ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, 20 October 2009

ஏ... ஆக்காட்டி... ஆக்காட்டி... - நாட்டுப்புறப் பாடல்..!

பேராசிரியர் குணசேகரன்

‘தவமாய்த் தவமிருந்து’ படத்தில் இடம்பெற்ற பாடல் இது. ஜெயா மூர்த்தி அவர்களின் அற்புதமான குரலில் பாடிய இந்த பாட்டு புதுவை பல்கலை கழக பேராசிரியர் குண சேகரன் அவர்கள் தொகுத்த நாட்டுப்புறப்பாட்டு.

இதன் உரிமையாளரின் அனுமதி இன்றி இப்படத்தில் பயன்படுத்த முற்பட்டதால், நீதிமன்றத்தில் தடை வாங்கப்பட்டது. அதனால் இப்பாடல், அப்படத்திலிருந்தே நீக்கப்பட்டது.

அதற்கு முன்னதாக அப்படப்பாடல்களைக் கொண்ட குறுந்தகடுகளில் அப்பாடல் இடம்பிடித்திருந்தது. அன்று கேட்ட பாடல் இது… இது இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கும் அருமையான பாடல்….

பாடகரின் குரலில் சோகம், மகிழ்ச்சி, ஏக்கம் அப்படியே உங்கள் கண் முன்னே நிறுத்தும்…. நாட்டுப்புறப் பாட்டென்றால் இதல்லவா பாட்டு என உங்களைச் சொல்ல வைக்கும்…. கேட்டுப் பாருங்கள்…

நன்றி: புதுவை பல்கலைகழக பேராசிரியர் குண சேகரன்ஏ... ஆக்காட்டி... ஆக்காட்டி... | Upload Music

முடிந்தால் பின்னுட்டமிடுங்கள்...

இந்த பாடலின் திரை வடிவம் காண...: https://www.youtube.com/watch?v=we_uT_WTDC4
4 comments:

ரோகிணிசிவா said...

thnks for sharing , a good one

மோகனன் said...

வாங்க தோழரே...

இப்பாடலை பதிவிட்டு ஏறத்தாழ ஒன்றரை வருடங்களுக்கு மேலாகி விட்டது... என் ரசனையோடு ஒத்துப் போன மனிதரை இன்று கண்டு கொண்ட மகிழ்ச்சி...

அடிக்கடி கேட்க வாங்க..!

kannan R. said...

எல்லாம் சரி அப்ப அந்த ஆக்காட்டி ஆறுமுகம் னு ஒருத்தர் இருக்காரே அவரு யாரு அவருக்கு எப்படி அந்த பேரு வந்தது..

மோகனன் said...

அன்புத் தோழர் கண்ணனுக்கு...

அவர் இந்த பாடலை இயற்றியிருக்கலாம். அல்லது முதன் முதலில் மேடைகளில் பாடியிருக்கலாம்... முழு தகவல்களையும் கேட்டறிந்து விபரமாக எழுதுகிறேன்...

நன்றி தோழா...