ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday, 3 December 2009

ஏற்றமுன்னா ஏற்றம்... - பழைய திரைப்பாடல்..!


எம்.ஜி.ஆர் அவர்கள் 1961-ல் நடித்து வெளிவந்த படம் 'அரசிளங்குமரி'. இப்படத்தில் இடம்பெற்ற புகழ் பெற்ற பாடல் ''சின்னப் பயலே..சின்னப்பயலே.. சேதி கேளடா..'', இதே படத்தில் உழவுத் தொழிலாளர்களைப் பற்றிய மற்றொரு சிறப்பு மிக்க பாடல்தான் இங்கு நான் பதிவிலிட்டிருப்பது... ''ஏற்றமுன்னா.. ஏற்றம்.. இதுல இருக்குது முன்னேற்றம்...'' என்ற பாடலைத்தான் இங்கே நான் குறிப்பிடுகிறேன்...

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் எழுதிய காலத்தால் அழிக்க முடியாத கல்வெட்டு வரிகளுக்கு திரு. ஜி. ராமநாதன் அவர்கள் கிராமிய இசை கலந்த மெட்டினை இப்பாடலில் இழையோட விட்டார்.  இப்பாடலை திரு. டி.எம். சௌந்திர ராஜனும், வெண்கலக் குரலோன் அமரர் திரு. சீர்காழி கோவிந்த ராஜனும் இணைந்து பாடியிருப்பார்கள்...

இருவரும் சேர்ந்து இப்பாடலில் ''தந்தனத்தானே.... ஏலேலோ... தந்தனத்தானே.... ஏலேலோ...'' என்றபடி
கோரஸாக ஹம்மிங் கொடுத்திருப்பார்கள்... அடடா..நான் சிறுவயதில் கேட்ட ஹம்மிங் அது...
இன்றும் என் காதில்  ஒலித்துக் கொண்டே இருக்கிறது...

இப்பாடலில் வரும் வரிகள் ஒவ்வொன்றும் வைரம்... உதாரணத்திற்கு...

''விதியை எண்ணி வீழ்ந்து கிடக்கும் 
வீணரெல்லாம் மாறனும் 
வேலை செஞ்சா உயர்வோமென்ற 
விபரம் மண்டையில் ஏறனும் ...''

(இப்படத்திற்கு முன்பு வரை ராமநாதன் அவர்கள் கர்நாடக பாணியில்தான் இசையமைத்து வந்தார். இப்படத்தில் நம் கிராமிய மண இசையைக் கையெலெடுத்தார்... மனிதர் பட்டையைக் கிளப்பி விட்டார்... அத்துனையும் முத்துக்கள்...)



ஏற்றமுன்னா ஏற்றம்..! | Online recorder



கேட்டுப் பாருங்க.. உங்க கருத்தைச் சொல்லுங்க..!
இப்பாடலின் திரைவடிவம் இதோ..!




4 comments:

SUBBU said...

அருமை நன்பரே, எனக்கொரு உதவி வேண்டும், ’தாத்தா தாத்தா கொஞ்சம் பொடி குடு எந்தன் பேரா பேரா என் தடி எடு’ இந்த கிராமிய பாடல் வேண்டும் !!

மோகனன் said...

அன்பு நண்பர் சுப்பு அவர்களுக்கு...

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி... கருத்திற்கும் மிக்க நன்றி... நீங்கள் கேட்ட பாடல் யார் பாடியது... திரைப்படத்தில் வந்த பாடலா... இதுபோன்ற கூடுதல் தகவல் எனக்குத் தேவை... இவைகளிருந்தால் என்னால் அப்பாடலை எடுத்துத் தர இயலும்...

கொடுப்பீர்கள் என நம்புகிறேன்...

அடிக்கடி கேட்க வாங்க..!

SUBBU said...

கிட்டதட்ட ஒரு பத்து வருடத்திற்கு முன்னால் வந்த பாடல், சின்ன பையன் பாடிய பாடல், பேர் ஞாபகம் இல்லை, அந்த பையனை அடித்து கொன்று விட்டார்கள் :((
இது ஒரு நாட்டுபுற பாடல், எந்த படத்திலும் இடம் பெற வில்லை !!!

மோகனன் said...

இதை எப்படித் தேடி எடுப்பது..? ஆக நாட்டுப்புற பாடல் பற்றிய குறுந்தகடுகளில் தேடிப்பார்க்க வேண்டும்...

என்னாலான முயற்சிகளை செய்து பார்க்கிறேன் தோழரே...

அச்சிறுவனை ஏன் அடித்துக் கொன்றார்கள்..?