ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, 10 January 2011

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல..! - பழைய திரைப்படப் பாடல்..!


''மலர்ந்தும் மலராத பாதி மலர் போல..!'' என்ற அற்புதமான பாடலை இன்று என் விருப்பப் பாடலாக பதிவிலிடுகிறேன்..!

இரண்டு கணேசன்களும் (சிவாஜி, ஜெமினிசாவித்திரியும் இணைந்து நடித்த மகத்தான படமான "பாசமலர்" 1961- ல் வெளிவந்தது. ராஜாமணி பிக்சர்ஸ் பெயரில் எம்.ஆர்.சந்தானமும், கே.மோகனும் தயாரித்த படம் இது. அண்ணன் தங்கை பாசத்தை மையமாகக் கொண்ட கதையை ஏ. பீம்சிங் அவர்கள் இயக்கியுள்ளார். அண்ணனும், தங்கையுமாக சிவாஜியும், சாவித்திரியும் வாழ்ந்து காட்டினார். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே அட்டகாசமான பாடல்களாகும்.

ஆயினும், இப்பாடல் அன்று முதல் இன்று வரை மட்டுமல்ல, என்றென்றும் காலத்தால் அழியாக் காவியப் பாடலாக ஒலித்துக் கொண்டிருக்கும்.

கவியரசரின் காவிய வரிகளுக்கு, மெல்லிசை மன்னர்கள் மெல்லிசையமைக்க டி.எம்.எஸ்ஸும், பி.சுசீலாவும் உருகிப் பாடியிருப்பார்கள்... கேட்பவர்களை உருகவைத்து விடுவார்கள்..!

இப்பாடலைக் கேட்காத செவிகளும் செவிகளல்ல என்றுதான் நான் சொல்வேன்.

சிவாஜியும் சாவித்தியும் வெவ்வேறு வீடுகளில் தங்கள் குழந்தைகளைத் தாலட்டும் பாடலான,
"மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே
வந்து விடிந்தும் விடியாத காலைப்பொழுதாக விளைந்த கலையன்னமே நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி நடந்த இளம் தென்றலே
வளர்ப் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே"
- என்ற கவிஞர் கண்ணதாசனின் கற்பனை வளத்திற்குச் சிகரமாய் அமைந்த பாடல். இந்த வரிகளுக்கு நிகரான வேறு வரிகளைக் காணவே முடியாது...

பாடலின் முடிவில் ம்ம்ம்ம்ம்ம்ம்... என டி.எம்.எஸ்ஸின் ஹம்மிங்கும், அவருக்கிணையாக பி. சுசீலாவின் ஆரிராராரிரோ ஹம்மிங்கும் தேனினும் இனியவை... இப்பாடலைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்...

இப்பாடலுக்கு சோகமும் அன்பும் பாசமும் இழைந்த ஒரு தாலாட்டு இசையினை மெல்லிசை மன்னர்கள் பாடல் முழுதும் இழையோட விட்டிருப்பார்கள்..!

எனக்குப் பிடித்த இப்பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்.. பிடித்திருந்தால் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!



மலர்ந்தும் மலராத..! | Upload Music


இனி இப்படம் பற்றிய சுவாரசியத் தகவல்கள்


@1961-ல் வெளியான படங்களில் "பாசமலர்", சிவாஜி, ஜெமினி, சாவித்திரி ஆகியோரின் வெற்றி மகுடத்தில் ஒரு வைரக்கல்.

@அண்ணன், தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுத்தப் படங்களில் இப்படம் 25 வாரங்கள் ஓடி, காவிய அந்தஸ்து பெற்ற படமாகும்.


@1961ம் ஆண்டு வெளி வந்து தமிழகத்தையே உருக வைத்த அண்ணன் தங்கை உறவைச் சித்தரிக்கும் ஒரு நல்ல படமாக மிளிர்ந்தது பாசமலர்.


