ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, 29 June 2010

பொதுவாக என் மனசு தங்கம்..! - திரைப்படப் பாடல்..!

'சூப்பர் ஸ்டார்' ரஜினி காந்த் நடிப்பில் 1980-ல் வெளியான முரட்டுக்காளை படத்தில் இடம்பெற்ற துள்ளலிசைப் பாடல்தான் 'பொதுவாக என் மனசு தங்கம்.. ஒரு போட்டியின்னு வந்து விட்டா சிங்கம்...' என்ற பாடல்தான் இன்று நான் பதிவிலிடுவது...

இப்பாடலின் வரிகளை எழுதியவர் திரு.  பஞ்சு அருணாச்சலம், இசையமைப்பு நமது இசைஞானி இளையராஜா. குரல் கொடுத்து உயிரூட்டியவர் மலேசியா வாசுதேவன் அவர்கள். இபட்டத்தை இயக்கியவர் ரஜினியின் பிரதான இயக்குனரான எஸ்.பி.முத்துராமன்.

இப்படம் ரஜினியின் 64வது படம், தமிழ்த் திரையுலகில் அவருக்கு மாபெரும் திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்த, மாபெரும் வெற்றிப் படம். இப்படத்தில் இடம்பெற்ற அத்தனைப் பாடல்களும் அட்டகாசமான பாடல்கள்.

இருப்பினும் கிராமத்து இசைக்கருவிகளான உருமி மேளம், நையாண்டி மேளம், நாதஸ்வரம் என அனைத்தும் கலந்து, துள்ளிவரும் துள்ளலிசையோடு வரும் பாடல் இது. இப்பாடல் மனதிற்கு உற்சாகத்தைத் தரும் என்பதால்  எனக்கு மிகவும் பிடித்த பாடலாகும்.

எனக்குப் பிடித்த இப்பாடலை உங்களுக்குப் பிடித்திருந்தால் நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருந்தால் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..! மேலும், உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்..! இயன்றவரை நான் தருகிறேன்..!


பொதுவாக என் மனசு தங்கம்..! | Musicians Available



Friday, 25 June 2010

திருடாதே பாப்பா திருடாதே..! - பழைய திரைப்படப் பாடல்..!


சமூகத்திற்குண்டான நல்ல கருத்துக்களை தன் படத்தில் இடம்பெற வைப்பது எம்.ஜி.ஆரின் பாணி. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் நடிப்பில் 1961-ல் வெளிவந்த 'திருடாதே' என்ற படத்தில் இடம் பெற்ற ''திருடாதே... பாப்பா திருடாதே...'' என்ற பாடல்தான் இன்று நான் பதிவிலிடுவது.

மலைக்கள்ளன், நாடோடி மன்னன் படங்களின் வெற்றிக் கூட்டணியான பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்,எம்.ஜி.ஆர்,எஸ். எம். சுப்பையா நாயுடு கூட்டணிதான் இப்படத்திலும் இடம்பெற்றது.

இப்படத்தின் பாடல்களை எல்லாம் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதினார். இப்படத்திற்கு இசையமைத்தவர் எஸ். எம். சுப்பையா நாயுடு அவர்கள். பாடியவர் நமது டி.எம்.எஸ். இப்படத்தை இயக்கியவர். ப. நீலகண்டன். இப்படத்தில் ஒரு சிறப்பு உண்டு. கவிஞர் கண்ணதாசன் இப்படத்திற்கு கதை வசனம் எழுதியிருக்கிறார். பாடல் ஏதும் எழுதவில்லை என்று நினைக்கிறேன்...

பட்டுக் கோட்டையாரின் இப்பாடல் வரிகள் அத்துனையும் வைரம்...

''திருடாதே பாப்பா திருடாதே
வறுமை நிலைக்கு பயந்து விடாதே
திறமை இருக்கு மறந்து விடாதே..!''

''இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனா
பதுக்குற வேலையும் இருக்காது ..!''

