வணக்கம்...
நம்முடைய நாட்டுப்புற, கிராமியப் பாடல்களை அனைவரிடமும் கொண்டு சேர்க்கவும், உங்களுக்குப் பிடித்த பழைய திரைப்பாடல்களை உங்களிடம் கொண்டு சேர்க்கவும்தான் இந்த வலைக்குடில்..
உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்... முடிந்தவரை எடுத்துத் தருகிறேன்... இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!
தொடர்புக்கு: moganan@gmail.com
அன்பு நண்பர் சிங்கப்பூர் பனசை நடராஜன் கேட்ட பாடல் இது... 1952-ல் வெளிவந்த, பராசக்தி படத்தில் இடம்பெற்ற அட்டகாசமான பாடல்தான்... ' ஓ ரசிக்கும் சீமானே வா...!'
இசையமைப்பாளர் ஆர்.சுதர்சனம் அவர்களின் இசையமைப்பில் இப்பாடலுக்கு குரல் கெடுத்தவர் எம்.எஸ்.ராஜேஸ்வரி அவர்கள்...
பாடலை கேட்டு மகிழுங்கள்... பிடித்திருந்தால் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!
நன்றி: சுக்ரவதநீ நண்பர்கள் குழாம்
-----------------------------------
அன்பு நண்பர் பனசை நடராஜன் அவர்களுக்கு...
நீண்ட நாள் தாமத்திறகு எனை மன்னிக்க வேண்டுகிறேன்... வேலூப்பளு மற்றும் பாடல் கிடைக்காமல் போன சோர்வு... இவைகளே தாமதத்திற்கான காரணம்... எருமைக் கன்னுகுட்டி பாடல் அடுத்த பதிவில் இடம்பெறும்...
நண்பருக்கு... மீரா படத்தில் வரும் ‘புது ரோட்டுலதான்’ கேட்க கேட்க திகட்டாத பாடல். அந்த படம் விக்ரமுக்கு முதல் படமல்ல. அவர் அறிமுகமானது ஸ்ரீதரின் படத்தில்னு நினைக்கிறேன். அப்புறம் நான் கேட்ட ’பராசக்தி’ படத்தில் வரும் ‘ஓ ரசிக்கு சீமானே’ பாடல் பதிவிட முடியுமா? - பனசை நடராஜன், சிங்கப்பூர்
அகத்தியர் திரைப்படத்தில் இடம் பெற்ற அற்புதமான பழைய பாடல் இது. தாய். தந்தையரைப் பற்றி அவ்வை சொன்னதை... அப்படியே பாட்டின் வடிவில் கேட்கலாம்..!
1972-ல் வெளிவந்த இப்படத்தில் அகத்தியராக நடித்திருப்பவர் அமரர். சீர்காழி கோவிந்தராஜன். இயக்கம் மற்றும் தயாரிப்பு: திரு. ஏ.கே. சுப்புரமன் அவர்கள். . இப்படத்திற்கு இசையமைத்தவர் யாரென்று தெரியுமா..? திரு. குன்னக்குடி வைத்தியநாதன். இப்பாடலைப் பாடியவர். டி.கே.கலா அவர்கள்.
என்னுடைய சிறு வயதில் இப்பாடலைக் கேட்டிருக்கிறேன்... இன்றும் என் மனதில் பசுமையாக நிற்கும் பாடல் இது..! இன்று எனை பூமிக்கு ஈந்த என் பெற்றோர்களுக்காக இப்பாடலை சமர்ப்பிக்கிறேன்..!
கேட்டு மகிழுங்கள்..! உங்களுக்குப் பிடித்திருந்தால் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!
கேட்டாலே போதும்... தானாக உங்கள் மனமும் உடலும் துள்ளாட்டாம் போடும்...
என இப்பாடலில் நையாண்டி மேளம், உருமி மேளம் போன்ற கிராமிய இசைக் கருவிகள் தனி ஆவர்த்தனம் செய்திருப்பது இதன் மற்றொரு சிறப்பம்சமாகும்...
திருமதி விஜயலட்சுமியும், அவரது குழுவினரும் சேர்ந்து... தமிழக கிராமத்து, காவல் தெய்வங்களின் பேர்களை ஒவ்வொரு படியிலும் சொல்லியபடியே பாடி அசத்துவார்கள்... இடையே வரும் பெண்களின் குலவை சத்தம் நம்மை உசுப்பேற்றும்... சிலிர்ப்பூட்டும்..!
அன்பான புயல் அவர்களுக்கு...
இப்பாடலை தாங்கள் என்னிடம் கேட்டு இரு மாதங்களாகி விட்டது.. எனது தேடலில்தான் இவ்வளவு தாமதம் நண்பரே... இதில் கொடுமை என்னவெனில்.. எனது சேமிப்பில் ஏறகனவே இப்பாடல் இருந்திருக்கிறது.. இது தெரியாமல் எங்கெங்கோ (இரு மாதங்களாக) தேடித் தொலைத்திருக்கிறேன்... என் பிழை பொருட்டு எனை மன்னிக்க வேண்டுகிறேன்...
