1966-ல் வெளிவந்த சித்தி திரைப்படத்தில் ஜெமினி கணேசன், பத்மினி, எம்.ஆர். ராதா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை அன்றைய வெற்றி இயக்குனர்களில் ஒருவரான கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார்...
சித்தி என்றாலே கொடுமைக்காரி என்ற பொய்த்திரையை இப்படம் கிழித்தெறிந்தது. இப்படத்தில் நடிகை பத்மினி ஒரு தாய்க்கு நிகரான சித்தியாக வாழ்ந்து காட்டியிருப்பார்.இப்படத்தில் பத்மினியின் கணவராக நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நடிப்பும் படு அமர்க்களமாக இருக்கும்...
நாவல் ராணி, விடுதலைத் தியாகி, துப்பறியும் நாவல் எழுதிய முதல் பெண் எழுத்தாளர் என்றெல்லாம் போற்றப்பட்ட வை.மு.கோதைநாயகி அவர்களுடைய கதைதான் இந்த சித்தி திரைப்படம்... இந்த படத்துக்காக சிறந்த கதையாசிரியர் விருது வை.மு.கோதைநாயகிக்கு அவர்களுக்கு, அவர் இறந்த பின் வழங்கப்பட்டது.
இனி பாடலுக்கு வருவோம்....
பெண்ணாக பிறந்தவளுக்கு தூக்கம் என்பது சிறு பிராயத்தில் மட்டுமே.. வளர வளர அவளது தூக்கம் தானாக ஓடிவிடும்... அவளது குடும்பம் நிம்மதியாகத் தூங்குவதற்கு, அவள் அவளது தூக்கத்தை துறக்கிறாள்... (இதை என் அன்னையிடம் நான் கண்டிருக்கிறேன்...) இதுதான் இந்த பாடலின் ஆதார சுருதி...
இதை நமது கவியரசு கண்ணதாசன் தனக்கே உரிய பாணியில் பாமாலையாக கோர்த்தெடுக்க, அம்மலையை இசையால் இழையவிட்டார் நமது மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்... இந்த வரிகளுக்கும்... இசைப்பிற்கும் குரல் மூலம் உயிரூட்டியவர் திருமதி பி. சுசீலா அவர்கள்...
குழந்தைகளுக்கு ஏற்ற தாலாட்டுப் பாடலாக ஒலிக்கும் இப்பாடலை நேயர் விருப்பமாக கேட்ட வீணா தேவிக்கு எனது நன்றிகள்... இவருக்குப் பிடித்த பாடலை நீங்களும் கேளுங்கள்... பிடித்திருப்பின் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்... நன்றி..!
-----------------------------------
காலமிது... காலமிது...! | Upload Music
-----------------------------------
Veena Devi said...
உங்கள் பாடல் தொகுப்பு மிக அருமை.. நன்றி.
"சித்தி" படத்தில் நடிகை பத்மினி படும் " காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே " பாடலும் ,
தங்களிடம் இருந்தால் அனுப்பவும்.நன்றி.
--
Cheers
Veena Devi