@இப்படத்தின் கதை கே.பி.கொட்டாரக்கரா என்ற மலையாள எழுத்தாளருடையது. வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ். எம்.ஜி.ஆர். படங்களுக்கு வசனம் எழுதிக் கொண்டிருந்த இவரை, சிவாஜிக்கு அறிமுகம் செய்து வைத்தவர் ஜெமினி கணேசன். பாசமலர் வெற்றியைத் தொடர்ந்து, சிவாஜியின் படங்களுக்கும் வரிசையாக வசனம் எழுதினார், ஆரூர்தாஸ்.


@ இப்படத்தை இயக்கியவர் பீம்சிங். அவருடைய "பா" வரிசைப் படங்களில் மிகப்பெரிய வெற்றிப்படம் இது. இப்படம் தெலுங்கில் `டப்' செய்யப்பட்டது. பிறகு இந்தி, சிங்களம் ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டது.



@இப்படத்திற்கு பிறகு சிவாஜியும், சாவித்திரியும் காதலர்களாகவோ, கணவன் மனைவியாகவோ எப்படத்திலும் நடிக்கவில்லை


@1961-1992 வரை தமிழகத்தில் உள்ள குடும்பங்களில் முதல் குழந்தை ஆணாகப் பிறந்து, இரண்டாவது குழந்தை பெண்ணாகப் பிறந்தால், அக்குழந்தைக்கு பாசமலர் படத்தில் சாவித்ரி நடித்த கதாபாத்திரமான 'ராதா' என்ற பெயரைத்தான் வைத்தார்களாம். (இந்த 2 தகவல்களும் நேயர் தந்தது)


நடிகை சாவித்திரி பற்றிய தகவல்கள்

@ இப்படத்தில் நடித்த நடிகை சாவித்திரி ஆந்திராவின் குண்டுர் மாவட்டத்தில் உள்ள சிறாயூரில் பிறந்தவர். நாடகதுறையில் அறிமுகமாகி அங்கிருந்து சினிமாவிற்கு வந்தவர். எட்டாம் வகுப்புவரை படித்திருக்கிறார். 


@ எல்.வி. பிரசாத்தின் சம்சாரம் என்ற படத்தில் அறிமுகமானார். 


@ தமிழ் தெலுங்கு ஹிந்தி என்று முந்நூற்று பதினெட்டு படங்களில் நடித்திருக்கிறார். 


@ தமிழில் குழந்தை உள்ளம் பிராப்தம் ஆகிய இரண்டு படங்களை இயக்கியிருக்கிறார். 
தெலுங்கிலும் நான்கு படங்களை இயக்கியிருக்கிறார்.


@ மகாகவி பாரதியின் மீது மரியாதை கொண்டு எட்டயபுரத்தில் குடிநீர்க் கிணறு ஒன்றை உருவாக்கி தந்திருக்கிறார் சாவித்திரி.



இப்பாடலின் திரை வடிவம் இதோ






14 comments:

Unknown said...

அப்படியே இந்த கிணற்றையும் ஒரு எட்டி முறை பாருங்களேன்!!
asokarajanandaraj.blogspot.com

Unknown said...

they never acted as husband& wife or as love couples/pairs after this movie...thatzz the impact this movie got created...more over most of the new born girl babies named after savithri character name in 1961-92 if they have elder brother .---my mom informed me

மோகனன் said...

வாங்க கிணற்று நண்பரே...

தங்கள் தளத்திற்கு வந்தேன்.. அருமையாக இருக்கிறது உங்கள் தளம்...

வாழ்த்துக்கள்..!

மோகனன் said...

வாங்க ரவி...

சொல்லற்கறிய தகவல்களைத் தந்த உங்களன்னைக்கு அடியவனின் வணக்கங்களும், நன்றிகளும் உரித்ததாகட்டும்..!

அட்டகாசமான தகவல்கள் தோழரே... இதையும் பதிவில் சேர்த்துவிடுவோம்..!

அடிக்கடி கேட்க வாங்க..!

தமிழன்பன் said...

காலத்தை வென்ற பாடல்களில் இதுவும் ஒன்று.
மீண்டும் சில திருத்தங்கள்....

