தர்மதுரை என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற அட்டகாசமான துள்ளலிசை பாடல்தான் இந்த "சந்தைக்கி வந்த கிளி..! சாடை சொல்லி பேசுதடி" பாடல்.
1991-ல் வெளிவந்த இத்திரைப்படத்தை இயக்கியவர் ராஜசேகர். (இவர் மலையூர் மம்பட்டியான், மாவீரன், காக்கிச் சட்டை, விக்ரம், படிக்காதவன், தம்பிக்கு எந்த ஊரு.. போன்ற படங்களை இயக்கியவர். தர்மதுரை படத்தின் நூறாவது நாளன்று மாரடைப்பால் இவர் அமரராகிவிட்டார்)
இப்பாடலுக்கு இசையமைத்தவர் நம் இசைஞானி இளையராஜா அவர்கள். பாடியவர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் எஸ்.ஜானகி ஆகியோர். இப்பாடலை எழுதியவர் யார் எனத் தெரியவில்லை. ஆனால் இப்படத்திற்கு பாடல் எழுதியவர்கள் இரண்டு பேர். பஞ்சு அருணாசலம், கங்கை அமரன் ஆகியோர். சரியான தகவல் இருப்பின் கொடுத்து உதவும்...
இப்பாடலில் இளையராஜாவின் துள்ளலிசை அட்டகாசமாக இருக்கும்... அதற்கு இணையாக பாடகர்களும் இணைந்து கலக்கியிருப்பார்கள்...
எனக்குப் பிடித்த இப்பாடலை நீங்களும் கேட்டுப் பாருங்க... பிடிச்சிருந்தா இலவசமா பதிவிறக்கமும் செஞ்சிக்கோங்க..! உங்களுக்குப் பிடித்த பாடலை பின்னூட்டத்துல கேளுங்க...
4 comments:
எனக்கும் மிகமிகப் பிடித்த பாடல் இது!
குத்துப் பாட்டு என்றெல்லாம் சும்மா சொல்லிவிட முடியாதபடி அற்புதமான மெட்டும் அட்டகாசமான மத்தளம் இசையும் இந்தப் பாட்டை எப்போது கேட்டாலும் உற்சாகமடைய வைக்கும். A classic piece of Ilaiyaraja!
சுட்டிக்கு மிக்க நன்றி!
அட! நீங்கள் நிறைய பாடல்கள் பற்றிப் பெட்டகமே வைத்திருக்கிறீர்களே! நிதானமாக வந்து பார்க்க வேண்டும்.
வாங்க தீபா...
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது... இதை நான் குத்துப் பாட்டு என்று கொச்சபடுத்தவில்லை... இது துள்ளலிசைப் பாடல் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன்..!
நம்மையறியாமலேயே நம்மை துள்ளாட்டம் போடவைக்கும் பாடல்கள்தான் துள்ளலிசைப் பாடல்கள் என குறிப்பிடுகிறேன்..!
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
வாங்க தீபமே...
பெட்டகமெல்லாம் கிடையாதுங்க.. எனக்குப் பிடிச்சத.. உங்களுக்கும் கேட்கத் தரேன்... அவ்வளவுதான்... இதுக்கு போய் பெட்டகமெனெல்லாம் பெரிய வார்த்தை பேசாதீங்க..!
இந்த வீட்டுக்கு நீங்க எப்ப வேணும்னாலும் வரலாம்..!
அடிக்கடி கேட்க வாங்க..!
Post a Comment