ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday 7 March 2014

நீலக்கடலின் ஓரத்தில்..! - நேயர் விருப்பப் பாடல்



கோலார் தங்கச்சுரங்கப் பகுதியில் இருக்கும் அன்பு நண்பர் ராமச்சந்திரன் கேட்டுக் கொண்டதற்காக, ‘அன்னை வேளாங்கன்னி’ என்ற படத்தில் ‘நீலக் கடலின் ஓரத்தில்… நீங்கா இன்பக் காவியமாம்…’ என்ற பாடலை நேயர் விருப்பப் பாடலாக இன்று பதிவிலிடுகிறேன்.

1971-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15, அன்று இந்த திரைப்படம் வெளியானது. வேளாங்கன்னி மாதாவின் புகழைச் சொல்லும் விதமாக எடுக்கப்பட்ட படம் இது. இப்படத்தில் ஜெயலலிதா, பத்மினி, கே.ஆர்.விஜயா, ஆகியோர் நடித்திருக்கின்றனர். அப்போது இளம்பிராயப் பருவத்தில், சினிமா வாய்ப்பு தேடிக்கொண்டு இருந்த கமலஹாசனும் இப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தினை இயக்கியவர் கே. தங்கப்பன்.

இப்படத்தின் முதல் பாடலாக இடம்பெறும் 'நீலக்கடலின் ஓரத்தில்…' என்ற பாடலை கவியரசர் கண்ணதாசன் எழுத, ஜி. தேவராஜன் இசையமைப்பில் டி.எம்.சௌந்தரராஜன் மற்றும் பி. மாதுரி ஆகியோர் இணைந்து பாடியிருக்கின்றனர்.

இப்பாடலை உங்களுக்குப் பிடித்திருந்தால் கேட்டு மகிழுங்கள். தேவையெனில் இலவசமாய் பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்….


நீலக்கடலின் ஓரத்தில்... | Muziboo
 

---------------------------------------------------------

Ramachandran K
said...
dear moganan..

thanks a lot for your hardwork i like this song very much its rhythm. in asathapovadhu yaaru programme has done in a double role at the end he shows that only one man have you seen that programme. one more request of film : annai velanganni song: neela kadalin orathil endra padalai thedavum please.

regards

ramachandran
kolar gold fields
------------------------------------------

இனி சிறப்புத் தகவல்கள்

@ இப்படத்தின் இயக்குனர் கே. தங்கப்பன் நடன இயக்குனர். இப்படத்தின் நடன இயக்குனர், திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு ஆகியவற்றை இவரே கவனித்துக் கொண்டார்.


@ இப்படத்தில் கமலஹாசனும், கமலஹாசனை முதன்முதலில் கதாநாயகனாக அறிமுகப்படுத்திய இயக்குனர் ஆர்.சி. சக்தியும், இப்படத்தில் உதவி இயக்குனர்களாக பணியாற்றி இருக்கின்றனர். இப்படத்தின் ஒரு பாடலில் கமல் நடனமாடி இருப்பார்.


@ இப்படத்தில் ஜெமினி கணேசன், மேஜர் சுந்தர்ராஜன், நாகேஷ், தேங்காய் சீனிவாசன். எஸ்.வி.சுப்பையா, ஸ்ரீகாத்ந், தேவிகா, சச்சு ஆகியோர் கௌரவ வேடத்தில் நடித்துள்ளனர்.


@ இப்படத்திற்கான பாடல்களை கண்ணதாசன் மட்டுமில்லாமல் கவிஞர் வாலி, அய்யாசாமி ஆகியோர் எழுதி இருக்கின்றனர்.


@ இப்பாடலின் இடம்பெறும் சரணத்தில், தென்னை உயர பனை உயர, செந்நெல் உயர்ந்து வளம் செழிக்கும் என்று எழுதியிருப்பார்.


