ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, 21 December 2010

காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே..! - பழைய திரைப்படப் பாடல் (நேயர் விருப்பம்)

'காலமிது காலமிது... கண்ணுறங்கு மகளே... காலமிதைத் தவற விட்டால்... தூக்கமில்லை மகளே... தூக்கமில்லை மகளே...' என்ற பாடலை, நேயர் விருப்பப் பாடலாக இன்று பதிவிலிடுகிறேன்....

1966-ல் வெளிவந்த சித்தி திரைப்படத்தில் ஜெமினி கணேசன், பத்மினி, எம்.ஆர். ராதா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை அன்றைய வெற்றி இயக்குனர்களில் ஒருவரான கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார்...

சித்தி என்றாலே கொடுமைக்காரி என்ற பொய்த்திரையை இப்படம் கிழித்தெறிந்தது. இப்படத்தில் நடிகை பத்மினி ஒரு தாய்க்கு நிகரான சித்தியாக வாழ்ந்து காட்டியிருப்பார்.இப்படத்தில் பத்மினியின் கணவராக நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நடிப்பும் படு அமர்க்களமாக இருக்கும்...

நாவல் ராணி, விடுதலைத் தியாகி, துப்பறியும் நாவல் எழுதிய முதல் பெண் எழுத்தாளர் என்றெல்லாம் போற்றப்பட்ட வை.மு.கோதைநாயகி அவர்களுடைய கதைதான் இந்த சித்தி திரைப்படம்... இந்த படத்துக்காக சிறந்த கதையாசிரியர் விருது வை.மு.கோதைநாயகிக்கு அவர்களுக்கு, அவர் இறந்த பின் வழங்கப்பட்டது.

இனி பாடலுக்கு வருவோம்....

பெண்ணாக பிறந்தவளுக்கு தூக்கம் என்பது சிறு பிராயத்தில் மட்டுமே.. வளர வளர அவளது தூக்கம் தானாக ஓடிவிடும்... அவளது குடும்பம் நிம்மதியாகத் தூங்குவதற்கு, அவள் அவளது தூக்கத்தை துறக்கிறாள்... (இதை என் அன்னையிடம் நான் கண்டிருக்கிறேன்...) இதுதான் இந்த பாடலின் ஆதார சுருதி...

இதை நமது கவியரசு கண்ணதாசன் தனக்கே உரிய பாணியில் பாமாலையாக கோர்த்தெடுக்க, அம்மலையை இசையால் இழையவிட்டார் நமது மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்... இந்த வரிகளுக்கும்... இசைப்பிற்கும் குரல் மூலம் உயிரூட்டியவர் திருமதி பி. சுசீலா அவர்கள்...

குழந்தைகளுக்கு ஏற்ற தாலாட்டுப் பாடலாக ஒலிக்கும் இப்பாடலை நேயர் விருப்பமாக கேட்ட வீணா தேவிக்கு எனது நன்றிகள்... இவருக்குப் பிடித்த பாடலை நீங்களும் கேளுங்கள்... பிடித்திருப்பின் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்... நன்றி..!

-----------------------------------


காலமிது... காலமிது...! | Upload Music

-----------------------------------

Anonymous Veena Devi said...

உங்கள் பாடல் தொகுப்பு மிக அருமை.. நன்றி.

"சித்தி" படத்தில் நடிகை பத்மினி படும் " காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே " பாடலும் ,


கே.ஆர் விஜயா பாடியிருக்கும்" தமிழுக்கும் அமுதென்று பேர் "(படம் தெரியவில்லை ) பாடலையும் தேடிக்கொண்டு இருக்கிறேன் ..

தங்களிடம் இருந்தால் அனுப்பவும்.நன்றி.

--
Cheers
Veena Devi
9 December 2010 14:37
--------------------------------------

(அன்பான வீணா தேவி அவர்களுக்கு... தாங்கள் கேட்ட இரண்டாவது பாடல் கே.ஆர்.விஜயா பாடவில்லை... பி.சுசீலா படிய பாடல்... இப்பாடலை ஏற்கனவே எனது பதிவில் பதிப்பித்திருக்கிறேன்... அதன் இணைப்பு இங்கே:  ''தமிழுக்கும் அமுதென்று பேர் - திரையிசையில் பாரதிதாசன் பாடல்'' 




16 comments:

யூர்கன் க்ருகியர் said...

உங்க கிட்ட பிடிச்ச விசயமே .. பாடலுக்கு முன்னோட்டமாக நீங்கள் எழுத்தும் தொகுப்புரை... படிப்பதற்கு மிக இனிமையாக இருக்கிறது

யூர்கன் க்ருகியர் said...

விட்டா ஆபீஸ்லேயே தூங்க விட்டுருவீங்க போல ...

யூர்கன் க்ருகியர் said...

மிக நல்ல பாடல்... நாங்கள் அனைவரும் ரசித்து கேட்டோம் ..
நன்றி

மோகனன் said...

அன்பான யூர்கன் கிருகியர்...

தங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி...
இதுதான் எனது உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம், எனது தனித்தன்மை...

திரைவடிவில் இருப்பின் கண்ணுக்கு விருந்தாகும்... ஆனால் நாம் ஒலி வடிவில்தான் கொடுக்கிறோம்... அது சார்ந்த தகவல்களையும் கொடுத்தால்..அது மிகச்சிறப்பாக இருக்கும்... ஆதலால் திரை வடிவத்திற்குப் பதிலாக... எழுத்து வடிவம்...