''உழைக்கிற நோக்கம் உறுதி ஆகிட்டா
கெடுக்குற நோக்கம் வளராது..!''


எனக்குப் பிடித்த இப்பாடலை உங்களுக்குப் பிடித்திருந்தால் நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருந்தால் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..! மேலும், உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்..! இயன்றவரை நான் தருகிறேன்..!


திருடாதே பாப்பா திருடாதே..! | Music Codes

-------

(1959 - ஆம் ஆண்டு சீர்காழியில் நடைபெற்ற நாடகத்தின்போது எம்.ஜி.ஆரின் கால் எலும்பு முறிந்து! இனி அவ்வளவுதான்! எம்.ஜி.ஆரால் நடக்க முடியாது! நடிக்க முடியாது என்றார்கள். தனது மன உறுதியால், கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு, ‘திருடாதே’ திரைப்படத்தில் நடித்துப் படவுலகில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தினார்.

திருடாதே’ எம்.ஜி.ஆர். சரோஜாதேவியோடு இணைந்து நடித்த சமூகப்படம். ஏ.எல். சீனிவாசன் தயாரித்த இப்படத்தின் வசனத்தை கண்ணதாசன் எழுத, ப. நீலகண்டன் இயக்கினார். ராஜாராணி கதைகளிலேயே நடித்து வந்த எம்.ஜி.ஆருக்கு இப்படத்தின் வெற்றி பெரும் திருப்புமுனையாகவே 
அமைந்தது எனலாம்)

 இப்பாடலின் திரைவடிவம்




Tuesday, 15 June 2010

தூங்காதே தம்பி தூங்காதே..! - பழைய திரைப்படப் பாடல்..!


நாடோடி மன்னன் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்தான் இந்த 'தூங்காதே தம்பி தூங்காதே..!' பாடல்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் சொந்த தயாரிப்பில், அவரின் இயக்கத்தில், அவர் இரட்டை வேடமேற்று நடித்த படம்தான் இந்த  நாடோடி மன்னன்.

1958- தீபாவளி அன்று வெளியான, இப்படத்தின் பாடல்களை எல்லாம் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதினார். இப்படத்திற்கு இசையமைத்தவர் எஸ். எம். சுப்பையா நாயுடு அவர்கள். பாடியவர் நமது டி.எம்.எஸ்.

(S.M. சுப்பையா நாயுடு. தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்களுள் குறிப்பிடத் தகுந்தவர்.  மலைக்கள்ளன் படத்திற்கு அவர் அமைத்திருந்த இசை, அந்தப் படத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்தது. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், எம்.ஜி.ஆர்., S.M. சுப்பையா நாயுடு என்ற வெற்றிக் கூட்டணி மீண்டும் நாடோடி மன்னன் படத்தில் இணைந்தது.)

எம்.ஜி.ஆர் தனது அனைத்து சொத்துக்களையும் அடமானம் வைத்தும், சிலவற்றை விற்றும் இப்படத்தை எடுத்து முடித்தார். 'இப்படம் வெற்றி பெற்றால் நான் மன்னனாவேன்... இல்லையெனில் நாடோடி ஆவேன்' என இப்படத்தை வெளியிடும் போது எம்.ஜி.ஆரே சொன்னார். படம் வெளியாகி வெள்ளி விழா கண்டது மட்டுமின்றி பல சாதனைகளையும் படைத்தது.

இப்பாடலின் வரிகள் அத்துனையும் வைரம்... 

''நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கழித்தவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்..!''


எனக்குப் பிடித்த இப்பாடலை உங்களுக்குப் பிடித்திருந்தால் நீங்களும் கேட்டு  மகிழுங்கள்... பிடித்திருந்தால் இலவசமாக பதிவிறக்கமும் செய்து  கொள்ளுங்கள்..! மேலும்,  உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்..! இயன்றவரை நான் தருகிறேன்..!
 
