ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday 8 February 2011

ஆசையே அலை போலே..! - பழைய திரைப்படப் பாடல் (நேயர் விருப்பம்)



ஆசையே அலை போலே நாமெலாம் அதன் மேலே..! என்ற அற்புதமான பாடலை, இன்று நேயர் விருப்பப் பாடலாக பதிவிலிடுகிறேன்..!


ஜனவரி
14, 1958, தைத் திருநாளன்று ஏ.கே.வேலன் கதை, திரைக்கதை, இயக்கம் தயாரிப்பில் வெளியான தை பிறந்தால் வழி பிறக்கும்திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலாகும்.

கவியரசர் கண்ணதாசனில் வைர வரிகளுக்கு
, திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவனின் அட்டகாசமான இசையமைப்பில், திருச்சி லோகநாதன் அவர்கள் பாடிய பாடலிது...

இப்பாடலில் மனிதன் வாழ்வை இரண்டே சரணங்களில் அடக்கி விடுவார் கவிஞர். முதல் சரணத்தில் பருவ வயதும்
, இரண்டாம் சரணத்தில் முதுமை வாழ்வும் பற்றி எளிதாக விளக்கி விடுவார்... வாழ்க்கையில் எது வரவு எது செலவு என்பதை மூன்றாவது சரணத்தில் சொல்லி விடுவார்... அந்த வரிகள்....

வாழ்வில் துன்பம் வரவு
சுகம் செலவு இருப்பது கனவு!
காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்?’

இப்பாடலை நேயர் விருப்பப் பாடலாகக் கேட்ட பழனிவேல் கிருஷ்ணசாமி அவர்களுக்கு எனது நன்றிகள். இப்பாடல் எனக்கும் பிடித்த பாடலாகும். உங்களுக்குப் பிடித்திருப்பின் இப்பாடலை நீங்கள் இலவசமாக தரவிறக்கமும் செய்து கொள்ளலாம்.



ஆசையே அலை போலே..! | Upload Music

------------

Anonymous Palanivelu Krishnasamy said...

Mr. Moganan,

I was able to visit your blogspot because of Ananda Vikatan. I find your blogspot interesting.

I am ar ardent fan of old songs. Recently, while travelling by a bus, I happened to hear a song sung by SP Balasubramaniam. That impressed me very much.


I tried in the net to find and get it downloaded but in vain. Will you please get it for me?
The song is AASAIYE ALAI POLE NAMELLAM ADHAN MELE (Resung of the old popular song)
Thank you.

K. Palanivelu
10 January 2011 10:41
-----------------------------

இனி சுவாரசிய செய்திகள்

@அக்காலத்தில் கோடம்பாக்கத்தில் ரயில்வே கிராஸிங் மட்டுமே இருந்தது. மேம்பாலம் கிடையாது. ரயில் வந்து செல்லும் வரை இருபுறமும் இரயில்வே கேட்டை பூட்டி விடுவார்கள். சினிமா பிரபலங்கள் எல்லோரும் அந்த கேட்டில் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருப்பார்கள். அப்படி ஒரு முறை ரயில்வே க்ராஸிங் சிக்னலுக்காக, கண்ணதாசன் காத்திருந்த போது, இப்பாடலை சிகரெட் பாக்கெட்டில் எழுதி வைத்தாராம். சிகரெட் பெட்டியில் சிந்திய வரிகள்... பின்னாளில் தமிழக மக்களின் செவிகளிலும் தேனிசையாய் சிந்தியது இப்பாடல்.

@இப்பாடலின் இசையமைப்பாளர் திரை இசைத் திலகம். கே.வி.மகாதேவன் அவர்கள்... இவர் பாட்டுக்குத்தான் மெட்டு போடுவார் ! பாட்டு எழுதும் கவிஞர்களை வதைக்காமல், அவர்கள் எழுதிக் கொடுத்ததை அப்படியே பயன் படுத்துவார் ! அப்படி அந்த பாட்டு மெட்டுக்குள் அடங்கவில்லை என்றால் " விருத்தம் " ஆக்கி பாட்டின் சுவையைக் கூட்டிவிடுவார் !

@1940 களின் ஆரம்பத்தில் – கே.வி. மகாதேவன் அவர்கள் சேலம் ‘மாடர்ன் தியேடர்ஸ்
-ல் உதவி இசை அமைப்பாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார்!

அப்போது அதிபர் டி.ஆர். சுந்தரம் அவர்கள் ஓர் இளைஞனை மகாதேவனிடம் அழைத்து சென்று "மகாதேவா
, இவருக்கு குரல் வளம் எப்படி இருக்கின்றது என்பதை பரீட்ச்சை செய்து அனுப்பு!" என்றார் !