தவ்களின் மனம் திறந்த வாழ்த்திற்கு மிக்க நன்றி யூர்கன்... அடிக்கடி கேட்க வாங்க...

மோகனன் said...

இந்தாப்பா செக்யூரிட்டி...

என்னை சாக்கா வச்சி யூர்கன் தூங்கிடப் போறாரு... எழுப்புங்க சீக்கிரம்...

மோகனன் said...

தாங்கள் அனைவரும் ரசித்துக் கேட்டமைக்கு மிக்க நன்றி...

அடிக்கடி கேட்க வாங்க..!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இன்றைய பாடலாசிரியர்கள் இவற்றைக் கேட்டால்; இப்போ எழுதும் பாடல்களை எழுத மாட்டார்கள்.
"தமிழுக்கு அமுதென்று பெயர்" பாடல் இடம் பெற்ற படம் பஞ்சவர்ணக்கிளி

மோகனன் said...

வாங்க யோகன்....

தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான்...

அடிக்கடி கேட்க வாங்க..!

அம்பிகா said...

ஒரு அருமையான, இனிமையான பாடல். பெண்ணாகப் பிறந்தவளின் ஒவ்வொரு பருவத்திலும் அவள் தூக்கம் எப்படி கெடுகிறது என்பதையும், இப்போதே தூங்கிக் கொள் மகளே என்று தாலாட்டாக அறிவுறுத்தும் ஒரு அழகான பாடல். நல்ல பகிர்வு. பகிர்வுக்கு நன்றி.

மோகனன் said...

வாங்க அம்பிகா...

தங்களின் கூற்று...தாங்கள் பெண் என்பதால் அதை உணர்ந்து கூறும் கூற்று...

கண்ணதாசனுக்கு நன்றி சொல்வோம்... எம்.எஸ்.விக்கு, பி.சுசீலாவிற்கு நன்றி சொல்வோம்...

அடிக்கடி கேட்க வாங்க..!

Nambi said...

வணக்கம் மோகனன்,

உங்கள் பதிவினை ஆனந்த விகடன் வாயிலாக கண்டு கொண்டேன். உங்கள் பாடல் தேர்வு வியக்க வைக்கிறது. இவற்றை சேகரிப்பதற்கான உழைப்பு மலைக்க வைக்கிறது.

கவிஞர் தாராபாரதி எழுதிய 'வெறுங்கை என்பது மூடத்தனம், உன் விரல்கள் பத்தும் மூலதனம்' என்ற பாடலை அறிவீரகளா? மிகுந்த தன்னம்பிக்கையூட்டும் பாடல். புஷ்பவனம் குப்புசாமி பாடிய ஒரு தொகுப்பில் கேட்டதாக நினைவு.

இப்பாடலை தங்கள் பதிவில் சேர்க்க இயலுமா?

நன்றிகளுடன்,

நம்பி

மோகனன் said...

வணக்கம் நம்பி அவர்களே...

தாங்கள் கூறிய பாராட்டுதல்களும், தகவல்களும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது... அதற்கு எனது முதற்க் கண் நன்றி...

'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' - இதுதான் இந்த தளத்தின் நோக்கம்...

அந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித வரிகள்... கவிஞர் யாரென்று தெரியாமலிருந்தேன்.. தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி...

தாங்கள் கேட்ட பாடல் குறித்து தேடி எடுக்க வேண்டும்.. கால தாமதமாகலாம்... கிடைத்ததும் பதிவிலிட்டு விடுகிறேன்...

விகடன் குறித்த தகவல் எனக்கு தரமுடியுமா.. எந்த தேதியிட்ட இதழ்.. பக்கம் எண் குறித்து... எனக்கு மின்னஞ்சல் செய்ய வேண்டுகிறேன்... இந்த சிரமத்திற்கு எனை மன்னிக்க வேண்டுகிறேன்...

அடிக்கடி கேட்க வாங்க...

Subramanian V R said...

Dear Moganan.

PAZHAMAI INIMAI

Congratulations for your noble venture.

I am a senior citizen and i am in search of a melodious song
beginning lines Pamalai Avar Padikka Poo Malai Nan Thodukka
Vazhnal nadandaya Nataraja. Can you advise me the name of the film
this song appears and whether you will be able to in your list
of old songs so that i can enjoy it.

apologies for writing in english, as senoir citizen i am not
well versed in computer knowledge

thank you from V R Subramanian

மோகனன் said...

அன்பில் நிறைந்த பெரியவருக்கு...

தாங்கள் எனை வாழ்த்துவது கண்டு மகிழ்கிறேன்... மன்னிப்பு வேண்டாம் ஐயா...

தாங்கள் கேட்ட பாடலை கண்டீப்பாக தேடி எடுத்துத் தருகிறேன்...

வருகைக்கு நன்றி ஐயா..!

Ramachandran said...

dear moganan,

i appreciate your interest of songs
thanks for your old tamil songs while listening that i forget surroundings regrds

request to post one song "vaaran vaaran poochandi mattu vandiyile" i heard this song in sun tv asatha povadhu yaaru programme. whether this is film song or folk song please post

ramachandran, kgf

மோகனன் said...

கண்டீப்பாக தேடி எடுத்துத் தருகிறேன்...

அதுவரை காத்திருக்க வேண்டுகிறேன்..

நன்றி..!