தூங்காதே தம்பி தூங்காதே..! | Musicians Available


----------

நாடோடி மன்னன் படத்தின் சாதனைகள்

நாடோடி மன்னன் வெளியான தேதி : 22.8.1958

புரட்சி நடிகர் முதன் முதலில் இரட்டை வேடம் ஏற்று நடித்து வெளிவந்த படைப்பு வெள்ளி விழா காவியம்.

1958-ம் ஆண்டு தீபாவளி அன்று சிங்கப்பூர் நகரங்களில் திரையிடப்பட்டு மாபெரும் சாதனை படைத்த படம் நாடோடி மன்னன். தமிழ் படங்களில் அன்றைய சிங்கப்பூர் மிகப்பெரிய திரையரங்கில் அதிக வசூல் சாதனை செய்த காவியம்.

1958 – ல் 50 திரையரங்கில் 50 நாள் ஓடி அதிக வசூல் பெற்று(1 கோடியே 10 லட்சம் ) சாதனைபுரிந்த காவியம் (50 திரையரங்கு என்பது இரண்டாம் வெளியீட்டும் சேர்த்து).

“முதன் முதலில் தலைநகர் சென்னையில் மூன்று அரங்கில் 100′ காட்சி மேல் தொடர்ந்து ஹவுஸ்ஃபுல் ஆன காவியம்.

சேலம் சித்தேஸ்வரா அரங்கில் வெள்ளிவிழா கண்ட ஒரே படம் இது. புரட்சி நடிகர் கலையுலகில் நடிக்கும் வரை சேலம் நகரில் வெள்ளி விழா கண்ட ஒரே காவியமும் நாடோடி மன்னன் ஒன்றே !

“திருவண்ணமலையில் 100 நாள் கண்ட படமும் ! (இரண்டாம் வெளியீட்டில் முதல் முதலில் 100நாள் கண்ட முதல் காவியமும் இதுவே ! அரங்கு கிருஷ்ணா 113நாள்.

சென்னை கிருஷ்ணா அரங்கில் அதிக நாள் ஓடிய ஒரே காவியம் ( 3காட்சியில்) 161 நாள்.

இலங்கை மாநகரில் 6 அரங்குகளில் 100 நாள் கண்ட ஒரே காவியம் இது ஒன்றே !

“சிறந்த இயக்குநர் விருது “சினிமாகதிர் ” புரட்சி நடிகருக்கு வழங்கியது.

“லண்டன் ‘ தமிழ் சங்கத்தில் கலந்து கொண்ட முதல் தமிழ் காவியம்.

“சிறந்த இயக்குநர் விருது சிங்கப்பூர் பத்திரிக்கையும் மக்கள் திலகத்திற்கு வழங்கியது.

மும்பை, கல்கத்தா ஆகிய வட இந்தியாவிலும் முதன் முதலில் 50 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த காவியம் நாடோடி மன்னன்.

1958-ல் சிறந்த படமாக தேர்ந்து எடுக்கப்பட்ட காவியம்.

“லண்டன்” மாநகர் திரையரங்கு ஒன்றில் சுமார் 8 வாரம் ஒடிய ஒரே தமிழ் காவியம் இது ஒன்றே !

ஆந்திர மாநிலமான “சித்தூரில் ” 100 நாள் கண்ட ஒரே தமிழ் காவியம் இது ஒன்றே !

முதன் முதலில் ஒரு படத்தின் வெற்றி விழாவை பொது மக்கள் பார்வையில் ( தமிழகம் முழுவதும்) கொண்டாடிய முதல் காவியம் ! நாடோடி மன்னனே !

“இவர் காவியத்திற்காக புரட்சி நடிகருக்கு 110 “சவரன்” தங்க வாள் பேரறிஞர் அண்ணா அவர்களால் வழங்கப்பட்டு, பின் புரட்சி நடிகர் அந்த தங்க வாளை…. சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு இலவசமாக வழங்கினார்.

