ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday 10 December 2010

சிட்டுப் போல பெண்ணிருந்தா..! - பழைய திரைப்படப்பாடல்


“மாமா… மாமா… மாமா…

ஏம்மா… ஏம்மா… ஏம்மா…
சிட்டுப் போல பெண்ணிருந்தா
வட்டமிட்டு சுத்தி சுத்தி
கிட்ட கிட்ட ஓடி வந்து தொடலாமா?”

1961-ல், சேலம் மாடர்ன் தியேட்டர்ஸின் தயாரிப்பில் வெளியான, குமுதம் திரைப்படத்தில் இடம்பெற்ற அத்தனை பாட்டுகளும் அபார வெற்றி பெற்றவை... அதில் சிறந்த பாடல்தான் இந்த 'சிட்டுப் போல பெண்ணிருந்தா 'பாடல்... கிராமத்து இசை வடிவில் துள்ளலிசையைக் கொடுத்து, மக்களிடம் மகத்தான வரவேற்பையும் வெற்றியையும் பெற்ற பாடல் இது என்றால் அது மிகையல்ல...


எசப்பாட்டு வடிவில் காதலனும் காதலியும் பாடுகின்ற பாடல் இது... காதலன் காதலியின் கையை தொட முயல... அப்படி செய்யலாகுமா என காதலி கூறுகிறாள்... அட்டகாசமான துள்ளலிசை கலந்த இப்பாடலை இன்று கேட்டலும் நம்மை துள்ளாட்டம் போட வைக்கும்...


திரைக்கவித் திலகம் மருதகாசி எழுதிய இப்படாலுக்கு, திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் இசையமைத்திருக்கிறார். இப்பாடலை டி.எம்.எஸ் அவர்களும் ஜமுனா ராணி அவர்களும் இணைந்து துள்ளும் குரலோடு பாடியிருப்பார்கள்... இவர்களுடன் கோரஸும் மிக அருமையாக இருக்கும்...


எனக்குப் பிடித்த இப்பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்... 
உங்களுக்குப் பிடித்திருப்பின் இப்பாடலை நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்... உங்களுக்குப் பிடித்த பாடலை என்னிடம் கேளுங்கள் இயன்றவரை தேடி எடுத்துத் தருகிறேன்



சிட்டுப் போல பெண்ணிருந்தா..! | Upload Music




17 comments:

Mani kandan said...

வணக்கம் தோழர் மோகனன் ,

ஒரு சிறிய உதவி செய்ய வேண்டும். எனக்கு "வருதப்பா.. வருதப்பா ... கஞ்சி வருதப்பா... இந்த கஞ்சி கலயம் கொண்டுகிட்டு வஞ்சி வருதப்பா... என்ற பாடல் வேண்டும். அல்லது அந்த படத்தின் பெயர் வேண்டும். பதில் அனுப்புமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன். நன்றி....


அன்புடன்,


சு. மணிகண்டன்

மோகனன் said...

வணக்கம் மணிகண்டன்..

தங்கள் ஆவலை மிக விரைவில் பூர்த்தி செய்கிறேன்...

வருகைக்கு மிக்க நன்றி... அடிக்கடி கேட்க வாங்க..!

Anonymous said...

the singer is Jamuna Rani.

மோகனன் said...

அன்புத் தோழருக்கு...

தாங்கள் சொன்னது சரியே... இப்பாடலை ஜமுனா ராணிதான் பாடியிருக்கிறார்...

தவறை சுட்டியமைக்கும், வருகைக்கும் எனது நிரம் தாழ்ந்த நன்றிகள்...

அடிக்கடி கேட்க வாங்க..!

Albert Dhanabal said...

Dear Moganaraagam,

I saw the songs you loded in the site moganaraagam.blogspot.com. But download option is not there in the page. I like the old songs. Can you give the link to download the songs.

Regards,
Albert

ganesan said...

Anbulla moganan,

Google moolamaga thangal thalathirku vanthu,kandu, magizhnthen.

enakku kulanthaikku thai paadum thalaatu padalgal vendum. thiraippadalgalaga illamal irunthal nallathu. yengenum download seiyyum vagayil kanappattal mugavari thanthu uthavungal.nanri.

thangal anbulla...

Ganesh.

vadivelan v said...

அன்பார்ந்த மோகனன்,

இந்திரா என் செல்வம் என்னும் படத்தில் சுசீலா மற்றும் திருச்சி லோகநாதன் ஆகியோர் தனித்தனியே பாடிய சின்ன அரும்பு மலரும் என்ற பாடல் கிடைக்குமா?

நலம் வாழியவே|

அன்புடன்,

வடிவேலன்.

மோகனன் said...

அன்பான ஆல்பர்ட்...

