ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday, 13 March 2014

சின்னஞ்சிறு கண்மலர்..! - நேயர் விருப்பப் பாடல்


நமது தளத்தின் புதியநேயர் ஜார்ஜ் நவரத்னராஜ் அவர்களின் வேண்டுகோளை பூர்த்தி செய்ய வருகிறது, பதிபக்தி படத்தில் இடம்பெற்ற ‘சின்னஞ்சிறு கண்மலர்… செம்பவள வாய்மலர்…’ என்ற பாடல். இன்று இப்பாடலை நேயர் விருப்பப்பாடலாக பதிவிலிடுகிறேன்.

இத்திரைப்படத்தை புத்தா பிக்சர்ஸ் பெயரில் ஜி.என்.வேலுமணி தயாரித்தார். பீம்சிங் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், டி.எஸ்.பாலையா, வி.நாகையா, கே.ஏ.தங்கவேலு, சந்திரபாபு, சாவித்திரி, எம்.என்.ராஜம், விஜயகுமாரி, அங்கமுத்து உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். 


பாடல்களை மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுத, மெல்லிசை மன்னர்களான எம்.எஸ். விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் இசையமைத்திருக்கின்றனர். இப்படத்தின் பாடல்களை டி.எம். சௌந்தரராஜன், ஏ.எம்.ராஜா, சந்திரபாபு, வி.என்.சுந்தரம், ஜிக்கி, சுசீலா ஆகியோர் பாடியிருக்கின்றனர். இப்படம் மார்ச் 14, 1958-ல் வெளியான வெற்றிப்படமாகும்.

நேயருக்கு பிடித்த இந்த பாடல், தாலாட்டுப் பாடலாகும். இப்பாடலை பி. சுசீலா பாடியிருக்கிறார். உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் இந்த பாடலை கேட்டு மகிழுங்கள். விரும்பினால் இப்பாடலை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.சின்னஞ்சிறு கண்மலர்... | Muziboo

******************************************

George Navaretnarajah said...

Dear brother,

Could u pl. find and include the foll. song. Thank u.

Song : Sinnansiru kanmalar

sembavala wai malar sinthidum alage vaarayo Vannathamil manikkam...

arriro anbe arraro... Paappa un appavai parthalthan thookkamo sainthe madithanil sainthalthan thookkamo naali ulagu nallorkal kaiyil namum makilvom...

- George Navaretnarajah. March 5, 2014
****************************************** 
இனி சுவாரசியத் தகவல்கள்

@ இப்படத்தின் தயாரிப்பாளரான ஜி.என். வேலுமணி, தனது ஆரம்பகாலத்தில், கோவையில் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்ட ‘சொர்க்கவாசல்’ படத்தில் தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிந்தார். சென்னை வந்ததும், இயக்குனர் ஏ. பீம்சிங், கதை- வசன ஆசிரியர் சோலைமலை ஆகியோருடன் நட்புறவு ஏற்பட்டது. இவர்கள் மூன்று பேரும் கூட்டு சேர்ந்து, 'புத்தா பிக்சர்ஸ்' என்ற படக்கம்பெனியை தொடங்கினர். இந்த கம்பெனியின் முதல் படம்தான் இந்த 'பதிபக்தி'.

@ இயக்குனர் பீம்சிங்கும் சிவாஜி கணேசனும் ‘ப’ வரிசை வெற்றிப்படங்களைத் தந்தவர்கள். இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய முதல் படமும் இதுதான். இதன் பெயரும் ‘ப’வில்தான் தொடங்கியது.

@ மெல்லிசை மன்னர்களான எம்.எஸ். விஸ்வநாதன் -  ராமமூர்த்தி இணைக்கும்  ‘ப’ என்ற வரிசையில் அமைந்த முதல்  படமும் இதுதான்.
 

@ இப்படத்தின் படத்தொகுப்பு (எடிட்டிங்) வேலையையும் இயக்குனர் பீம்சிங்கே செய்திருந்தார்.

@ சிவாஜி கணேசன் நடித்த படத்தில், முழுப்பாடல்களையும் ‘மக்கள் கவிஞர்’ பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய படம் இது. 

@ இப்படத்தில் மொத்தம் 9 பாடல்கள். அம்பிகையே முத்து மாரியம்மா … , திண்ணைப் பேச்சு வீரரிடம்…,  கொக்கரக்கொக்கரக்கோ சேவலே… உள்ளிட்ட சூப்பர்ஹிட் பாடல்கள் இந்த படத்தில் இடம்பெற்றிருக்கின்றன.

@ இப்படத்தில் இடம்பெற்றுள்ள கொக்கரக்கொக்கரக்கோ சேவலே… பாடல் ஏற்கெனவே நமது தளத்தில் வெளியிட்டிருக்கிறேன். கேட்க விரும்புவோர் இங்கே கிளிக்கவும்…

@ இத்திரைப்படம் அப்போது அமோக வெற்றி பெற்று, சென்னை கெயிட்டி , திருச்சி  ஜூபிடர், கோவை கர்நாடிக், மதுரை  கல்பனா  ஆகிய தியேட்டர்களில் 100-நாட்களுக்கும் மேல் ஓடி சாதனை படைத்தது.

@ சின்னஞ்சிறு கண்மலர்… என்ற பாடலில் ‘மக்கள் கவிஞர்’ அழகிய தமிழ்ச்சொற்களை, மிக எளிமையாகப் பயன்படுத்தி தமிழுக்கு பெருமை சேர்த்திருப்பார்.

@ இந்த பாடலின் ஒரு வரியில் அன்பே ஆராரோ…ஆரிரோ…. என்று வரும். மழலைக்கு இந்த ‘அன்பே’வை பயன்படுத்தி இருப்பது, எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. தற்போது இந்த வார்த்தை எதற்கு பயன்படுத்தப்படுகிறதே என்பதை நான் உங்களுக்கு சொல்லத் தேவை இல்லை.


பாடல் உதவி: சுக்ரவதநீ நண்பர்கள் குழாம்.


இப்பாடலை வீடியோ வடிவில் பார்க்க இங்கே கிளிக்கவும்...(Pathipakthi Tamil film released in March 14, 1958. This film cast is Sivaji Ganesan, Gemini Ganesan, Chandrabapu, Savithri, M.N.Rajam. Directed by A. Beemsingh. Songs penned by Pattukkottai kalyanasundaram. music composed by M.S. Viswanathan and Ramamoorthy)
2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

என்று கேட்டாலும் இருக்கும் இனிமையான பாடல்... ஆனால் மற்ற தகவல்கள் எல்லாம் உங்கள் தளம் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது... நன்றி...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

மோகனன் said...

மிக்க நன்றி தனபாலரே...