''சங்கே முழங்கு...'' கலங்கரை விளக்கம் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது... புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் உணர்ச்சி மிக்க கவிதையினை பாடலாக்கியிருப்பார்கள்...
நம் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசையமைப்பில் வெண்கலக் குரலார் அமரர். திரு. சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் திருமதி. பி.சுசீலா அவர்களும் இணைந்து இப்பாடலை மிக அழகாக பாடியிருப்பார்கள்...
துள்ள வைக்கும் இசை... துடிப்பு மிக்க வரிகள்.... அடடா... இப்பாடலை எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்...
சங்கே முழங்கு... | Upload Music
அன்பான திரு வே.நடனசபாபதி அவர்களே... தாங்கள் பின்னூட்டத்தில் கேட்டபடி... இதே உங்களின் வேண்டுகோளின் முதல் பாடல் சங்கே முழங்கு... அடுத்த பாடலை.. நாளை தருகிறேன்... (ஆண்குரல் T.M.S அல்ல சீர்காழி கோவிந்தராஜனுடையது...)
//மிக அருமையான பாடல். இரசித்துக்கேட்டேன். நன்றி பல. திருமதி P. சுசீலா அவர்கள் பாடிய 'தமிழுக்கும் அமுதென்று பேர்" என்ற பாடலையும், திரு T.M.S அவர்கள் பாடிய 'சங்கே முழங்கு' என்ற பாடலையும் தயை செய்து பதிவிறக்கம் செய்து தங்கள் பதிவில் தர இயலுமா?
வே.நடனசபாபதி//
2 comments:
எனது விருப்பத்திற்கு இணங்க 'சங்கே முழங்கு' பாடலை தந்தமைக்கு நன்றிகள் பல. எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் இது என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. தவறுதலாக பாடியவர் திரு T.M.S என குறிப்பிட்டு இருந்தேன். தவறை திருத்தியமைக்கு நன்றி. தொடரட்டும் உங்களது பணி!
அன்பு வே. நடனசபாபதி அவர்களுக்கு...
இப்பாடலைப் பற்றி தாங்கள் குறிப்பிட்டது மிகச்சரியே...
வணக்கம்... தங்களின் அவாவை பூர்த்தி செய்த மகிழ்ச்சி எனக்கு...
தங்களைப் போன்ற பெரியோரின் வாழ்த்தும், ஆதரவும் என்றும் இச்சிறுவனுக்குத் தேவை...
அடிக்கடி கேட்க வாங்க...
Post a Comment