கிராமிய கீதத்தில் மன்னரான புஷ்பவனம் குப்புசாமியின் சிறந்த பாடல்களில் இதுவும் ஓன்று... 'தஞ்சாவூரு மண்ணெடுத்து தாலி ஒண்ணு செய்யச் சொன்னேன்..!
தன்னுடைய காதலியை மணம் முடிப்பதற்காகவும், அதற்க்காக அவர் எடுக்கும் முயற்சிகளும், ஆசைகளும், அவர் எண்ண ஓட்டங்களும் எங்கெங்கு செல்கிறது என்பதை அப்படியே மண் மணம் மாறாமல் கிராமத்து துள்ளலிசையோடு கொடுத்திருக்கிறார்... கேட்டு மகிழுங்கள்..!
அன்பு நண்பர் ராப் அவர்கள் கேட்ட இப்பாடலை, அவர் கேட்ட மறுதினமே வலையேற்றம் செய்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்...
உங்களுக்கு வேண்டிய பாடல்களை கேளுங்கள்... முடிந்தால் பின்னூட்டமிடவும்...
தஞ்சாவூரு மண்ணெடுத்து தாலி ஒண்ணு..! | Online recorder
நன்றி: புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவரது குழுவினர்
8 comments:
மிக்க நன்றி மோகனன். நீங்க இவ்வளவு சீக்கிரம் வலையேத்துவீங்கன்னு நினைக்கலை:):):) மிக்க நன்றி. இவைகள் வலையில் தேடி கிடைக்காமல் வெறுத்துப் போயிருந்தோம். ரொம்ப நன்றி.
அன்பு நண்பர் ராப் அவர்களுக்கு...
கிராமியப் பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தவை என்பதால் 2004-லேயே (கணினி அறிவு கிடைக்கப்ப பெற்றதும்) ஓரளவிற்கு சேகரித்து வைத்திருந்தேன்...
நீங்கள் இப்பாடல் வேண்டி என்னிடம் வேண்டுகோள் வைத்தபிறகு, உங்களைப்போல் நானும் இணையத்தில் இதுபோன்ற நம் மண் மணம் கமழும் பாடல்களை தேடிப் பார்த்தேன்... கிடைக்கவில்லை.. ஆக நமது பணி நல்லதென்றே தோன்றியது..
தங்களது ஊக்கத்திற்கும், அன்பிறகும் எனது பணிவான நன்றிகள்... உங்களது நட்பு வட்டத்திற்கும் இந்த வலைப்பூவை அறிமுகம் செய்து வையுங்கள்...
வேறு பாடல்கள் வேண்டுமென்றாலும் கேளுங்கள்... முயற்சி செய்து பார்க்கிறேன்...
என்றென்றும் அன்பு'டன்...'
மோகனன்
tamilukku vannakkam seitha nanberuku nanri
அன்பு நண்பர் சுவாமிநான் அவர்களுக்கு...
தங்களுடைய வாழ்த்திற்கு மிக்க நன்றி... தமிழுக்கு வணக்கம் செய்வதைவிட நமக்கு வேற என்ன வேலை...
அடிக்கடி கேட்க வாங்க..!
Giant voice, there is no doubt that he will be praised by village music lovers. Tnx. God bless him
தங்களின் மேலான கருத்திற்கு நன்றி தோழா...
நம் கிராமிய பாடல்களுக்கு இணை ஏது... கிராமியம் என்ற வார்த்தையிலேயே... கிராமி விருது அடங்கியிருக்கிறது...
இதை விட சிறப்பு நம் கிராமியப் பாடலுக்கு மட்டுமே கிடைக்கும்...
அடிக்கடி கேட்க வாங்க..!
மிக்க நன்றி
நன்றி சொன்னமைக்கு மிக்க நன்றி தீர்த்தகிரி
Post a Comment