ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Saturday 26 March 2011

விரட்டி விரட்டி பிடிக்கும் போது..! - பரவை முனியம்மாவின் கிராமியப் பாடல்


பறவை முனியம்மாவின் கணிர் குரலில் 'வெரட்டிவெரட்டி பிடிக்கும் போது என்ன சொல்லுமாம் கோழிக் குஞ்சு' என்ற கிராமியப் பாடலை இன்றைய நேயர் விருப்பப் பாடலாக பதிவிலிடுகிறேன்.

கோழியையும், கோழிக் குஞ்சியையும் வைத்து பரவை முனியம்மா அவர்கள் இப்பாடலைப் பாடியிருக்கும் விதமும், இதற்கான நமது கிராமத்து இசைகளும்.. அடடா நம்மை ஆட வைக்காமல் விடாது என்றுதான் சொல்ல வேண்டும்.

நையாண்டி மேளமும், நாதஸ்வரமும் நம்மை துள்ளாட்டம் போட வைக்கும். பரவை முனியம்மாவுடன் பாடும் கோரஸ் குரல்களும் சளைக்கவில்லை. இவர் பாடி முடித்ததும், அதற்கு பின்னிசையாக நாதஸ்வரமும், மேளமும் தாளம் தப்பாமல் பின்னியெடுக்கிறது.

இப்பாடலை நேயர் விருப்பப் பாடலாகக் கேட்ட அன்பு நண்பர் திரு. ரமேஷ் அவர்களுக்கு எனது நன்றி. அவருக்குப் பிடித்த இப்பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள். இப்பாடல் உங்களுக்குப் பிடித்திருப்பின் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்.


விரட்டி விரட்டி பிடிக்கும் போது..! | Upload Music

நன்றி: பரவை முனியம்மா & குழுவினர்

-------------------------------------------------------

Ramesh said...
indha websitil erendu padalgalai keten migunda maghilchi. enudaya laptopil tamil version illai adalal ennai manikkavum. en virupa padalaga PARAVAI MUNIYAMMA padiya padal 'VERATI VERATI PUDIKUMBODHU ENA SOLUMMA KOZHIKUNJU' endra padalai ketka migunda assai mudinthal tharavum.

Ramesh
17 December 2010 21:37




16 comments:

யூர்கன் க்ருகியர் said...

கோழிக்குஞ்சு பாட்டு ..கேட்க நன்றாயிருந்தது
பகிர்வுக்கு நன்றி!!

மோகனன் said...

வாங்க யூர்கன்...

தங்களின் பின்னூட்டம் எனக்கு தெம்பை அளிக்கிறது...

வருகைக்கு நன்றி..!

vaideki said...

nice song..!

K. Sowbakiyam said...

hai sir nice song but child s interest to this song.

Jaya kumar said...

நண்பரே வணக்கம்....

உங்களது இனிய தமிழ் பாடல்கள் பகுதி எனக்கு பிடித்தமானது.

தொடர்ந்து கேட்டு கொண்டு தான் இருக்கிறேன். சில நேரங்களில் எழுத்து பிழைகளும் வருகின்றன. பரவை முனியம்மா பகுதியில் 'இசைகளும்' என்று குறிபிட்டுள்ளீர்கள். அது தவறு. 'இசையும் ' என்பதே சரி.

நன்றி ...

த. ஜெய்குமார்
சென்னை.

மோகனன் said...

வருகைக்கு மிக்க நன்றி வைதேகி

அடிக்கடி கேட்க வாங்க..!

மோகனன் said...

இசைக்கு பேதமில்லை சௌபாக்கியம்...

வருகைக்கு நன்றி...

அடிக்கடி கேட்க வாங்க..!

மோகனன் said...

அன்பு நண்பர் ஜெய் குமாருக்கு..

தங்களின் மனம் திறந்த பின்னூட்டத்திற்கு எனது நன்றிகள்.... இசை என்பது ஒருமையைக் குறிக்கும், இந்த இடத்தில் நான் நாதஸ்வர இசை, நையாண்டி மேள இசை என பல இசைகளை சுட்டுவதால் 'இசைகள்' என்ற பன்மைச் சொல்லை பயன்படுத்தியிருக்கிறேன்...

ஆனால் நான் பறவை முனியம்மா என்றுதான் பயன்படுத்தி இருக்கிறேன். உங்களைப் பார்த்த பிறகு அதை பரவை என மாற்றிக் கொண்டேன்.. அன்பிற்கும் ஆதரவிற்கும் எனது நன்றிகள்...

அடிக்கடி கேட்க வாங்க..!

Pattali Moorthy said...

அன்பிற்கினிய நண்பருக்கு,
வணக்கம்

தங்களின் வலைப்பக்கத்திலுள்ள பாடல்கள் அனைத்தும் அருமை. அதிலும் குறிப்பாக கிராமியக் கீதங்கள் மிகவும் சிறப்பு. எனக்குப் பிடித்தவற்றை பதிவிறக்கம் செய்து கொண்டேன். நல்ல பாடல்களைத் தந்தமைக்கு நன்றி.

அதோடு மற்றொரு வேண்டுகோள். ஒத்தக் கல்லு ஒத்தக் கல்லு மூக்குத்தியாம் பாடல் வேண்டும். வெளியிட்டு உதவுக.

நன்றி

தோழமையுள்ள
பாட்டாளி

Ramesh said...

Thank you Moganan...

Nakkeeran Mahadevan said...

இனிய நட்பிற்கு என் விருப்ப பாடலாய் இதை அனுப்புவிர்களா அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

பாடல் விபரம்: ”துங்காமணிவிளக்கு துண்டம நின்னெறியும் காத்துபட்டு கரையாது கரைபடிச்சு கருக்காது என் துக்கமதை வெளீய சொன்னா மங்கிவிடும் மங்கிவிடும்” படம் பெயர் தெரியவில்லை .

இயக்குநர் திரு.விஜயகிருஷ்ணராஜ் நாயகன் ராதா ரவி , நாயகி சரிதா.... இது மிக தாள நயனைத்துடன் ,திரு இளையராஜா இசையில் உருவானது. தயவுசைது பதியவும் . நன்றி ,

நட்புடன் நக்கீரன்

மோகனன் said...

அன்பு நண்பர் பாட்டாளி மூர்த்திக்கு..

தங்களின் அன்பிற்கும் வேண்டுகோளிற்கும் எனது நன்றிகள்...

கூடிய விரைவில் இப்பாடலை தேடியெடுத்து தருகிறேன்...

அடிக்கடி கேட்க வாங்க..!

மோகனன் said...

வாங்க ரமேஷ்...

தங்களுடைய வேண்டுகோளை பூர்த்தி செய்து விட்ட திருப்தி எனக்கு...

அடிக்கடி கேட்க வாங்க..!

மோகனன் said...

வாங்க நக்கீரன் மாதவன்..

வருகைக்கு மிக்க நன்றி.. தாங்கள் கேட்ட பாடலை தேடிப் பிடிப்பதில் சிரமம் இருக்கும் எனக் கருதுகிறேன்.. இருப்பினும் தேடி எடுத்துத் தர முயல்கிறேன்...

அடிக்கடி கேட்க வாங்க..!

கே.கே.மகேஷ் said...

அற்புதமான பணி!
பாராட்டுக்கள் நண்பா!
தொடரட்டும் உங்கள் சேவை!

மோகனன் said...

நன்றி நண்பா...