இது ஔவைப்பாட்டி, குலோத்துங்க சோழனின் முடிசூட்டு விழாவில்,
 

வரப்புயர நீர் உயரும்,
நீர் உயர நெல் உயரும்,
நெல் உயர குடி உயரும்,
குடி உயர கோல் உயரும்,
கோல் உயர கோன் உயரும்.
- என்று சோழனுக்காக பாடிய
வாழ்த்திலிருந்து சிலவரிகளை மெலிதாகக் கையாண்டிருப்பார் கண்ணதாசன்.


இதிலிருந்து தமிழ் செய்யுள்களில் கவியரஞர் கண்ணதாசன் எவ்வளவு புலமை கொண்டிருந்தார் என்பது விளங்கும்.

@ இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி. தேவராஜன். மலையாளத்தில் மிகப்பெரிய இசையமைப்பாளர். மலையாளத்தில் 200 படங்களுக்கு மேல் இசையமைத்த ஜாம்பவான். தமிழில் இவர் 10 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அதில் அன்னை வேளாங்கன்னியும், துலாபாரமும் குறிப்பிடத்தக்கவை.


@ கே.ஜே. யேசுதாஸின் குரலில், துலாபாரம் படத்தில் இடம்பெறும், ‘காற்றினிலே… பெருங் காற்றினிலே…’’ பாடல் இவரது இசையால் மிளிர்ந்தவைதான். இவரது இசையில் கானதேவன் யேசுதாஸ் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். ஐயப்பன் பக்தி பாடலான, ‘ஹரிவராசனம்… விஸ்வமோகனம்…’ என்ற பாடலுக்கு இசையமைத்தவரும் இந்த ஜி. தேவராஜன்தான். மலையாளத்தில் நமது எஸ்.பி. பாலசுப்ரமணியத்தை ‘கடல் பாலம்’ (1970) என்ற படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவரும் இவர்தான்.


@ இந்தப்படத்தை நடன இயக்குனரான கே. தங்கப்பன் தயாரித்தார். படத்தை இயக்கும் பொறுப்பு முதலில் கேமராமேன் வின்சென்ட்டிடம் இருந்தது. முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்ததும், இருவரிடையே பிரச்சனை வரவும், வின்சென்ட் ஒதுங்கிக் கொண்டார். அதனால் தங்கப்பன் இந்தப்படத்தை இயக்கி முடிக்க வேண்டியதாயிற்று.


@ இப்படத்தில் உதவி நடன இயக்குனராக பணியாற்ற வந்த கமலஹாசன், படப்பிடிப்பில் சூறாவளியாய் அனைத்து வேலையையும் செய்யத் துவங்கியதால் உதவி இயக்குனராகவும் உருமாறினார். இவருடன் மற்றொரு உதவி இயக்குனராக பணியாற்றிய ஆர். சி. சக்தி, பின்னாட்களில் கமலஹாசனை முதன்முதலாக கதாநாயகனாக்கி ‘உணர்ச்சிகள்’ படத்தில் அறிமுகப்படுத்தினார். இப்படம் வெளிவருவதற்கு முன்பே ‘பட்டாம்பூச்சி’ வெளிவந்ததால் இப்படம் அந்த பெருமையை தட்டிச்சென்று விட்டது.


@ இப்படத்தில் நர்ஸாக நடித்திருப்பார் ஜெயலலிதா. இவர் உள்பட படத்தில் நடித்த பல திரை உலகப்பிரபலங்கள், இப்படத்திற்காக சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்திருந்தனர். இதை ஜெயலலிதாவே, ஒருமுறை மேடையில் பேசும்போது குறிப்பிட்டிருக்கிறார்.


(Annai Velankanni Tamil film released in August 15,1971. The film starred Gemini Ganesan, Jayalalitha, Padmini and K. R. Vijaya. Kamal Hassan briefly appears in an uncredited role as Jesus Christ. The film was directed by K. Thangappan. It comprises three stories pertaining to Christian beliefs. Velankanni, where the film is set is a real village in India, and has a large church dedicated to the Virgin Mary and Jesus.this film songs penned by Kaviyarasar Kannadasa, vaali. Music composed by G. Devarajan. "neelak kadalain orathil" song sung by T.M.S. and Mathuri.)





