ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday 31 December 2009

செந்தமிழ் தேன் மொழியாள்..! - பழைய திரைப்படப் பாடல்

1958 -ல் வந்த படம் மாலையிட்ட மங்கை... அப்படத்தில் இடம்பெற்றதுதான் இந்த எவர்கிரீன் ஹிட் சாங்கான 'செந்தமிழ் தேன் மொழியாள்..!'

இப்படத்தின் நாயகர் டி.ஆர்.மகாலிங்கம் அவர்கள். அக்காலத்தில் கதாநாயகனாக நடிப்பவரே பாடலை பாடவும் செய்ய வேண்டும். அதாவது பாடியபடியே நடிக்க வேண்டும்...


பாடுவதில் டி.ஆர்.மகாலிங்கம் ஒரு தனி முத்திரை பதித்தவர்... அக்காலத்தில்... மிக ராகமாக இழுத்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்துதான் பாடுவார்கள்... அதை தகர்த்தெறிந்து, எளிமையான சொற்களை வைத்து மிக இனிமையாகப் பாடி எல்லோர் மனிதில் அப்போது சிம்மாசனமிட்டு அமர்ந்த பாடல்தான் இந்த 'செந்தமிழ் தேன்மொழியாள்... நிலாவெனச் சிரிக்கும் மலர்கொடியாள்...' பாடல்...

இப்படத்தை இயக்கியவர் G.R.நாதன். இப்பாடலுக்கு இசைச்சக்கரவர்த்திகளான எம்.எஸ். விஸ்வநாதன் - பி.ராமமூர்த்தி ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்துக் கலக்கினர். இப்பாடல் அன்று மட்டுமல்ல, இன்றும், ஏன் என்றென்றும் மிகச் சிறந்த பாடலாக ரசித்துக் கேட்கப்படுவது இதன் தனிச்சிறப்பாகும்..!

இப்பாடலை எழுதியது யார் தெரியுமா..?. இப்படத்தின் கதை வசனம், பாடல், தயாரிப்பு எல்லாம் நமது கவியரசு கண்ணதாசன்தான். மற்றொரு தகவல் என்னவென்றால் ஆச்சி மனோரமா இப்படத்தில்தான் அறிமுகமானார். அவரும் கண்ணதாசனின் கண்டுபிடிப்புதான்.

என்ன ஆச்சர்யமா இருக்கா...! உண்மைதான்... எல்லோரும் நம்மை மெட்டுக்கே பாட்டு எழுத சொல்கிறார்களே, நாமே படம் எடுத்தால் நமக்கு பிடித்த பாடல்களை எழுதிக் கொடுத்து இசையமைக்க சொல்லலாமே என்பதற்க்காக கண்ணதாசன் அவர்கள் தயாரித்த படம் இப்படம் என்றும் சொல்வார்கள்


இப்பாடலின் திரை வடிவம் (இதில் மூன்று சரணங்களும் இருக்கிறது என்பது தனிச் சிறப்பு)



Senthamizh Then Mozhiyal
Uploaded by justinraj. - College experience videos.


நன்றி: டெய்லி மோடன்



இப்படாலின் விருத்தம் பற்றிய சிறப்புத் தகவல்

'சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினுள்ளே 
நில்லென்று சொல்லி நிறுத்தி வைத்துப் போனீரே' என்பது தமிழ்நாட்டில் கண்ணதாசனுக்கு முன்னே நீண்ட நெடுங்காலமாக வழங்கிவந்த ஒப்பாரிப் பாடலாகும். கவியரசு அதைத் தன் பாட்டில் இணைத்தது எப்படி..?

இதோ அதற்கான பதில்...

