ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday 4 January 2011

சொந்தமுமில்லே...ஒரு பந்தமுமில்லே...! - பழைய திரைப்படப் பாடல் (நேயர் விருப்பம்)


"சொந்தமும் இல்லே ! ஒரு பந்தமும் இல்லே !
சொன்ன இடத்தில் அமர்ந்து கொள்கிறார் ! என்ற பாடலை இன்று நேயர் விருப்பப் பாடலாகப் பதிவிலிடுகிறேன்.

1965-ல் வெளியான ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற அட்டகாசமான பாடல் இது. கவியரசர் கண்ணதாசன் எழுதிய இப்பாடலுக்கு அற்புதமாக இசையமைத்தவர்கள் மெல்லிசை மன்னர்களான எம்.எஸ்.வியும் ராமமூர்த்தியும். இப்பாடலைப் பாடியவர்கள் ஜி.கே.வெங்கடேஷ் குழுவினர் ஆவர்...

இப்பாடலின் வரிகளொவ்வொன்றும் வைரம்தான்

'(முடியை) வளர விட்டால் மனிதரெல்லாம் குரங்குகளாவார்...
நாங்கள் வழித்து விட்டால் மறுபடியும் மனிதர்கள் ஆவார்...'

முடியினை வாழ்வியலுக்கு ஒப்பிட்டு

'உள்ள இடத்தில் உள்ள வரைக்கும்
இந்த உலகம் உன்னை மதிக்கும்
இடத்தை விட்டு இறங்கி விட்டால் ஏறி மிதிக்குமே' என்று சுட்டியிருப்பார் கவிஞர் கண்ணதாசன். (இப்பாடலை இயற்றியது பட்டுக்கோட்டையார் இல்லை.)

இப்பாடலை நேயர் விருப்பப் பாடலாகக் கேட்ட அன்பு நண்பர் சுந்தரம் சிங்காரம் அவர்களுக்கு எனது நன்றிகள்.

அவருக்குப் பிடித்த பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்... உங்களுக்குப் பிடித்திருப்பின் இலவசமாகப் பதிவிறக்கமும் செயது கொள்ளுங்கள்...



சொந்தமுமில்லே... ஒரு பந்தமுமில்லே..! | Upload Music

------------
Anonymous Sundaram Singaram said...


dear sir

I want to download pattukottai kalyanasundaram thathuva padalgal, especially a song form m.r.radha film in which he acts like a barbor sang that song. kindly guide me to download that song.
17 December 2010 11:56
------------------

இனி சுவாரசியமான தகவல்கள்


@ இப்பாடலில் நடிகவேள் எம்.ஆர். ராதா அவர்கள் முடி திருத்தும் தொழிலாளியாக நடித்து அசத்தியிருப்பார். இதற்கு முன்பு வந்த படங்களில், முடி திருத்துபவர்களை படம் பிடித்துக் காட்டியதாக நினைவில்லை. அனேகமாக இதுதான் அவர்களுக்கு மதிப்பளித்து, அவர்களுக்கென ஒரு பாடலையும் கொடுத்திருக்கும் படம் என நினைக்கிறேன். 


@1952- முதல் பணம் என்ற திரைப்படத்தின் மூலம் இசை சாம்ராஜ்ஜியத்தைத் தொடங்கிய மெல்லிசை மன்னர்களான விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆகியோரின் இசைப்பயணம் இப்படத்தோடு முடிந்து போனது. இவர்கள் ஒன்றாக இணைந்து இசை அமைத்த கடைசி படம் இது. இதன்பிறகு இருவரும் தனித்தனியே இசையமைக்க ஆரம்பித்தனர்.


@இப்பாடலில் எம்.ஆர்.ராதா நடிக்கப் போகிறார். இவருக்கு ஏற்ற குரலை எங்கே தேடுவது, யாரைப் பாடுவது என்ற குழப்பம் வந்திருக்கிறது. கடைசியில் எம்.எஸ்.வி.யிடம் உதவியாளராக இருந்து பின்னாளில் அவரது இசை வாரிசாக பரிமளித்த இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ் அவர்களை, இப்பாடலைப் பாடுவதற்கு எம்.எஸ்.வி. தேர்வு செய்தார்.  இவரும் இவரது குழுவினரும் இப்பாடலை பாடுகையில் அமர்க்களம் செய்திருப்பார்கள்... கோரஸில் பின்னியெடுத்திருப்பார்கள்...


@ இப்படத்தின் இயக்குனர் கே.ஜே. மகாதேவன் அவர்கள். இப்படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான். 1939-ல் கல்கியின் படைப்பான தியாகபூமியை திரைப்படமாகத் தயாரித்தார்கள். இப்படம் வெள்ளையர்களால் தடை செய்யப்பட்டு, இந்திய விடுதலைக்குப் பின் மீண்டும் வெளியிடப்பட்டது. இப்படத்தின் கதாநாயகனாக நடித்தவர்தான் இந்த கே.ஜே. மகாதேவன் அவர்கள்.


@நடிகவேள் எம்.ஆர்.ராதா நடித்த வேடங்களிலேயே, இப்படத்தில் நடித்த வேடம்தான் எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்களுக்கு மிகவும் பிடித்தமானது என்று அவரே குறிப்பிட்டிருக்கிறார்.


