ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday 24 December 2010

அச்சம் என்பது மடமையடா..! - பழைய திரைப்படப் பாடல் (எம்.ஜி.ஆர் நினைவுநாள் சிறப்புப் பாடல்)

'அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிடர் உடமையடா...' என்ற பாடலை இன்று என் விருப்பப் பாடலாக பதிவிலிடுகிறேன்... மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் 23-வது நினைவு தினமான இன்று... அவரது நினைவாக இப்பாடலை கனத்த இதயத்தோடு பதிவிலிடுகிறேன்...

நடேஷ் பிக்சர்ஸ் தயாரிப்பில், எம். நடேசன் அவர்களின் இயக்கத்தில் 19.10.1960 அன்று வெளியான மன்னாதி மன்னன் திரைப்படத்தில் ஆரம்ப காட்சியே இப்பாடலாகத்தான் இருக்கும்... இப்பாடல் பாடிக்கொண்டிருக்கும் போது இப்படத்தின் டைட்டில்களும் வந்துவிடும்...

இப்படத்திற்கு பாடல்கள் மட்டுமல்ல கதைவசனத்தையும் கவியரசர் கண்ணதாசனே எழுதியிருக்கிறார்... (இப்படத்தின் சில பாடல்களை கவிஞர் மருதகாசியும் எழுதியிருக்கிறார்...) மெல்லிசை மன்னர்களான எம்.எஸ்.வியும் ராமமூர்த்தியும் இப்படத்திற்கு இசையமைத்திருந்தனர். டி.எம்.எஸ் அவர்கள் இப்பாடலுக்கு உயிர் கொடுத்திருப்பார்...

நமக்கென்று ஒரு வரலாறு உண்டு... வீரம் உண்டு... என்பதையும் திராவிடர்கள் எதற்கும் அஞ்சியதில்லை... இமயத்தையே அசைத்துப் பார்த்தவர்கள் என்ற பழங்கால சரித்திரத்தையும் இப்பாடலில் அழகாய்ப் புகுத்தியிருப்பார் கவியரசர் கண்ணதாசன்...

எனக்குப் பிடித்த இப்பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருப்பின் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!


அச்சம் என்பது மடமையடா..! | Upload Music

இன்று இப்பாடல் வெளியிடக் காரணமும் இருக்கிறது...

'வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்க்கின்றார்...' - என்ற இப்பாடலின் வரிகளுக்கேற்ப வாழ்ந்து மறைந்தாலும் மக்களின் மனதில் நிலைத்து நின்று கொண்டிருக்கிறார்...

இப்பாடல் குறித்த சில கண்ணீர்த் தகவல்கள்

@கண்ணதாசன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சென்னை கலைவாணர் அரங்கில் சர்வகட்சித் தலைவர்கள் (தி.மு.க. நீங்கலாக) கலந்துகொண்ட இரங்கல் கூட்டம் 24.10.1981 அன்று நடைபெற்றது.


இக்கூட்டத்தில் கலந்துகொண்ட இலங்கை அமைச்சராக அன்று பதவி வகித்த ராஜதுரை உரையாற்றம்போது, “கண்ணதாசன் எழுதிய பாடலைத் தவிர வேறு யார் எழுதிய பாடலையும் இரண்டாவது முறை கேட்கமுடியாது என்று முதல்வர் எம்.ஜி.ஆர். ஒருமுறை பாராட்டிக் கூறினார். முதல்வருக்கும், கண்ணதாசனுக்கும் இடையே ஒரு இடைவெளி இருந்த நேரத்தில் இதனைக் குறிப்பிட்டார்!” என்று கூறினார்.


இரங்கல் கூட்டத்தில் உரையாற்றிய தமிழகத்தின் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். ‘அச்சம் என்பது மடமையடா!’ பாடலை டேப்பில் இருந்து ஒலிக்கச் செய்தார்.


பின்னர் பேசும்போது,


“இந்தப் பாட்டின் மூலம் தன்னம்பிக்கையை ஊட்டுவதுடன் பொதுவுடமைக் கொள்கையை எளிமையாக எடுத்துச் சொல்லி இருக்கிறார். மூட நம்பிக்கையைச் சாடியிருக்கிறார். இலக்கியத்தால் இதை எல்லா மக்களின் மனதிலும் பதியவைக்க முடியாது. சினிமா மூலந்தான் இதை எல்லா மக்களுக்கும் எடுத்துச் சொல்லமுடியும். இதற்கு, சினிமாவைவிடச் சிறந்த சாதனம் கிடையாது. சாதாரண மக்களும் இலக்கியத்தைப் புரிந்துகொள்ளும் வகையில் பாடல்களைப் படைத்தவர் கண்ணதாசன்.
கண்ணதாசன் பாடி, நடித்த பாடல்காட்சிகளை தொலைக்காட்சிகளில் அடிக்கடி ஒளிபரப்ப வேண்டும்!” என்று குறிப்பிட்டார்.