இவருடன் சேர்ந்து நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருப்பின் இலவசமாய் பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் எண்ண வண்ணம்தான், இந்த 'சின்னக்குட்டி நாத்தனா... சில்லறைய மாத்துனா..!' பாடல். இடம் பெற்ற திரைப்படம்: ஆரவல்லி (1957), அட்டகாசமான பாடலுக்கு துள்ளலிசையை அமைத்தவர் திரு. ஜி. ராமநாதன் அவர்கள். குரல் வழியே குதுகலப்படுத்தியவர். திரு. திருச்சி லோகநாதன் அவர்கள்.தயாரிப்பு: டி.ஆர்.சுந்தரம்(சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்).
மிகவும் எளிமையான வரிகளும், சிறப்பான இசையும்... இப்பாடலை அக்காலத்தில் பட்டி தொட்டியெங்கும் பரப்பியது என்றால் அது மிகையில்லை. எனக்குப் பிடத்த பாடல்களில் இதுவும் ஒன்று..!
இதில் கதாநாயகியாக நடித்தவர், ஜி.வரலட்சுமி. அவருடைய தங்கையாக மைனாவதி நடித்தார் (இவர் நடிகை பண்டரிபாயின் தங்கை)... பெண்களின் ராஜாங்கம்தான் எப்படி இருக்கும். ஒரு நாட்டை பெணகளே ஆண்டு வந்தால் எப்படி இருக்கும் எனபதுதான் கதை. ஆண்கள் எல்லோரும் இப்படத்தில் வீட்டிலிருந்தபடி சமைப்பார்கள். பெண்கள் காவல் காக்க வீரர்களாகச் செல்வார்கள். (இந்த தகவல் மட்டும் சரிதானா என்பதை விபரமறிந்தவர்கள் பின்னூட்டத்தில் கூறினால் நலம்..)
இப்பாடல் உருவான விதம் ஒரு சோகம் கலந்த சுவரசியமாகும்... இதோ
ஒரு சமயம் பொதுவுடமை இயக்கத்திற்காக நாடகம் நடத்த சென்றிருந்த பட்டுக்கோட்டையார் நாடகத்திற்கு சரியான வசூல் இல்லாமல் தங்கள் குழுவினருடன் பசி, பட்டினியுமாக சென்னை திரும்ப பேருந்தில் ஏறினார். பேருந்தில் அமர்ந்திருந்த தங்கள் குழுவினர் அனைவரும் சோர்ந்த முகத்துடன் காணப்பட்டார்கள். அவர்கள் சோகத்தை மாற்றி அவர்களுக்கு குதூகலத்தை தர பட்டுக்கோட்டையார் அங்கேயே ஒரு பாடல் எழுதி, அதனை சத்தமாக பாட ஆரம்பித்தார். அந்த பாடலை கேட்டதும் நாடக குழுவினருக்கு பசி பறந்துவிட்டது. அனைவரும் குதூகலமாக கைகளை தட்டி பாட ஆரம்பித்தார்கள்.
'சின்னக்குட்டி நாத்தனா
சில்லறைய மாத்துனா
குன்னக்குடி போற வண்டியில்
குடும்பம் பூரா ஏத்துனா!'
இந்த பாடலை கேட்டு மகிழ்ந்து அவரது குழுவினர், 'அண்ணே பாட்டு ரொம்ப அருமையா இருக்கு. இந்தப் பாட்ட அப்படியே ஒரு படத்துக்கு குடுங்கண்ணே'' என்று கேட்டுக் கொண்டார்கள். அதன்படியே அந்தப் பாடலை மாடர்ன்ஸ் தியேட்டர் தயாரித்த 'ஆரவல்லி' படத்திற்கு தந்துவிட்டார் பட்டுக்கோட்டையார்.
இரு வல்லவர்கள் படத்தில் இடம்பெற்ற அற்பதமான காதல் டூயட் பாடல்தான் இந்த... ''நான் மலரோடு தனியாக வந்தேன்..!'' அன்புத் தோழி கலா அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க இப்பாடலை பதிவிலிடுகிறேன்...
1966-ல் ஜெய்சங்கர், விஜயலட்சுமி ஆகியோர் நடித்த படம் இரு வல்லவர்கள். இப்பாடலிற்கான காதல் வரிககளை தூரிகையிட்டது கவிஞர் கண்ணதாசன்... இசையமைத்தது... திரு. வேதா அவர்கள்... இப்பாடலுக்கு குரல் வழியே உயிர் கொடுத்தவர்கள் நமது டி.எம்.எஸ்ஸும், பி. சிசீலா அவர்களும்..!