'இப்பாடலிற்கான பாடல் பதிவு நடந்து கொண்டிருந்தது. அந்த நேரம், 'தென்றல்' பத்திரிகை அலுவலகத்தில், கண்ணதாசன் எழுதிக் கொண்டிருந்தார். அப்போது, எம்.எஸ்.விசுவநாதனிடமிருந்து போன் வந்தது. "அண்ணே... பாட்டு நல்லா வந்திருக்கு... இருந்தும், ஏதோ ஒரு குறை தெரியுது... மனநிறைவா இல்லை. நேர்ல வாங்க... பாட்டைக் கேட் டுட்டு என்ன செய்யலாம்ன்னு யோசிக்கலாம்...'' என்றார். உடனே புறப்பட்டார் கவிஞர். பாடலைக் கேட் டார். பிரமாதமாக பாடியிருந்தார் டி.ஆர்.மகாலிங் கம். இருந்தாலும், ஒரு, 'பெப்' இல்லை என்பதை உணர்ந்து கொண்டார் கவிஞர்.


"விசு... கொஞ்சம் பொறு!'' என்றபடி வெளியே வந்து, மரத்தடியில் இங்குமங்கும் நடந்தபடி இருந்தார். அப் போது, அவர் காலில் ஒரு நெரிஞ்சி முள் குத்திவிட்டது; குனிந்து முள்ளை பிடுங்கி எறிந்து விட்டு நிமிர்ந்தவர், "விசு... விசு...'' என, கூவியபடி ஒலிப் பதிவு அறைக்கு வந்து, எழுதச் சொன்னார்...


"சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே, நில் லென்று கூறி நிறுத்தி வழி போனாளே! நின்றது போல் நின்றாள், நெடுந்தூரம் பறந் தாள், நிற்குமோ ஆவி, நிலைக்குமோ நெஞ்சம்! மணம் பெறுமோ வாழ்வே...'' என்று விருத்தம் பாடி, "அவள் செந்தமிழ்த் தேன் மொழியாள் என, பாடலைத் துவங்கச் சொல்!'' என்றார்.


ஒப்பாரிப் பாடலை...அழகான காதலிக்கு பாடலாக்கியது கவிஞரின் புலமைக்கு சான்றல்லவா..!

அன்பு நண்பர் திரு. ராஷா அவர்களின் வேண்டுகோளின்படி இப்பாடலை இங்கே பதிவிலிடுகிறேன்.. கேட்டு மகிழுங்கள்..!









Blogger ராஷா said...
"செந்தமிழ் தேன் மொழியாள்" - இந்த பாடல் இருந்தா பதிவிடுங்க நன்பா - நன்றி
28 December 2009 13:49





15 comments:

ராஷா said...

நீங்க மறுநாள் தரதாக சொன்னீங்க, நான் 3 நாள் வந்து பாத்தேன் நீங்க பதிவிடல.. உங்களுக்கு எதும் வேலை பளுவோ நினைச்சு கொஞ்சம் சாதாரனமா இருந்தேன்.
ஆனா இன்று வந்து பாத்துட்டு அசந்து போயிட்டேன் நண்பரே..
1958 ல வந்த பாடல, பாடல் மட்டும் இல்லாம அதோட வரலார எழுதி பிரம்மிக்க வச்சுட்டீங்க.
முன்பு கேட்டிருக்கிறேன். இன்று அந்த பாடல் விந்தியாசமான அனுபவத்தோடு கேட்டு ரசித்தேன்...

மிக்க நன்றி நண்பரே.

ராஷா said...

நீங்க இந்த பாடல் மறுநாள் தரதாக சொன்னீஙக நான் தொடர்ந்து 3 நாள் வந்து பார்த்தேன் நீங்க பதிவிடல உங்களுக்கு எதும் வேலை பளுவோனு நினைத்து சாதாரனமாக இருந்தேன்..
ஆனா இன்று பதிவ பார்த்ததும் பிரம்மிப்பா இருந்துச்சு.

1958 வந்த பாடல், வெறும் பாடலா தராம, அதோட வரலாரையே தந்து அசத்திட்டீங்க போங்க.

இதுக்கு முன்னாடி இந்த பாடல நான் கேட்டிருக்கேன். ஆனா இன்றைக்கு வித்தியாசமான அனுபவத்தோடு கேட்டு ரசித்தேன்

மிக்க நன்றி நன்பரே.

மோகனன் said...

அன்பு நண்பர் ராஷா அவர்களுக்கு...