14 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் பிடித்த பாடல்... அறியாத பல தகவல்களுக்கு நன்றி...

மோகனன் said...

நன்றி தோழரே... அது எப்படி முதல் ஆளாக பதிவு செய்கிறீர்..?

ramachandran said...

anbu moganan avargalukku, mikka mikka nandri, viruppa padalai thedi piduthu pathivetriatharku thanks. thodaratum ungal padalgal thoguppu pani.

matroru padal anbare, 'yesunathar pesinal enna pesuvar' padiyavar madhuri, padam theriyathu, muyarchi seyyungal nanbare.

மோகனன் said...

வாங்க ராமச்சந்திரன்...

தங்களின் வேண்டுகோளை பூர்த்தி செய்த மகிழ்ச்சி எனக்கு... ஆனால் மிகவும் காலதாமதமாகிவிட்டது மன்னிக்கவும்.

கடவுள் குறித்தோ, மதம் குறித்தோ இனி பாடல்களை நான் வழங்கவிரும்பவில்லை...

நன்றி..!

kasim.vtr@gmail.com said...

காலத்தால் அழியாத காவியம்...

Mohamed Kasim

மோகனன் said...

அன்பு காசிம் அவர்களே...


இதற்குப் பெயர்தான் மதம், மொழி கடந்த ரசனை என்பது...

இசைதான் இதயங்களை இணைக்கும் மொழி...

நன்றி தோழரே...

kamala Xavier said...


எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத கண்ணதாசன் பாடல் இது.

ஜெயலலிதா ஜெமினி கணேசன் ஜோடியில் வந்த ஒன்றிரண்டு படங்களில் இதுவும் ஒன்று.

கமலஹாசன் ஒரு பாடலுக்கு நடனமாடினார் என்றாலும் இப்படத்தில் தங்கப்பன் மாஸ்டருக்கு உதவி இயக்குனராக பணி புரிந்தார்.

இப்படத்தின் மூலம் வந்த வருவாய் முழுவதும் ஏதோ ஒரு குறிப்பிட்ட நல்ல காரிய்த்துக்கோ அல்லாது யாரோ ஒருவருக்கு நிதியாகவோ அளிக்கப்பட்டது. அதனால் அனைத்து நடிகர் நடிகைகளும் சம்பளம் வாங்காமல் நடித்தார்கள்...

மோகனன் said...

அன்பான கமலா சேவியர் அவர்களுக்கு...

தங்களது கருத்துக்கள் இந்த பதிவை இன்னும் பலமாக்குகிறது...

ரசித்தமைக்கு நன்றிகள் பல...

Anonymous said...

ருசி கண்ட பூனை என்ற படத்தில் S.Janaki குழந்தையின் குரலில் பாடிய
"கண்ணா நீ எங்கே " என்ற
முழு பாட்டை, நல்ல சுத்தமான கிளாரிட்டியில் பதிவேற்றம் செய்யுங்களேன்

== ரங்கன்

மோகனன் said...

அன்பு ரங்கன் அவர்களுக்கு...

கண்டீப்பாக தேடி எடுத்துத் தருகிறேன்...

மூன்று வாரம் பொறுத்துக்கொள்ளுங்களேன்...

Anonymous said...

நன்றி மோகனன்.

= ரங்கன்

மோகனன் said...

நன்றி ரங்கன்...

மோகனன் said...

அன்புள்ள ரங்கன் அவர்களுக்கு நீங்கள் கேட்ட 'கண்ணா நீ எங்கே' என்ற பாடல் கீழ்கண்ட இணைப்பில் இருக்கிறது... எடுத்துக் கொள்ளுங்கள்...

இப்பாடலை பதிவிடமுடியாததற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்...

http://www.asoktamil.opendrive.com/files/Nl8zMTA3ODIyOF9oWGhWQl85OWRl/kannaa%20nee%20inge%20vaa.mp3

Anonymous said...

Mikka Nandri Nanbare.
Thodaruttum ungal sevai