சீர்காழியில் “இன்பக்கனவு “நாடகத்தில் புரட்சி நடிகர் நடித்த போது, கால் உடைந்து பல மாதங்கள் ஓய்வு எடுக்க டாக்டர்கள் சொன்னதால் 31.12.1959 அன்று தான் புரட்சி நடிகர் நடித்த ‘தாய் மகளுக்கு கட்டிய தாலி’ படம் வெளிவந்தது. ஆகையால் 1959-ம் ஆண்டும் ‘நாடோடி மன்னன்’ தமிழகம் முழுவதும் வசூலை வாரி தந்தது.

“ஒரு முன்னணி (கதாநாயகன்) நடிகராக யிருந்து முதன் முதலில் தயாரித்து இயக்கிய வெற்றி படமாகக் தந்தவர் புரட்சி நடிகரே.

“நடிகை அபிநய சரஸ்வதி B.சரோஜாதேவி அறிமுகமான முதல் படம். B. சரோஜாதேவி பின் நாளில் 26 படங்களில் மக்கள் திலகத்துடன் கதாநாயகியாக நடித்தார்.

“பாதி கறுப்பு வெள்ளை, பாதி கலர் படமாக முதல் முதலில் வெளிவந்த படம்.

“அதிக நேரம் (நான்கு மணி நேரம்) ஓடிய படம் இன்று வரை நாடோடி மன்னன் மட்டுமே.

“தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்தும் பாடல் டைட்டில் சாங்ஸ், (செந்தமிழே வணக்கம்) உழைப்பை உணர்த்தும் பாடல் (உழைப்பதிலா), சோம்பேறி தனத்தை சாடும் பாடல்(தூங்காதே தம்பி) ஆக மூன்று கருத்துகள் உணர்த்தும் பாடல்கள் அமைந்தஒரே காவியம்.

“அரண்மனை சிறைசாலையில் கீழ் தளத்திலிருந்து மேல் தளத்திற்கு ஒரு பெரிய குழாயின் மூலமாக இரு புரட்சிகாரர்கள் (புரட்சி நடிகரும் -பானுமதியும்) தொடர்பு கொள்வது எப்படி என்பது பற்றி புதுமையான முறையில் அன்றைக்கு கேமராவில் எடுத்துக் காட்டிய காவியம் நாடோடி மன்னன்.

“ஒரே நடிகர் இரு வேடங்களில் நடித்து படங்களின் இடம் பெறும் ஒரே காட்சியில் இருவரும் கை கொடுப்பது முகத்தை தொட்டு பேசுவதும் போன்ற புதுமையான காட்சிகள் இடம் பெற்ற முதல் தமிழ் காவியம்.

“10- க்கும் மேற்பட்ட பாடல்கள் (ஹிட் சாங்ஸ்) அனைத்தும் இன்றைக்கும் ரசிகர்கள் மத்தியில் ஒலித்து கொண்டிருக்கும் சாதனை காவியம் நாடோடி மன்னன்.

“கண்ணாடி மாளிகை சண்டை காட்சியில் கண்ணாடி முழுவதும் தூள் தூள்ளாக உடைந்து சிதறுவது போல் ஆங்கில படத்துக்கு இணையாக (அதிக செலவு) எடுத்த காவியம்.

“அரண்மனையில் மன்னர்கள் ரகசிய வழியில் (சுரங்கப் பாதை) செல்வது எப்படி என்பதை பிரமிக்க கூடிய அளவுக்கு காண்பித்த காவியம்.

“கதாநாயகி (பானுமதி) இறந்துவிட்ட செய்தி படத்தில் காண்பிக்கும் பாணி ; ஒரு பணி பெண் பால் பாத்திரத்தை கொண்டு வரும் போது, கதாநாயகன் எதிரே ஓடி வந்ததால் அந்த பால் கீழே கொட்டிவிடுகிறது. மேலே ஒரு வரைபடத்தில் அம்பு பட்ட மான் இறந்து கிடப்பது போல் காண்பிப்பார்கள். புதுமையான முறையில் காட்சியை உருவாக்கும் முறையில் முழு வெற்றியை தந்த காவியம். இன்றைக்கும் இந்த காட்சி திரையரங்கில் கைதட்டல் பெறும்.