அந்த பாடலை கொடுத்திருக்கும் கருப்பு/வெள்ளை பெட்டியில் பார்த்தீர்கள் எனில் கீழ் நோக்கியபடி ஒரு அம்புக்குறி வெள்ளை/ பச்சை நிறத்தில் இருக்கும்.. அதுதான் டவுண்லோட் லிங்க்...

அதை கிளிக் செய்தால், அந்த பாடலை இலவசமாக டவுண்லோட் செய்து கொள்ளலாம்... முயற்சித்துப் பாருங்கள்... முடியவில்லை எனில் மீண்டும் தொடர்பு கொள்ளுங்கள்...

அடிக்கடி கேட்க வாங்க..!

மோகனன் said...

அன்பான கணேசன் அவர்களுக்கு...

தங்களின் ஆசையை தீர்த்து வைக்க முயல்கிறேன்...

அதுவரை காத்திருக்கவும்...!

மோகனன் said...

வாங்க வடிவேலன்...

முயற்சித்துப் பார்க்கிறேன்...

காத்திருங்கள்...!

mani samy said...

அன்பு நண்பரே,

வணக்கத்துடன் மணி.

எனக்கு சில தமிழ் பழைய பாடல்கள் கிடைக்கவில்லை. தயவு செய்து அந்தப் பாடல்களை MP3 வடிவில் எனக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி உதவ வேண்டுகிறேன்.

படம் பாடல்
மாணிக்கத் தொட்டில் - ராஜாத்தி பெற்றெடுப்பாள் ராஜ குமாரன்
தேனும் பாலும் - மஞ்சளும் தந்தான்
தபால்காரன் தங்கை - கரிகாலன் கட்டிவைத்தான்
தாய்க்கு ஒரு பிள்ளை - கல்யாணராமன் கோலம்
சொந்தம் - கண்ணுபடப் போவுது கட்டிகடி சேலையை
பூக்காரி - முத்துப்பல் சிரிப்பென்னவோ
கல்யாண வளையோசை - எங்கு பார்த்தாலும்
அவன் ஒரு சரித்திரம் - மாலையிட்டான்

நன்றியுடன்,

மணி.

மோகனன் said...

அன்பு நண்பருக்கு...

வணக்கத்துடன் மோகனன்...

வேலைப் பளு அதிகமிருப்பதால்...நீங்கள் கேட்ட இத்தனை பாடல்களையும் என்னால் எடுத்துத் தர இயலாது...

ஆனால் அதற்கான வழியைச் சொல்கிறேன்.. அதைப் பின்பற்றி பெற்றுக் கொள்ளுங்கள்..( இவைகளெல்லாம் இணையத்தில் இருந்தால் மட்டுமே நமக்கு கிடைக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்...)

music.cooltoad.com என்ற முகவரியில் படத்தின் பெயரையே பாடலின் முதல் வரியையோ ஆங்கிலத்தில் கொடுத்து தேடுங்கள் கிடைக்கும்...

sukravathanee.org என்ற இணையதளத்தில் உறுப்பினராகி உள்ளே செல்லுங்கள்... பழைய பாடல்களின் பொக்கிஷத் தளம் அது... பேராசிரியர் ஒருவர் ஒரு படப்பாடல்கள் என்ற முறையில் பழைய படங்களின் பாடல்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்... இதுவரை 40 படங்களின் பாடல்கள் வந்துவிட்டன என்று நினைக்கிறேன்...

தங்களுக்கு நேரடியாக உதவி செய்யாமல் போனதற்கு மன்னிக்க வேண்டுகிறேன்.. நன்றி...

Lenin k said...

வைரமுத்து பாடல்” மனிதா மனிதா இனி உண் விழிகள் சிவந்தால்” அனுப்பவும்.

நன்றி

மோகனன் said...

விரைவில் தேடி எடுத்துத் தருகிறேன் லெனின்...

காத்திருக்கவும்...

goma said...

அருமையான ராகம் லைப்ரரி
என் விருப்பம்
போர்ட்டர் கந்தன் படத்தில்
ஊதும் ஓடும் ரயில் “ என்ற குழந்தைகள் பாடும் பாடல்
கண்டு பிடித்துத் தாருங்களேன்

மோகனன் said...

வருகைக்கு நன்றி...

முயற்சித்து பார்க்கிறேன்...

அடிக்கடி கேட்க வாங்க..!

வைத்தீஸ்வரன் said...

என் நினைவில் உள்ள சில வரிகளை தருகிறேன்

ஊதும் ஒடும் ரயில்

பசுபதி கோயில் பசுபதி கோயில்

இந்த ஊரில் நிற்காது மெயில்

டிக்கெட்டில்லா வித் அவுட்
டிரெயினுக்குள்ளே ஈரெட்டு
இழுக்கிறேன் இழுக்கிறேன் இழுக்கிறேன்