மகாதேவனும் அந்த இளைஞன் குரலை சோதனை செய்து பின்னர் வரச் சொல்லிப் பணித்தார் ! அவர் அங்கேயே தயங்கி நிற்கவே " ஊருக்குப் போவதற்கு பணம் இருக்கா ? " என்று அவரைப் பார்த்து கேட்டார் ! அந்த இளைஞன் உதட்டைப் பிதுக்கவே , மகாதேவன் அந்த இளைஞனுக்கு 2 .00 ரூபாய் பணம் கொடுத்து, கூடவே ஒரு சட்டையும் கொடுத்து அனுப்பினார் !

அந்த இளைஞன் யார் தெரியுமா
?  - அவர்தான் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் !

@திருச்சி லோகநாதன் சம்பள விஷயத்தில் கறார் பேர்வழி, நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த தூக்குத் தூக்கி திரைப்படத்தில் இடம்பெற்ற 8 பாடல்களையும் பாட வாய்ப்பு வந்தபோது ஒரு பாடலுக்கு ரூ 500 சம்பளம் கேட்டார், தயாரிப்பாளர்கள் சம்பளத்தை குறைக்கச் சொல்ல, ‘மதுரையிலிருந்து புதுசா ஒருத்தர் வந்திருக்கார், அவரை பாடச் சொல்லுங்க என்று கூறிவிட்டார். திருச்சி லோகநாதன் சுட்டிக்காட்டிய அந்த மதுரைக்காரர்தான் தூக்குத் தூக்கி படத்தில் பாடினார், அவர்தான் நம்ம டி. எம். செளந்தரராஜன்.




12 comments:

யூர்கன் க்ருகியர் said...

சுவராசியமான செய்திகள் ரசிக்கும் படி உள்ளது ... மற்றபடி பாடல் வழக்கம் போல களை கட்டுகிறது ..

தமிழன்பன் said...

பல தடவைகள் விரும்பிக் கேட்ட மிகச்சிறந்த பாடல்.
ஆயினும் அதன் பின்னணியில் வழங்கிய தகவல்கள் பல, புதிது!!!...

tamilan said...

சுட்டியை சொடுக்கி படிக்கவும்.

=====>
நடிகர் விவேக்கும் சாமி சாணிசித்தரும்.
<===


..

மோகனன் said...

வாங்க யூர்கன்...

களை கட்டுவது அக்காலப் பாடல்கள்தான்
கதை சொல்வதும் அக்காலம்தான்...
அதை தேடித் தருவது மட்டுமே என் வேலை...

அடிக்கடி கேட்க வாங்க..!

மோகனன் said...

வாங்க தமிழன்பன்...

இப்பதிவினை இட்டபிறகு சில எழுத்துப் பிழைகள் இருந்தன... அதைப் பார்த்ததும் எனக்கு உங்கள் சாபகம்தான்... திருத்திய பிறகே நிம்மதியடைந்தேன்...

கேளாத தகவல்கள் என்றும் புதியவையே...

அடிக்கடி கேட்க வாங்க...

மோகனன் said...

வருகைக்கு மிக்க நன்றி தமிழன்

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

தமிழன்பன் said...

//மோகனன் said...

வாங்க யூர்கன்...

களை கட்டுவது அக்காலப் பாடல்கள்தான்
கதை சொல்வதும் அக்காலம்தான்...//

இதில் வரும் அக்காலம் என்னும் சொற் பதத்திற்குத் நீங்கள் கொண்டுள்ள காலவரையறை எது என அறிய ஆவலாக இருக்கின்றேன்...

மோகனன் said...

அன்பான தமிழன்பருக்கு...

1976 வரை அக்காலம் என்றும்
1977-1996 வரை இடைக்காலம் என்றும்
1996- இப்போது வரை உள்ள காலத்தை புதிய காலம் என்றும் பிரித்து வைப்போமா...

ஆட்சேபணை ஏதேனும் இருக்கிறதா...

தமிழன்பன் said...

பதிலுக்கு நன்றி!
பின்பற்றுவோம்....

Dhams said...

Mr. Moganan,

I was able to visit your blogspot because of Ananda Vikatan. I find your blogspot interesting.

I like to hear old songs .plz send me the song "SINGARA VELANE DEVA" from KONJUM SALANGAI and "THUKAMUM KANKALAI THALUVATUMEY " SONG.

THANK YOU

மோகனன் said...

நன்றி... தமிழன்பன்...!

அடிக்கடி கேட்க வாங்க..!

மோகனன் said...

நன்றி திரு தாம்ஸ்...

நீங்கள் கேட்ட பாடல் எனக்கும் பிடித்த பாடலாகும்... விரைவில் இப்பாடலை வலையேற்றுகிறேன்... விரைவில் எதிர் பாருங்கள்...

அடிக்கடி கேட்க வாங்க..!