@எம்.ஜி.ஆர். நடித்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவரின் ‘அச்சம் என்பது மடமையடா… அஞ்சாமை திராவிட உடைமையடா’ பாட்டு எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கும் பாடலாகும்!

@ஒரு முறை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் உங்களுக்கு மிகவும் பிடித்த பழைய தமிழ்ப் பாடல் எது என்று கேட்டபோது... அவரின் முகம் நிலவு போல் மலர்ந்தது... தனக்கு சரியாக பாட வராது என்று சொல்லி விட்டு, தன் சிம்மக் குரலில் 'அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிடர் உடமையடா... ஆறிலும் சாவு... நூறிலும் சாவு... தாயகம் காப்பது கடமையாடா...' என பாடிக் காட்டினார்... (இந்த மாவீரர் தாயகத்தை காப்பதற்காக தன் இன்னுயிரை ஈந்து விட்டார்...)

இந்த மூன்று சரித்திரங்களும் வாழ்ந்து மறைந்தாலும்... மக்களின் மனதில் என்றும் வாழ்ந்து கொண்டேதான் இருப்பார்கள்..!

இப்பாடலின் திரைவடிவம் இதோ..!






8 comments:

யூர்கன் க்ருகியர் said...

பட்டைய கிளப்பும் பாட்டு ...
தலைவர் எம் ஜி ஆர் மற்றும் மதிப்பு மிகு வே.பிரபாகரன் அவர்களது அனுபவங்களையும் தொகுத்தது நன்றாயிருக்கிறது.
பகிர்வுக்கு மிக்க நன்றி

Anonymous said...

ஒவ்வோரு தமிழ் உணர்வாளனுடைய உள்ளத்தில் ஒலித்துக் கொண்டிருக்க வேண்டிய அற்புத பாடல். மூன்று அல்ல இரண்டு சரித்திரங்கள் வாழ்ந்து எமக்கு வழிகாட்டி மறைந்தார்கள். ஒரு சரித்திரம் எம்முடனே இன்னும் வாழ்கின்றது. அதை அழிக்க தமிழீழம் மலரும் வரை எந்த கொம்பனாலும் முடியாது.

மோகனன் said...

வாங்க யூர்கன்...

எமது தளத்தின் பிராதான தளவிமர்சகர் நீர்...

உமது பாராட்டு... அரசவையில் அடிமட்டத் தொண்டனுக்கு கிடைக்கும் பாராட்டிற்கு ஒப்பானது...

நன்றி..

மோகனன் said...

தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான் தோழரே...

தமிழீழம் மலரத்தான் போகிறது...
தமிழ்ச்சமுதாயம் தலை நிமிரத்தான் போகிறது...

நீங்கள் குறிப்பிட்ட மூன்றாவது சரித்திரம் மட்டுமல்ல இந்த மூன்று நட்சத்திர சரித்திரங்களும் என்றுமே மறையாது..!

தங்களின் பெயரைக் குறிப்பிட்டிருக்கலாமே..!

Unknown said...

realy super work bro.. keep it up...
Can you upload the song "Thoongum puliyai parai kondu yeluppuvom thooya thamizhrai thamizh kondu yeluppuvom" from puratchikaran flim..

மோகனன் said...

மிக்க நன்றி கார்த்திக்...

நிறைய வேண்டுகோள்கள் உள்ளன... படிப்படியாகத்தான் நிறைவேற்ற வேண்டும்...

காத்திருங்கள்... பதிவிலிடுகிறேன்...

தமிழன்பன் said...

திரு மோகனன் அவர்களுக்கு
உங்கள் அயராத உழைப்பிற்கு வாழ்த்துக்கள். தமிழை நேசிக்கும் நீங்கள் முடிந்தவரையில் எழுத்துப் பிழைகளையும் தவிர்ப்பது வரவேற்கத்தக்கது.


//ஒரு முறை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் உங்களுக்கு மிகவும் பிடித்த பழைய தமிழ்ப் பாடல் எது என்று கேட்டபோது... அவரின் முகம் நிலவு போல் மலர்ந்தது... தனக்கு சரியாக பாட வராது என்று சொல்லி விட்டு, தன் சிம்மக் குரலில் 'அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமில் திராவிடம் உடமையடா... ஆறிலும் சாவு... நூறிலும் சாவு... தாயகம் காப்பது கடமையாடா...' என பாடிக் காட்டினார்... (இந்த மாவீரர் தாயகத்தை காப்பதற்காக தன் இன்னுயிரை ஈந்து விட்டார்...//

அஞ்சாமில் என்பதை அஞ்சாமை என மாற்றிவிடுங்களேன்...

மோகனன் said...

நன்றி தமிழன்பன்...

இனி எழுத்துப் பிழை நிகழாமல் கவனித்துப் பதிவிலிடுகிறேன்...

இப்போதே மாற்றி விட்டேன்.. நன்றி..!