கிராமிய கீத மன்னன் திரு. புஷ்பவனம் குப்புசாமியின் துள்ளலிசையை அள்ளித் தெளிக்கும் மிக அற்புதமான கிராமியப் பாடல்… ‘ஒண்ணும்… ஒண்ணும்… ரெண்டுதான்…’.
பாடல் ஆரம்பித்தது முதல் சிறு குழந்தை முதல் பெரியவர் வரை ஆடவைக்கும் பாடலைச் சேர்ந்தது இப்பாடல். இதன் கிராமிய இசை உங்களை துள்ளாட்டம் போட வைக்கும் என்பதில் எள்ளவும் ஐயமில்லை... கேட்டு மகிழுங்கள் இந்தப் பாடலை...
முடிந்தால் பின்னூட்டமிடுங்கள்...
ஒண்ணும் ஒண்ணும் ரெண்டுதான்...! - கிராமியப் பாடல் | Music Upload
நன்றி: புஷ்பவனம் குப்புசாமி மற்றும் குழுவினர்
8 comments:
நான் இப்பாடலை உங்களுடைய பிளே லிஸ்டில் இருந்து நேற்றே தரவிறக்கிவிட்டேன்:):):) மிகுந்த நன்றிகள் மோகனன்.
இது போலவே மேலும் பல அருமையான கிராமியக் கலைஞர்களின் பாடல்களை பேருந்துகளில் கேட்டிருந்தாலும், பேர் தெரியாததால் அடையாளம் காண்பது சிரமமாகிறது. அதனால் நீங்களே மேலும் பல அருமையானப் பாடல்களையும் கலைஞர்களையும் அறிமுகம் செய்ய வேண்டுகிறேன்.
தெம்மாங்கு மெட்டில் உள்ள அனைத்து கிராமியப்பாடல்களும் அனைவருக்குமே விருப்பமானதாகத்தான் இருக்கும்:):):) என்னுடைய விருப்பப்பாடல்களும் கூட.
இது போலவே, மகாராஜபுரம் சந்தானத்தின் பாரதியார் பாடல்கள் மிகவும் விருப்பம். அவை வலையில் கிடைத்தாலும் தரவிறக்கம் செய்ய இயலவில்லை. முடிந்தால் அவற்றை வலையேற்ற வேண்டுகிறேன்.
அன்பு நண்பர் ராப் அவர்களுக்கு... தங்களின் கருத்திற்கு என்னுடைய சிரம் தாழ்ந்த நன்றிகள்...
என்னால் இயன்றவரை முயற்சித்துக் கொடுக்கிறேன்...
எனக்கு நிறைய கிராமிய பாடல்கள் அறிமுகமாகவில்லை.. உங்கள் அளவிற்கு.. இருப்பினும் தேடிப் பிடிக்க முயற்சிக்கிறேன்...
கருத்திற்கு மிக்க நன்றி...
//இது போலவே, மகாராஜபுரம் சந்தானத்தின் பாரதியார் பாடல்கள் மிகவும் விருப்பம். அவை வலையில் கிடைத்தாலும் தரவிறக்கம் செய்ய இயலவில்லை. முடிந்தால் அவற்றை வலையேற்ற வேண்டுகிறேன்//
இந்த தகவல் எனக்கு புதிதாக உள்ளது போல் தோன்றுகிறது... ஒருவைளை நான் கேட்டிருந்தாலும் கேட்டிருப்பேன்...
இருப்பினும்... தாங்கள் இதுகுறித்த மேலதிக விபரங்களை எனக்களிக்க வேண்டுகிறேன்.. இணைப்பையாவது கொடுங்கள்.. கேட்டுப் பார்த்து விட்டு...
தேடிப்பிடித்து பதிவேற்றம் செய்கிறேன்...
என்றென்றும் அன்பு'டன்'
மோகனன்
அருமை நன்பரே, எனக்கொரு உதவி வேண்டும், ’தாத்தா தாத்தா கொஞ்சம் பொடி குடு எந்தன் பேரா பேரா என் தடி எடு’ இந்த கிராமிய பாடல் வேண்டும் !!
அன்பு நண்பா...
இப்பாடல் இணையத்தில் இல்லை... வேறெங்கேனும் கிடைக்குமா என முயற்சித்துப் பார்க்கிறேன்.. நன்றி...
நன்றி நன்பா :)
நன்றி தோழா...
Post a Comment