@ இப்படம் ஆங்கில எழுத்தாளர் P.G. Wodehouse எழுதிய 'If I Were You' என்ற ஆங்கில நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படமாகும்.
---------------------------------------------------

இப்பாடலின் திரை வடிவம் இதோ..:



(ஒலி மற்றும் திரை வடிவம் கொடுத்து உதவிய சுக்ரவதனீ குழுமத்தின் பேராசிரியர் அவர்களுக்கும் எம்.கே.சாந்தாராம் அவர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்..!)



22 comments:

Anonymous said...

வாவா.. பாடல் மிகவும் அருமை. தகவல்களும் சூப்பர். எப்ப்டி உங்களுக்கு இவ்ளோ தெரியுது..

Kandumany Veluppillai Rudra said...

பாட்டுக்கும் பதிவுக்கும் நன்றிகள்

யூர்கன் க்ருகியர் said...

கருத்துள்ள வரிகள்.
கேட்டோம் ரசித்தோம் சிந்தித்தோம் ...

பகிர்வுக்கு நன்றி தலைவரே ..

மோகனன் said...

வணக்கம் அங்கிதா வர்மா...

கற்றது கைமண் அளவு... வாசகர்களின் ஏகோபித்த ஆதரவே இதற்கு காரணம்...

வருகைக்கு நன்றி...

அடிக்கடி கேட்க வாங்க..!

மோகனன் said...

நன்றி திரு உருத்திரா அவர்களே...

அடிக்கடி கேட்க வாங்க..!

மோகனன் said...

என்ன யூர்கன்...

இந்த முறை உங்களுக்கு முன்பே இருவர் வந்து விட்டனரே...

வருகைக்கும், வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி யூர்கன்...

அடிக்கடி கேட்க வாங்க..!

nellai அண்ணாச்சி said...

பால்ய நினைவுகளை கிளரும் பாடல்கள் நன்றி

nellai அண்ணாச்சி said...

பால்ய நினைவுகளை கிளரும் பாடல்கள் நன்றி

nellai அண்ணாச்சி said...

பால்ய நினைவுகளை கிளரும் பாடல்கள் நன்றி

nellai அண்ணாச்சி said...

பால்ய நினைவுகளை கிளரும் பாடல்கள் நன்றி

nellai அண்ணாச்சி said...

பால்ய நினைவுகளை கிளரும் பாடல்கள் நன்றி

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அருமையான பாடல் நன்றி! இப்படம் பார்த்துள்ளேன். இதே படத்தில் தான் என நினைக்கிறேன். "இளமைக் கொலுவிருக்கும்" எனும் பாடலும் எனக்கு மிகப் பிடிக்கும்.
அதையும் தரமுடியுமா?

மோகனன் said...

வாங்க நெல்லை நண்பரே...

தங்களின் பால்ய நினைவுகளை இப்பாடல் மீட்டியது எனில் அது மகிழ்ச்சியான விஷயமே...

அடிக்கடி இது போன்று நடக்க வைப்போம்...

அடிக்கடி கேட்க வாங்க..!

மோகனன் said...

வணக்கம் யோகன் பாரிஸ்...

தாங்கள் சொன்னது முற்றிலும் உண்மையே... நிறைய வேண்டுகோள்கள் இருக்கின்றன...அவைகளை நிறைவேற்றியபிறகு... இதனை நிறைவேற்றுகிறேன்..

அடிக்கடி கேட்க வாங்க..!

Padmanbhan said...

ungal blog magavum arumai payapadalgal katparthuku inimayaga ullathu
mattukara vela un matta kongam parthuko da
patttu vanakili padathil varum

pattu kadithal podavum

மோகனன் said...

நன்றி நண்பரே...

சிக்கிரம் தாங்கள் கேட்ட பாடலைப் பதிவிலிடுகிறேன்...

அடிக்கடி கேட்க வாங்க..!

குறையொன்றுமில்லை. said...

எல்லா பாடல்களுமே அருமையான தெரிவuு. ஓல்ட் இஸ் கோல்ட் தான்.

மோகனன் said...

தங்களின் வருகைக்கும்... வாழ்த்திற்கும் இச்சிறியவனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் அம்மா..!

அடிக்கடி கேட்க வாங்க..!

Anonymous said...

thank u .very nice. maraimalai u s a

மோகனன் said...

வருகைக்கு மிக்க நன்றி மறைமலை அவர்களே...

அடிக்கடி கேட்க வாங்க..!

Anonymous said...

'(முடியை) வளர விட்டால் மனிதரெல்லாம் குரங்குகளாவார்...
நாங்கள் வழித்து விட்டால் மறுபடியும் மனிதர்கள் ஆவார்...'

முடியினை வாழ்வியலுக்கு ஒப்பிட்டு

'உள்ள இடத்தில் உள்ள வரைக்கும்
இந்த உலகம் உன்னை மதிக்கும்
இடத்தை விட்டு இறங்கி விட்டால் ஏறி மிதிக்குமே'

- இவ்வரிகள் சாதாரணமானவை. கருத்துக்களும் சாதாராணமே. வைர வரிகள் என்றெல்லாம் சொல்லமுடியாது.

இப்படத்தில் 'இளமை கொலுவிருக்கும்' என்ற பாடலே கவித்துவமும் பொருட்சுவையும் நிறைந்ததாகும்.

மோகனன் said...

நீங்கள் இருக்கும் இடத்தை விட்டு இறங்கிப் பாருங்கள் அப்போது புரியும் இந்த வரிகளின் அர்த்தம் என்னவென்று...

வருகைக்கு நன்றி தோழரே...