ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday 14 July 2010

வைகைக் கரை காற்றே நில்லு..! - திரைப்படப் பாடல் (நேயர் விருப்பம்)

'உயிருள்ளவரை உஷா' என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற 'வைகைக் கரை காற்றே நில்லு..! வஞ்சிதனைப் பார்த்தா சொல்லு..!' என்ற பாடல் இன்றைய நேயர் விருப்பப் பாடலாக இடம்பெறுகிறது.

1984-ல் வெளியானது இப்படம். இப்பாடலுக்கு இசை டி. ராஜேந்தர். குரல் கொடுத்தவர் எனக்கு மிகவும் பிடித்த பாடகரான கானதேவன் கே.ஜே. யேசுதாஸ் அவர்கள்...

இப்பாடலை இயற்றியதும், இசையமைத்ததும் யார் தெரியுமா..? இப்படத்தின் இயக்குனரான டி. ராஜேந்தரேதான். காதலியைக் காணமுடியமல் தவிக்கும் தவிப்பை வரிகளிலே வடித்திருப்பார் டி. ராஜேந்தர்... அதற்கு மிகவும் அருமையான முறையில் இசையினையும் அமைத்திருப்பார்...

''நிலவினை மேகம் வானில் மறைக்க
அவளினை யாரோ வீட்டில் தடுக்க
மேகமது விலகாதோ...
சோகமது நீங்காதோ...
காற்றே... பூங்காற்றே...
என் கண்மணி அவளைக்
கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு
..''

'வைகைக் கரை காற்றே நில்லு..! வஞ்சிதனைப் பார்த்தா சொல்லு..!' என்ற பாடலைக் கேட்ட அன்பு நண்பர் கிறுக்கல் கிறுக்கனுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..!

அவரோடு சேர்ந்து நீங்களும் இப்பாடலை கேட்டு மகிழுங்கள். வேண்டுமெனில் இலவசமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்..! உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்..!



வைகைக் கரை காற்றே நில்லு..! | Music Codes


---------------------------------
கிறுக்கல் கிறுக்கன் said...
பாடலுக்கு நன்றி.

அடுத்து நேயர் விருப்பத்தில் “வைகைக் கரை காற்றே நில்லு, வஞ்சிதனை பார்த்தால் சொல்லு” என்னும் வரிகள் வரும் பாடல்.

நண்பரே இந்த நேயர் விருப்பம் இன்னும் வரும்...

2 June 2010 19:57




8 comments:

யூர்கன் க்ருகியர் said...

பகிர்வுக்கு நன்றி நண்பரே !

யூர்கன் க்ருகியர் said...

அடுத்த முறை டி ராஜேந்தரின் "தட்டி பார்த்தேன் கொட்டாங்குச்சி" பாடலை போடவும்.
நன்றி

க‌ரிச‌ல்கார‌ன் said...

ம‌ற‌க்க‌ முடியாத‌ பாட‌ல்

மோகனன் said...

வாங்க யூர்கன் க்ருகியர்...

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.. அடிக்கடி கேட்க வாங்க...

மோகனன் said...

வாங்க யூர்கன் க்ருகியர்...

உங்க விருப்பப் பாடலை விரைவில் தருகிறேன்...

மோகனன் said...

வாங்க கரிசல்காரரே...

ரசித்தமைக்கு மிக்க நன்றி...

அடிக்கடி கேட்க வாங்க...

நிறம் மாறாத உறவுகள் - தொலைக்காட்சி தொடர் said...

நான் விரும்பும் பாடல்களில் இதுவும் ஒன்று... நன்றி..

மோகனன் said...

மகிழ்ச்சி தோழரே...