ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, 28 April 2010

கொக்கர கொக்கரக்கோ சேவலே..! - பழைய திரைப்படப் பாடல்

கொக்கர கொக்கரக்கோ சேவலே... கொண்டிருக்கும் அன்பிலே... என்ற பழைய பாடலை கேட்டிருக்கிறீர்களா... கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயான அன்பினை சேவல் மற்றும் கோழியை வைத்து மிக அழகாக விளக்கியிருப்பார் இப்பாடலின் ஆசிரியரான 'மக்கள் கவிஞர்' பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம்

இப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் : பதிபக்தி (1958). மெல்லிசை மன்னர்களான எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆகியோரின் இசையமைப்பில் டி.எம்.எஸ், ஜிக்கி ஆகியோர் பாடிய பாடலாகும்.

எனக்குப் பிடித்த இப்பாடலை உங்களுக்குப் பிடித்திருந்தால் நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருந்தால் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..! மேலும், உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்க..! நான் தருகிறேன்..!


கொக்கர கொக்கரக்கோ சேவலே..! | Music Codes

பாடல் உதவி: சுக்ரவதனீ நண்பர்கள் குழாம்



4 comments:

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

உமது சேவை அருமை தோழரே, உமது கடமை உணர்வு வாழ்க.

என்க்காக ஒரு பாடல் வெளியிடுவீர்களா. எனக்கு அந்த பாடலின் முதல் வரி ஞாபகத்தில் இல்லை. ஒரு கருப்பு வெள்ளை படம் , கலூரி பிரிவினை குறித்த பாடல், நடுவே “குரங்குகள் போல மரங்களின் மேலே தாவித்திரிந்தோமே” என்ற வரிகள் வரும்

மோகனன் said...

அன்பு நண்பருக்கு...

தங்களுடைய வாழ்த்திற்கு என்னுடைய சிரம் தாழ்ந்த நன்றிகள்..!

தங்களது விருப்பத்தை விரைவில் நிறைவேற்றுகிறேன்..!

தாங்கள் கேட்ட பாடல் 'பசுமை நிறைந்த நினைவுகளே...' என்று தொடங்கும் பாடலாகும்..!

யூர்கன் க்ருகியர் said...

மிக அருமையான ஒரு வலைப்பதிவு.
இதனை நாள் தெரியாமல் போயிற்றே ??

மோகனன் said...

அன்பு நண்பர் யூர்கன் க்ருகியர் அவர்களுக்கு...

தங்களின் வருகைக்கும், மேலான இணைப்பிற்கும் என் சிரத் தாழ்ந்த நன்றிகள்...

அடிக்கடி கேட்க வாங்க..!