதால்  எனக்கு மிகவும் பிடித்த பாடலாகும்.

எனக்குப் பிடித்த இப்பாடலை உங்களுக்குப் பிடித்திருந்தால் நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருந்தால் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..! மேலும், உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்..! இயன்றவரை நான் தருகிறேன்..!


பொதுவாக என் மனசு தங்கம்..! | Musicians Available



6 comments:

யூர்கன் க்ருகியர் said...

super thala !!

உங்க மனசும் தங்கம் தான் !

மோகனன் said...

நன்றி தோழரே...

அடிக்கடி கேட்க வாங்க..!

Kalai said...

Hi,

Can you please upload
'Chinna pappa, enga chella pappa
Sonna pechcha kettadhan nalla pappa' song for my daughter ?

Thanks
Kalai

மோகனன் said...

அன்பான தோழி கலை அரசி அவர்களே...

தங்களின் விருப்பப் பாடலை விரைவில் நிறைவேற்றி வைக்கிறேன்... அதுவரை காத்திருக்கவும்...

உங்கள் மகளுக்காக அடிக்கடி கேட்க வாங்க..!

nakkeeran said...

இனிய தமிழ்ப் பாடல்கள்
வணக்கம்
படம் பெயர் தெரியவில்லை ராதாரவி, சரிதா , நடித்து திரு விஜயகிருக்ஷ்ணரஜ் இயகியபடம்,”தூண்டா மணி விளக்கு தூண்டாம நிண்ணெரியிம் காத்துபட்டு கரையாது கரிபடிந்தும் கருக்காது என் துக்கமதை வெளிய சொன்னா மங்கிவிடும் மங்கிவிடும்” இந்த பாடலை பதிவு செயயவும். இளையராஜா இசையில் சுகமான பாட்டு ஓலிபரப்பவும். நட்புடன் நக்கீரன்

மோகனன் said...

வருக நண்பரே...

தங்களின் வேண்டுகோளை விரைவில் பூர்த்தி செய்ய முயல்கிறேன்... நன்றி..!