தமிழகத்தில் வெளிவந்த ஒரு திரைப்படத்திற்கு சிங்கப்பூரில் வெளிவரும் ‘இந்தியன் மூவி நீயூஸ்’ என்ற இதழ் முதல் முதலில் நாடோடி மன்னனுக்கு சிறப்பு மலர் வெளியிட்டது.

தமிழகத்தில் நாடோடி மன்னன் காவியத்திற்கு 10 க்கும் மேற்பட்ட பத்திரிகைகள் சிறப்பு மலர் வெளியிட்டன.

தமிழகத்தில் வெளிவந்த அனைத்து பத்திரிகைகளில் நாடோடி மன்னன் காவியத்திற்கு அதிக விமர்சனம் (பாராட்டு) கிடைத்தது.

“4 மணி நேரம் ஓடுகின்ற திரைப்படத்தில் சிக்கலே இல்லாத கதை அமைப்பு கொண்டது. ஒரு பாமரனுக்கும் புரிகின்ற அளவுக்கு எளிமையான முறையில் வலுவான கருத்துகளோடு அமைத்து திறமையாக இயற்றி வெற்றி வாகை சூடிய காவியம்.

“வசனத்தில் புதுமை புரட்சி கருத்துகள், சிறை அனுபவங்கள், ராஜ தந்திரங்கள், நகைச்சுவை, காதல்,அன்பு,சகோதரி, சகோதரன் போன்ற பல விதமான பாத்திரங்களுக்கு சிறப்பாக வசனங்கள் அமைந்த காவியம் நாடோடி மன்னன்.

முதலில் “அரசியல் கட்சி கொடியை ஆரவாரத்துடன் பறக்க விட்டு வெளிவந்த காவியம் இது !

தகவல் உதவி: http://www.lakshmansruthi.com/cineprofiles/nadodi_mannan.asp



Wednesday, 2 June 2010

ஆடி மாசம் பொறந்திருச்சு..! - திரைப்படப் பாடல்


''ஆடி மாசம் பொறந்திருச்சு..! ஏலேலோ அண்ணாத்தே..!'' கிராமிய பாணியில் வெளியான திரைப்படப் பாடல்தான் இது..! இது ஒரு துள்ளலிசைப் பாடலாகும்..!

ஆபாவாணன் தயாரிப்பு மற்றும் திரைக்கதை அமைப்பில், என்.கே. விஸ்வநாதன் இயக்கத்தில், 1990-ல்  வெளியான 'இணைந்த கைகள்' படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடல் இது... இப்பாடலுக்கு இசையமைத்திருப்பவர் ஆபாவாணனின் ஆஸ்தான இசையமைப்பாளரான மனோஜ் கியான் அவர்கள். அதுசரி இப்பாட்டை யார் எழுதினாங்கன்னுதான கேக்கறீங்க... இப்படத்தின் தயாரிப்பாளரான ஆபாவாணன்தான். குரல் கொடுத்தவர் நமது
கங்கை அமரன்.

இப்பாடலில் கிராமிய இசைக் கருவிகளான... நையாண்டி மேளம், நாதஸ்வரம், சலங்கை இசையென அடி பின்னியெடுத்திருப்பார்கள்..!

எனக்குப் பிடித்த இப்பாடலை உங்களுக்குப் பிடித்திருந்தால் நீங்களும் கேட்டு  மகிழுங்கள்... பிடித்திருந்தால் இலவசமாக பதிவிறக்கமும் செய்து  கொள்ளுங்கள்..! மேலும்,  உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்..! இயன்றவரை நான் தருகிறேன்..! 


