ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, 3 December 2010

இந்த பச்சைக்கிளிக்கொரு..! - திரைப்பாடப் பாடல் (நேயர் விருப்பம்)


'இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப் பூவினில் தொட்டிலைக் கட்டி வைத்தேன்...' 1976-ல் வெளிவந்த நீதிக்குத் தலைவணங்கு திரைப்படத்தில் இடம் பெற்ற தாலாட்டுப் பாடல்...

இப்படத்தில் எம்.ஜி.ஆரின் தாயாராக பழம்பெரும் நடிகை எஸ். வரலட்சுமி நடித்திருப்பார், அவர் குரலில் இப்பாடலைப் பாடியிருப்பார். அப்பாடல் வெறும் ஒன்றரை நிமிடங்கள் மட்டுமே ஒலிப்பதால் அதை நான் தேர்வு செய்யவில்லை..

எம்.ஜி.ஆருக்காக கான தேவன் கே.ஜே. யேசுதாஸ் குரல் கொடுக்க ஆரம்பித்த காலம் இது... இப்பாடலை எம்.ஜி.ஆருக்காக இவர் பாடினார்... கவிஞர் புலமைப்பித்தனின் வரிகளுக்கு மெல்லிசை மன்னரின் இன்னிசையில் தாலாட்டிசையாக வரும் இப்பாடலை நேயர் விருப்பப் பாடலாக கேட்ட அன்புத் தோழி கலையரசிக்கு எனது நன்றிகள்...

இப்பாடலில் இடம் பெறும் வரிகள் காலத்தால் மறையாத, மாற்றமுடியாத வரிகளாகும்...

''எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கயிலே...
பின் நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்ப்பினிலே...''

நீங்களும் கேட்டுப் பாருங்கள் இப்பாடலை...

உங்களுக்குப் பிடித்திருப்பின் இப்பாடலை நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்... உங்களுக்குப் பிடித்த பாடலை என்னிடம் கேளுங்கள் இயன்றவரை தேடி எடுத்துத் தருகிறேன்



இந்த பச்சைக்கிளிக்கொரு... | Upload Music


----

Anonymous Kalaiarasi said...

Can you please provide 'Intha pachchai kilikku sevvandhi poovil thotilai katti vaipen' song from 'Needhikku thalai vanangu' movie which was sung by varalakshmi ?

kalaiarasi
9 September 2010 12:47



6 comments:

யூர்கன் க்ருகியர் said...

அருமையான பாடல் ..
நன்றி

மோகனன் said...

வாங்க யூர்கன்...

தங்களுடைய பாரட்டுதலுக்கு மிக்க நன்றி...

அடிக்கடி கேட்க வாங்க..!

Veena Devi said...

உங்கள் பாடல் தொகுப்பு மிக அருமை.. நன்றி.

"சித்தி" படத்தில் நடிகை பத்மினி படும் " காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே " பாடலும் ,
கே.ர் விஜயா படியிருக்கும்" தமிழுக்கும் அமுதென்று பேர் "(படம் தெரியவில்லை ) பாடலையும் தேடிக்கொண்டு இருக்கிறேன் ..

தங்களிடம் இருந்தால் அனுப்பவும்.நன்றி.


--
Cheers
Veena Devi

மோகனன் said...

அன்பான வீணா தேவி அஙர்களுக்கு...

தங்களின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மிக்க நன்றி...

தங்களின் விருப்பத்தை கூடிய விரைவில் நிற்வேற்றி வைக்க முயல்கிறேன்... காத்திருக்கவும்...

நீங்கள் கேட்ட இரண்டாவது பாடலான தமிழுக்கும் அமுதென்று பேர் பாடலை ஏற்கனவே பதிவிலிட்டிருக்கிறேன்... இப்பாடலை கே.ஆர். விஜயா பாடவில்லை...பி. சுசீலா பாடியுள்ளார்...

http://moganaraagam.blogspot.com/2009/12/blog-post.html

அடிக்கடி கேட்க வாங்க..!

Anand partheeban said...

Sir,

please send to me...the sundarakandam(devotional) in tamil

மோகனன் said...

அன்பு நண்பருக்கு...

நானொரு நாத்திகவாதி... ஆதலால் இறை சார்ந்த பாடல்கள் என் தளத்தில் இடம்பெறாது என எண்ணுகிறேன்...

இருப்பினும் http://music.cooltoad.com
என்ற தளத்தில் தேடிப் பார்க்கவும் அப்பாடல் இருந்தால், ஒரு எளிய முறையில் உங்களை பதிவு செய்து கொண்டு, இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்...

தங்களின் மின்னஞ்சலுக்கு எனது நன்றிகள்...

அதிலும் சிரமம் இருப்பின் மீண்டும் தொடர்பு கொள்ளவும் .. நன்றி