ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday 21 February 2011

பூங்காத்து திரும்புமா...? - மலேசியா வாசுதேவன் சிறப்புப் பதிவு..!


'பூங்காத்து திரும்புமா..? என் பாட்டை விரும்புமா..?' என்ற பாடலை மலேசியா வாசுதேவன் அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இப்பாடலை இன்று பதிவிலிடுகிறேன்...

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் இயக்கத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பில் 1985-ல் வெளி வந்த திரைப்படம் 'முதல் மரியாதை'

இப்படத்தில் இடம்பெற்ற அத்தனைப் பாடல்களும் முத்துக்கள் என்றே சொல்லலாம். அதில் சிறப்புப் பாடலாக இப்பாடலைக் கொள்ளலாம்... இப்பாடல் தேசிய விருது பெற்ற பாடலாகும். (வைரமுத்துவிற்கு கிடைத்தது)

வைரமுத்துவின் வரிகளுக்கு, இசைஞானி இளையராஜா இசையமைக்க, 'அமரர்' மலேசியா வாசுதேவன் குரல் வழியே உயிர் கொடுத்திருப்பார்... நெஞ்சை உருக்கும் படி இருக்கும் அவரது குரல்...

நேற்றைய தினம் (20.02.2011) மறைந்த திரு. மலேசியா வாசுதேவன் அவர்களுக்கு இனிய தமிழ்ப்பாடல்கள் தளம் சார்பிலும், இதன் வாசகர்கள் சார்பிலும் இப்பாடல் மூலம் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறேன். அவரது ஆன்மா சாந்தி பெறட்டும்...

இனி இந்த இசைப் பூங்காத்து திரும்புமா..?


பூங்காத்து திரும்புமா..? | Upload Music

மலேசியா வாசுதேவனைப் பற்றி சில வரிகள்

@ மலையாள பூமியை பூர்வீகமாக கொண்டவர், மலேசியாவில் பிறந்தவர். மலேசிய நாடகங்களில் நடித்தவர், சினிமா மேல் பற்று கொண்டு சென்னை வந்தவர், இளையராஜாவின் "பாவலர் பிரதர்ஸ் குழுவில் இணைந்து பின் சினிமாத் துறையில் காலடி வைத்தவர். 8000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். 85 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஜி.கே.வெங்கடேஷ் இசையமைப்பில் "பொல்லாத உலகில் ஒரு போராட்டம்' என்ற படத்தில் "பாலு விக்கிற பத்தம்மா..." என்ற பாடல் மூலம் திரையுலகில் பாடகராக அறிமுகமானார்.
ஆனால் அதற்குப் பிறகு பாரதிராஜா இயக்கத்தில் "16 வயதினிலே' படத்தில் கமல்ஹாசனுக்காக அவர் பாடிய "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு...' பாடல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்.


@ ரஜினிகாந்திற்கு அதிகமான பாடல்களைப் பாடியவர். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் 'பொதுவாக என் மனசு தங்கம்... ஒரு போட்டியின்னு வந்து விட்டா சிங்கம்'. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உள்பட பல கதாநாயகர்களுக்கு பிண்ணனி பாடியவர்.  கலைமாமணி பட்டம வென்றவர்.

மலேசியா வாசுதேவனைப் பற்றி பிரபலங்கள் சொன்னவை...


@ 'என் நடிப்புக் கேத்த அழுத்தக் குரல் இவன்கிட்டதான்யா இருக்கு..' - நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
தன்னுடைய பெயரால் ஒரு நாட்டுக்கே பெருமை சேர்த்தவர் ஒருவர் உண்டு என்றால் அவர்தான் 'மலேசியா' வாசுதேவன் - இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ்

@
என்னை முதன்முதலாக இசையமைப்பாளராக ஆக்கியதே அவர்தான். அவர் கதை, வசனம் எழுதி ஆனந்த் என்பவர் இயக்கிய "மலர்களிலே அவள் மல்லிகை' என்ற படத்தில்தான் என்னை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார்.

பாடகர்
, இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பல அவதாரங்கள் எடுத்திருந்தாலும், எனக்கு அவரிடம் பிடித்தது அரிதாரம் பூசாத நல்ல மனிதன் என்பதுதான் - கங்கை அமரன்

@ மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்காக எடுப்பதாக இருந்த ஒரு படத்தில் வாலியின் வரிகளில் ஒரு பாடலைப் பாட வைத்தார் இளையராஜா. எம்.ஜி.ஆருக்கு வாசுவின் குரல் மிகவும் பிடித்துவிட்டது. இவரை முன்பே என்னிடம் அறிமுகப்படுத்தியிருக்கலாமே என்று ஆதங்கப்பட்டார். ஆனால் அந்தப் படம் வெளிவரவில்லை. அந்தளவிற்கு எம்.ஜி.ஆரை தன் குரலால் கவர்ந்து விட்டார் மலேசியா வாசுதேவன். 




10 comments:

தமிழன்பன் said...

பூங்காற்று திரும்பாது.
தன் அடையாளத்தை ஆழமாகப் பதித்துவிட்டு உறங்கும் இதயத்திற்கு அஞ்சலிகள் :(

அமுதா கிருஷ்ணா said...

முதல் மரியாதை சிவாஜிக்கு அருமையாக பாடியவர்.ஆன்மா சாந்தி அடையட்டும்.

மோகனன் said...

ஆம் தமிழன்பரே...

இசை வழியே அவரது குரல் என்றும் அமரத்துவம் பெற்றிருக்கும்...

அஞ்சலி செலுத்துவோம் அனைவரும்...

மோகனன் said...

அவருடைய ஆத்மா சாந்தி பெறட்டும் பிரார்த்திப்போம் அமுதகிருஷ்ணா...

Rama chandran said...

thanks mr moganan for malaysia vasudevan song as last respite...

vasudevan avargalin kuralil oru thalattu padalana 'Nandu" padathil varum "Alli thantha vanam annai allava" endra paadalai pathivetrungal please

மோகனன் said...

நன்றி ரவிச்சந்திரன்...

அவரது பாடலை கண்டீப்பாக தேடி எடுத்துத் தருகிறேன்...

வேப்பிலை said...

என் நெஞ்சை தொட்ட பாடல்..
வரிகளுக்காக மட்டுமல்ல குரல்களுக்காகவும்

இந்த பாட்டுத் தான்
என் செல்(ல) போனின் ரிங்டோன்

அப்ப எந்தளவுக்கு
இந்த பாட்டுமேல எனக்கு....
ம்..ம்..

மோகனன் said...

மிக்க மகிழ்ச்சி தேழரே...

Unknown said...

I LIKE IT VERY MUCH

மோகனன் said...

நன்றி தோழரே...