ஆடி மாசம் பொறந்திருச்சு..! | Music Codes




Monday, 31 May 2010

நூலுமில்லை வாலுமில்லை..! - திரைப்படப்பாடல் (நேயர் விருப்பம்)

'' நூலுமில்லை வாலுமில்லை..? வானில் பட்டம் விடுவேனா..?'' என்ற பாடல் இன்று நேயர் விருப்பப் பாடலாக இடம்பெறுகிறது...

டி. ராஜேந்தரின் இயக்கத்தில், 1981-ல் வெளிவந்த 'இரயில் பயணங்களில்' என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்தான் இந்த பாடல்...

சோகப்பாடலாக இடம்பெற்ற இப்பாடலைப் பாடியவர். திரு. டி.எம். சௌந்தரராஜன் அவர்கள். இப்பாடலை இயற்றியதும், இசையமைத்ததும் யார் தெரியுமா..? இப்படத்தின் இயக்குனரான டி. ராஜேந்தரேதான்.

காதல் தோல்வியின் வலியினை வரிகளிலே வடித்திருப்பார் டி. ராஜேந்தர்...

''பூத்தால் மலரும் உதிரும், நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை
நிலவும் தேய்ந்து வளரும், அவள் நினைவோ தேய்வதில்லை
காடுதன்னில் பாவி உயிர் வேகும்வரை பாவை உன்னை நினைத்திடுவேன்
பாடையிலே போகையிலும் தேவி உன்னைத் தேடி உயிர் பறந்திடுமே
..''

''வசந்த ஊஞ்சலிலே...,இசைந்த பூங்கொடியே'' என்ற பாடலைக் கேட்ட அன்பு நண்பர் கிறுக்கல் கிறுக்கனுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..!

அவரோடு சேர்ந்து நீங்களும் இப்பாடலை கேட்டு மகிழுங்கள். வேண்டுமெனில் இலவசமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்..! உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்..!




நூலுமில்லை வாலுமில்லை..! | Music Codes


--------

கிறுக்கல் கிறுக்கன் said...
நன்றிகள் பல நண்பரே,எனக்காகவே பாடலை வெளியிட்டமைக்கு. மேலும் ஒரு பாடல் தேவை, அது ”வசந்த ஊஞ்சலிலே...,இசைந்த பூங்கொடியே” என துவங்கும் பாடல்




Wednesday, 26 May 2010

எங்கே தேடுவேன்... பணத்தை எங்கே தேடுவேன்...! - பழைய திரைப்படப் பாடல்

நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் (என்.எஸ்.கே.) என்கிற 'கலைவாணர்' என்.எஸ். கிருஷ்ணன் தயாரித்து, இயக்கி, நடித்த படம் 'பணம்'. 1952-ல் வெளியான இப்படத்தின் தலைப்புக்கு ஏற்றார் போல பணத்தை பற்றி ஒரு பாடலை எழுதினார் என்.எஸ்.கே.

அப்பாடல்தான் இன்று நான் பதிவிலிடப் போவது... "எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்? பணத்தை எங்கே தேடுவேன்?"

இப்பாடலை பாடியதும் இவர்தான்... இசையமைப்பு யாரென்று கேட்கிறீர்களா..? இசைச் சக்ரவர்த்திகளான எம்.எஸ்.விஸ்வநாதன் & ராமமூர்த்தி ஆகியோர்...

இப்பாடலின் வரிகளத்துனையும் வைரங்களாகும்... உதாதரணத்திற்கு

அரசியல்வாதிகள் முதல் அரசு உயரதிகாரிகள் வரை கறுப்புப் பணம் வைத்திருப்பதை...

கருப்பு மார்க்கெட்டில் கலங்குகின்றாயோ?
கஞ்சன் கையிலே சிக்கிக் கொண்டாயோ? - என்றும்

போலிச்சாமியார்களின் பித்தலாட்டங்களை

சாமிகள் அணிகளில் சரண்புகுந்தாயோ?
சந்நியாசி கோலத்தோடு உலவுகின்றாயோ? - என்றும்

ஏழைகளிடம் இல்லாமல்... பணக்காரார்களிடம் இருப்பதையும்... தேர்தலில் விளையாடுவதையும்...

