ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, 28 January 2011

நாலு பேருக்கு நன்றி..! - பழைய திரைப்படப் பாடல்

'நாலு பேருக்கு நன்றி... அந்த நாலு பேருக்கு நன்றி...' என்ற பாடலை என் விருப்பப் பாடலாக இன்று பதிவிலிடுகிறேன்...

1972-ல் வெளிவந்த சங்கே முழங்கு என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற தத்துவப் பாடல்தான் இந்தப் பாடல். ப.நீலகண்டன் இயக்கத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படம் இது.

இந்த தத்துவப் பாடலை கவியரசர் கண்ணதாசன் எழுத, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி அவர்கள் இசையமைக்க, டி.எம்.ஸ் தன் குரல் வழியே இப்பாடலுக்கு உயிரூட்டினார் என்றால் அது மிகையாகாது.

நன்றி யாருக்குச் சொல்வோம்... அதை எளிதாக சந்த நயத்தோடு கண்ணதாசன் விவரிக்கிறார் இப்பாடலில்.. ஆதலால்தான் இவரது பாடல்கள் என்றும் அமரத்துவம் பெற்ற பாடல்களாக விளங்குகிறது...

உதாரணத்திற்கு

"ஆற்று வெள்ளம் தானே ஓடும்
ஆசை வெள்ளம் சொந்தம் தேடும்
சொந்தம் ஏதும் இல்லை என்றால்
அந்த நேரம் நால்வர் வேண்டும்
நாலு பேருக்கு நன்றி..!" என்ற வரிகளைக் கவனியுங்கள்...


யாருமில்லாத அனாதையாக இறந்து விட்டால் அவரை எடுத்துச் செல்ல நால்வர் வேண்டும் அவருக்கு நன்றி சொல்கிறார்...


"இன்பத்தையே பங்கு வைத்தால்
புன்னகை சொல்வது நன்றி
துன்பத்திலே துணை வந்தால்
கண்ணீர் சொல்வது நன்றி...
" - நன்றியை நாம் சொல்வதை சந்த நயத்தோடு எவ்வளவு அழகாக இங்கே கவியரசர் எடுத்துக் 
காட்டுகிறார்...


எனக்குப் பிடித்த பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருப்பின் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!



நாலு பேருக்கு நன்றி..! | Online Karaoke



இப்பாடல் குறித்த சிறப்புத் தகவல்

இப்பாடலில் வரும் கடைசி சரணத்தை கவியரசர் பின்வருமாறு எழுதியிருந்தார்


'வாழும் போது வருவோர்க்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி சொல்வோம்.
போகும் போது வார்த்தை இல்லை...
போகும் முன்னே சொல்லி வைப்போம்..!

இந்த கடைசி இரு வரிகளை மட்டும் மாற்றிக் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று எம்.ஜி.ஆர் விரும்பினார். அதைக் கண்ணதாசனிடமும் தெரிவித்தார்.

சரி... மாற்றித் தருகிறேன் என்று சொன்ன கவியரசர்

'வாழும் போது வருவோர்க்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி சொல்வோம்.
வார்த்தை இன்றிப் போகும் போது...
மௌனத்தாலே நன்றி சொல்வோம்..!'

என்று மாற்றிக் கொடுத்தார். இதைப் பார்த்த பிறகுதான் எம்.ஜி.ஆருடைய முகத்தில் திருப்திப் புன்னகை பரவியது. காரணம் என்னவெனில் தனது பாடல்களில் வலிமை மிகு எதிர்மறையான வார்த்தைகள் இடம்பெறக் கூடாது என்பதில் மக்கள் திலகம் உறுதியாக இருந்ததுதான்.

கவிஞர்கள் யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் தான் எழுதியதை மாற்றமாட்டார்கள். ஆனால் அதை மாபெரும் கவியரசர் இயைந்து மாற்றினார் என்றால் அவரது பெருந்தன்மைக்கு அளவில்லை..!




6 comments:

தமிழன்பன் said...

இந்தப் பாடல் எம்.ஜி.ஆர் இன் வாழ்க்கையுடன் எந்த அளவிற்குப் பொருந்திப்போயுள்ளது!!!!
தன் கடைசிக் காலத்தில் குரலை இழந்து வாய்பேச முடியாது கஸ்டப்பட்டதை தமிழ் உலகம் அறியும்.....

மோகனன் said...

ஆம் தமிழன்பரே...

தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை... ஆயினும் தனது தளராத முயற்சியினால் திரையுலகில் மட்டுமின்றி, அரசியல் உலகிலும் தன் முத்திரையை பலமாக பதிக்க ஆர்ம்பித்தார் என்றால் அது மிகையல்ல..!

{அப்பாடா இந்தப் பதிவில் எந்த எழுத்துப் பிழையும் இல்லை)

ADMIN said...

வாழ்க்கைத் த்த்துவத்தை வகையாய்,, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப்போல கூறியிருக்கும் பாடல்.. உணர்ந்தவர்களுக்கு தெரியும்.. பாடலின் ஆழம்.. மிகத்தெளிவாக பதிவிட்டிருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள், நன்றி!

மோகனன் said...

வாங்க நண்பரே...

தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மைதான்...

அடிக்கடி கேட்க வாங்க..!

தமிழன்பன் said...

//{அப்பாடா இந்தப் பதிவில் எந்த எழுத்துப் பிழையும் இல்லை)//

உதவி ஆசிரியருக்கே தமிழாசிரியராகக் கடமையாற்றியதற்குக் கைமேல் பலன் கிடைத்துள்ளது.
மிக்க மகிழ்ச்சி.
தொடருங்கள். தொடர்வேன்....

மோகனன் said...

வாங்க தமிழன்பன்..,

தாங்களின் மகழ்ச்சிக்கு நானும் ஒரு காரணமாயிருக்கிறேன் என்பதுல் எனக்குப் பெருமகிழ்ச்சி...

அடிக்கடி கேட்க வாங்க..!