ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday 28 February 2011

ஏலக்காயாம்... ஏலேரீசாம்... - புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல்


'ஏலக்காயாம்.. ஏலேரீசாம்.. நல்ல ஈரெலைக் கடுதாசியாம்...' என்ற பாடலை என் விருப்ப பாடலாக இன்று பதிவிலிடுகிறேன்.

'கலைமாமணி' புஷ்பவனம் குப்புசாமி அவர்களின் அற்புதமான மெட்டமைப்பில், அவரது தெள்ளிய கிராமத்துக் குரலில் இப்பாடல் ஒலிக்கிறது... இவரது குழுவினரின் கோரஸும், ஹம்மிங்கும் நம்மை அழகாக ரசிக்க வைக்கும்.

இப்பாடலில் தமிழிசையினை மிகவும் அற்புதமாகப் பயன்படுத்தி இருக்கிறார் குப்புசாமி. புல்லாங்குழல் இசை தனி ஆவர்த்தனம் செய்கிறது.

படிக்காமல் போன கிராத்து விவசாயி ஒருவர், இளம் பிராயத்தில் படிக்காமல் விட்டுவிட்டால் என்னென்ன சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை மிக அழகாக இப்பாடலில் உணர்த்துகிறார் புஷ்பவனம்.

மெல்லிசை கலந்த கிராமியப் பாடலை கேட்க ஆசையெனில் இப்பாடலைக் கேளுங்க. தங்களுக்கு பிடித்திருப்பின் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்...


ஏலக்காயாம் ஏலேரீசாம்..! | Musicians Available

(நன்றி: புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவரது குழுவினர்)




8 comments:

யூர்கன் க்ருகியர் said...

ஏலக்காயாம் ஏலேரீசாம்..! Free MP3 Download not enabled by Mr moganan Ganesan


why தல why ??

யூர்கன் க்ருகியர் said...

டவுன்லோட் enable செய்யவில்லை என்றாலும் "ப்ளாக்"லேயே ப்ளே செய்த பிறகு "Temporary Internet Files" ல போய் காப்பி பண்ணி வச்சுக்கலாம் ..

அருமையான பாடல் ரசிக்கும்படி இருக்கிறது .
பகிர்வுக்கு நன்றி தல ..

கிராமிய பாடல்களை கேட்க கேட்க நகர வாழ்க்கை வெறுக்கிறது மனது ..

மோகனன் said...

அன்பான யூர்கன்

தங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மிகவும் வருந்துகிறேன்... மன்னிப்பும் கோருகிறேன்...

தற்போது தவறை திருத்தி விட்டேன்...
இப்போது தாராளமாக தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்...

மோகனன் said...

கருத்து சொன்னமைக்கு நன்றி யூர்கன்...

நமக்கு பிடத்த ஒன்று கிடைக்காமல் போனால் ஏற்படும் ஏமாற்றம் மிகவும் கொடியது... அதைப் பெறுவதற்கு நாம் அசூரத்தனமாக முயற்சிப்போம்... அப்படி முயற்சிக்கும் போது சில வழிகள் கிடைக்கும்... அதைத்தான் தாங்கள் கடை பிடித்திருக்கிறீர்கள்...

இது நகரமல்ல யூர்கன்... நரகம்...

Sathish said...

thank u sir...

மோகனன் said...

வருகைக்கும்... பதில் தந்தமைக்கும் மிக்க நன்றி...

அடிக்கடி கேட்க வாங்க..!

Don Samusa said...

எனக்கு பிடித்த பாடல் ஒன்று, அதன் வரிகள் எனக்கு நினைவில்லை...

அதில் அசோகன் அவர்கள் ஊனமுற்ற வேடத்தில் கடலை நோக்கி
சென்று கொண்டே பாடுவார்...

அந்த பாடலை எப்படியாவது அனுப்புங்கள்...

மோகனன் said...

அன்பான சமுசா அவர்களுக்கு...

தாங்கள் கேட்ட பாடல் "பாதகாணிக்கை" என்ற படத்தில் இடம்பெற்ற 'வீடு வரை உறவு... வீதி வரை மனைவி... காடு வரை பிள்ளை...' என்ற பாடலாகும்...

காத்திருங்கள்... விரைவில் பதிவிலிடுகிறேன்...