இருப்புப் பெட்டிகளில் இருக்கின்றாயோ?
இரக்கமுள்ளவரிடம் இருக்காத பணந்தனை
எங்கே தேடுவேன் பணத்தை
தேர்தலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ?
தேக சுகத்துக்காக ஊட்டி சென்றாயோ? - என அப்பட்டமாக தோலுரித்துக் காட்டுவார்... இந்த வரிகள் இன்றைக்கு மட்டுமல்ல... என்றைக்கும் பொருந்த்மல்லவா..?

(இப்படத்தின் கதையை எழுதியவர் கலைஞர் கருணாநிதி. இப்படத்தில் நடித்தவர்கள்: சிவாஜி கணேசன், பத்மினி, என்.எஸ். கிருஷ்ணன் மற்றும் டி.ஏ.மதுரம் ஆகியோர்...)

--

அன்பு நண்பர் ஆனந்தபாலன் அவர்களே... உங்கள் அவாவை பூர்த்தி செய்ய வருகிறது இப்பாடல்...

அவரோடு சேர்ந்து நீங்களும் இப்பாடலை கேட்டு மகிழுங்கள். வேண்டுமெனில் இலவசமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்..! உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்..!


எங்கே தேடுவேன்...பணத்தை...! | Music Upload

---------
Delete

அருமையான பாடல் பகிர்வுகள் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பாடல்கள் கிடைக்குமா நண்பரே
12 May 2010 14:08
Delete




Tuesday, 11 May 2010

பசுமை நிறைந்த நினைவுகளே..! - பழைய திரைப்பாடல் (நேயர் விருப்பம்)

'பசுமை நிறைந்த நினைவுகளே..பாடித் திரிந்த பறவைகளே..!' என்ற பாடலைக் கேட்டிருக்கிறீர்களா..? கல்லூரிப் படிப்பை முடித்துச் செல்லும் நண்பர்களின் பிரிவை இப்பாடலில் கேட்கலாம்.

1963-ல் வெளிவந்த ரத்தத் திலகம் படத்தில் இடம்பெற்ற இப்பாடலை இயற்றியவர் கவிஞர் கண்ணதாசன் ஆவார். இசையமைத்தவர் திரையிசைத் திலகம். திரு. கே.வி. மகாதேவன் அவர்கள். டி.எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா ஆகியோரின் கானக் குரல்களில் இப்பாடலைக் கேட்பது ஒரு தனி சுகம்.

இந்த பாடல் பழைய பாடலாக இருந்தாலும், இன்று கேட்டால் கூட எல்லோருக்கும் அவரவர்களின் கல்லூரிக் காலத்து பழைய நினைவுகளைக் கொண்டுவரும்

''பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளேபழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்'' என்ற பாடலைக் கேட்ட அன்பு நண்பர் கிறுக்கல் கிறுக்கனுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..!

அவரோடு சேர்ந்து நீங்களும் இப்பாடலை கேட்டு மகிழுங்கள். வேண்டுமெனில் இலவசமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்..! உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்..!


பசுமை நிறைந்த நினைவுகளே..! | Musicians Available


---------------

//Blogger கிறுக்கல் கிறுக்கன் said...
உமது சேவை அருமை தோழரே, உமது கடமை உணர்வு வாழ்க.

என்க்காக ஒரு பாடல் வெளியிடுவீர்களா. எனக்கு அந்த பாடலின் முதல் வரி ஞாபகத்தில் இல்லை. ஒரு கருப்பு வெள்ளை படம் , கல்லூரி பிரிவினை குறித்த பாடல், நடுவே “குரங்குகள் போல மரங்களின் மேலே தாவித்திரிந்தோமே” என்ற வரிகள் வரும்
4 May 2010 18:54 //