//அண்ணன், தங்கை பாசத்தை மூயமாக வைத்து எடுத்தப் படங்களில் இப்படம் 25 வாரங்கள் ஓடி, காவிய அந்தஸ்து பெற்ற படமாகும்.//
மூயமாக = மூலமாக

//இப்படத்திற்கு பிறகு சிவாஜியும், சாவித்திரியும் காதலர்களாகவோ, மணவன் மனைவியாகவோ எப்படத்திலும் நடிக்கவில்லை//

மணவன் = கணவன்

யூர்கன் க்ருகியர் said...

சத்தியமா உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல ..

திரும்ப திரும்ப கேட்க தூண்டும் பாடல் ..


படத்த கண்டிப்பா பார்க்கணும் ..

மோகனன் said...

அன்பு நண்ப்ர தமிழன்பருக்கு...

தங்களின் பாசமிகு குட்டிற்கு பணிவான நன்றிகள்...

நிறைய வேலைப் பளுவிற்கு இடையில் இதை செய்வதால் இப்படி எழுத்துப் பிழைகள் வந்து விடுகின்றன...

(எழுத்துப் பிழை இருப்பதால்தானே... அதை காரணம் காட்டி ஒரு பின்னூட்டம் இடுகிறீர்கள்...!)

இனி எழுத்துப் பிழை வராமல் பார்த்துக் கொள்கிறேன்...

அடிக்கடி கேட்க வாங்க..!

மோகனன் said...

நன்றி எல்லாம் எதற்கு யூர்கன்...

நட்பு ஒன்றே போதும்...

அடிக்கடி கேட்க வாங்க..!

தமிழன்பன் said...

ஐயய்யோ!! குற்றம் காண்பது என் நோக்கமல்ல. அறுசுவை உணவை ரசித்து உண்ணும்போது சிறு கல் கடிபட்டால் உண்டாகும் உணர்வைதான், உங்கள் பதிவுகளில் காணப்படும் எழுத்துப் பிழைகளும் உருவாக்குகின்றன. செய்வன திருந்தச் செய் என்பார்கள். அருமையான ஒரு வலைப்பூ சிறப்பாக அமையவேண்டும் என்னும் நோக்கத்தில்தான் சுட்டிக்காட்டினேன்.

மோகனன் said...

அன்பு தமிழன்பன்...

தங்களை நான் குறை ஏதும் சொல்லவில்லை... தாங்கள் சொல்வதை முற்றிலும் ஏற்றுக் கொள்பவன் நான்...

இந்த மேற்பார்வைப் பணி அவசியாமான ஒன்றுதான்...

அடிக்கடி கேட்க வாங்க..!

Anonymous said...

It's true that a few films flopped when they acted as a couple after Pasamalar. But I believe a few films did come, such as Thiruvilayadal(1965), Praptham, etc.

But Pasamalar is one film that should be shown to kids before their teens. So they realize the value of being siblings.

-kajan

மோகனன் said...

அருமையான தகவல்களை தந்திருக்கிறீர்கள் தோழரே...

தமிழில் தந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்...

திருவிளையாடல் புராணகாலப் படம் என்பதால் காதல் படவரிசையில் சேராது... (ம்ம்... எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு...)

அடிக்கடி கேட்க வாங்க..!

கதிரவன் க. said...

/இப்படத்திற்கு பிறகு சிவாஜியும், சாவித்திரியும் காதலர்களாகவோ, கணவன் மனைவியாகவோ எப்படத்திலும் நடிக்கவில்லை//
இந்தப்படம் பாசமலர் 1961 இல் வெளிவந்தது.
மூன்றாண்டுகளுக்குப்பின் 1964இல் கைகொடுத்த தெய்வம் படத்திலும் 1965இல் வெளிவந்த திருவிளையாடல் படத்திலும் சிவாஜிகணேசன், சாவித்திரி ஜோடியாக நடித்திருந்தனரே. ஏன் தவறான தகவல்?

மோகனன் said...

திருவிளையாடல் படம் பக்தி படம். 'கை கொடுத்த தெய்வம்' புதுத் தகவல்...

ஆய்வு செய்கிறேன் தோழரே... தவறு இருப்பின் திருத்திக்கொள்கிறேன்...