இப்பாடலில் பெண் பாடுவது போன்று கவிஞர் வரியின் வைத்திருக்கிறார் பாருங்கள்... அட்டா.. கண்ணதாசனின் ரசனையே ரசனை...
'' என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக.. நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற...''
அன்புத் தோழி கலாவுடன் சேர்ந்து நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருந்தால் இலவாசமாக தரவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..! நன்றி..!
------------------------------------
கலா said...
வணக்கம் தமிழ்தோட்டம் {தளம்}வழியாக உங்கள் தளங்களைப் பார்வையிட்டேன் மிக அருமை... பழைய பாடல்களைக் கேட்கக் கூடியதாக உள்ளது நன்றி தயவு செய்து{ நான் தேடும் பாடல்} இருந்தால் உங்கள் இடுகையில் சேருங்கள் இருவல்லவர்களில்.... திரு.செளந்தரராஜன் பி.சுசிலா அவர்கள் பாடிய.... நான் மலரோடு தனியாக ஏன் .. இங்கு வந்தேன்..! நன்றி
கவிஞர் கண்ணதாசனின் காதல் கவித்திறமைக்கு இந்த ஒரு பாடல் அவரின் மணிமகுடத்தில்... மாணிக்கக் கல் போன்றதாகும்...
'காலங்களில் அவள் வசந்தம்... கலைகளிலே அவள் ஓவியம்...' என தனது காதலியை ஒவ்வொன்றிலும் எது தலையாயமானதும், சிறப்பானதும் எது இருக்கிறதோ... அதோடு ஒப்பிட்டுக் கூறுவார்... இப்பாடல் அன்று, இன்று மட்டுமல்ல.. என்றும் மறையாக் காதல் காவியம் ஆகும்...
பாவ மன்னிப்பு படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு மிகவும் இனிமையாக இசையமைத்திருப்பது எம்.எஸ்.விஸ்வநாதன்& ராமமூர்த்தி அவர்கள். குரல் வழியே இவ்வரிகளுக்கு உயிரூட்டியவர் திரு. பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்கள்...
எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் வரிசையில் இப்பாடலும் ஒன்று... என் காதல் தேவதைக்காகவும் இப்பாடலை இங்கே பதிவிலிடுகிறேன்.... கேட்டு மகிழுங்கள்... தேவையெனில் தரவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!
என்னவள் என்னருகே இல்லாத நிலையில்... இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம், என்னவளின் நினைவை மீட்கும் இப்பாடல்...
‘ஓராயிரம் பார்வையிலே… உன் பார்வையை நானறிவேன்..!’ மிகவும் அருமையான அக்காலத்து, சோகமான காதல் பாடல் இது..!
இப்பாடல் இடம்பெற்ற திரைப்படம்: வல்லவனுக்கு வல்லவன், 28.05.1965-ல் வெளியான இத் திரைப்படத்தின் இயக்குனர் சுந்தரம். இப்படத்தின் கதாநாயகன் யார் தெரியுமா..? அக்கால வில்லன் நடிகரான அசோகன்தான்.
இந்த படத்தை தயாரித்தது… அக்கால மிகப்பெரிய சினிமா கம்பெனியான ‘சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்’ (இது என்னுடைய மாவட்டம் என்பதில் எனக்கு தனிப்பெருமையும் உண்டு).
இப்பாடலின் வரிகளுக்கு சொந்தக்காரர் நம் கவியரசு கண்ணதாசன். இசையமைப்பு, திரு வேதா அவர்கள், பாடியவர்… வேற யார்... நம்முடைய டி.எம்.எஸ்தான்.
இப்பாடலின் வரிகளும், இசையும்… அதில் முகிழ்ந்து கரையும் டி.எம். சௌந்தரராஜனின் குரலும்… அத்தனையும் தமிழ்த் தேனமுது…
இப்பாடலில் காதலியின் நினைவை எப்படியெல்லாம் தேடுகிறார் கண்ணதாசன்..! காதலர்களின் இதய வலிகளுக்கு இப்பாடல் ஒரு சரியான மருந்து என்பேன் நான்..!
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இப்பாடலும் ஓன்று. எனது குருவான திருவாளர். தி.ரா. கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும் பிடித்த பாடல் இது..!
இசையமைப்பாளர் ஆர்.சுதர்சனம் அவர்களின் இசையமைப்பில் இப்பாடலுக்கு குரல் கெடுத்தவர் எம்.எஸ்.ராஜேஸ்வரி அவர்கள்...
ஒ ரசிக்கும் சீமானே... | Upload Music
நீண்ட நாள் தாமத்திறகு எனை மன்னிக்க வேண்டுகிறேன்... வேலூப்பளு மற்றும் பாடல் கிடைக்காமல் போன சோர்வு... இவைகளே தாமதத்திற்கான காரணம்... எருமைக் கன்னுகுட்டி பாடல் அடுத்த பதிவில் இடம்பெறும்...