தங்களின் ஆவலை பூர்த்தி செய்த மகிழ்ச்சி எனக்கு...

அடிக்கடி கேட்க வாங்க..!

மோகனன் said...

அன்பு நண்பர் ராஷா அவர்களுக்கு..

இப்பாடலைத் தேடித் தேடி களைத்துப் போனேன்...

காரணம்..இணையத்தில் இப்பாடல் கிடைத்தாலும்.. அப்பாடல் சரியான பதிவிடலாக இல்லை.. ஏகப்பட்ட இரைச்சல்களோடு இருந்தன... பல வித வெட்டல்களும் இருந்தன..

இதே பாடல் திரைப்படத்தில் மூன்று சரணங்களோடு வருகிறது...அதற்கு 4.35 நிமிடங்கள் ஆயிற்று... அதுவும் திரைக்காட்சியுடன் இணையத்தில் இருக்கிறது...

பாடல் வடிவில் 2 சரணங்களோடு மட்டுமே இருந்தது... (3.42 நிமிடங்கள்) நானும் அந்த மூன்று சரணங்களோடு உள்ள பாடலை உங்களுக்குத் தரவேண்டும் என்பதற்காக நானும் சில வெட்டல், ஒட்டல் வேலைகளை செய்து பார்த்தேன்.. ஆனால் எனக்கு அது திருப்தியை அளிக்க வில்லை

ஆதலால்தான் அவ்வளவு தாமதம்... பிறகு சரியான பாடல் கிடைக்குவுமில்லை... பிறகு இரண்டு சரணங்களோடு உள்ள பாடலை பதிவிட்டேன்...

தாமத்திற்கு மன்னிக்கவும் தோழரே..!

அடிக்கடி கேட்க வாங்க..1

Anonymous said...

நண்பரே..
அருமையான, கேட்கக் கிடைக்காத பாடல்கள்... பராசக்தி படத்தில் வரும் ‘ஓ ரசிக்கும் சீமானே’ பாடலும், மருதநாட்டு இளவரசி படத்தில் வரும் ‘எருமைக் கன்னுக்குட்டி’ பாடலும் பதிவிட முடியுமா?
-பனசை நடராஜன், சிங்கப்பூர்-

மோகனன் said...

அன்பான பனசை நடராஜன் அவர்களே...

தாங்கள் கேட்ட பாடல்களை கண்டீப்பாக தேடி எடுத்துத் தருகிறேன்...

சற்று கால அவகாசம் கொடுங்கள்..!

Unknown said...

indha websitil erendu padalgalai keten migunda maghilchi. enudaya laptopil tamil version illai adalal ennai manikkavum. en virupa padalaga PARAVAI MUNIYAMMA padiya padal 'VERATI VERATI PUDIKUMBODHU ENA SOLUMMA KOZHIKUNJU' endra padalai ketka migunda assai mudinthal tharavum.

மோகனன் said...

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி...

பொருளாதார சிக்கல்கள்... ஆதலால் இதற்கு தாமதமாகலாம்...

காத்திருங்கள் தோழரே..!

nellai அண்ணாச்சி said...

ஆஹாஹா காதில் தேன் வந்து பாய்கிறது

மோகனன் said...

நன்றி நெல்லை தோழரே...

Anonymous said...

அருமையான பாடல்கள். கேட்டு மகிழ உதவியமைக்கு நன்றி. சகோதரரே பலநாட்களாக ஒரு பாடலை இணையதளம் மூலம் தேடுகின்றேன் கிடைக்கவி்ல்லை. இப்பாடலுக்கான ஒலிநாடாவோ, இறுவெட்டோ எங்கும இல்லை முடிந்தால கீழ்வரும் படத்தின் பாடலை தரமுடியுமா? விஷ்ணுவர்தன் நடித்த 70துகளில் வந்த படம். அலைகள். இதில் பொன்னென்ன பூவென்ன பெண்னே என்று தொடங்குகிறது என்று எண்ணுகிறேன் முடிந்தால் தந்துதவுங்கள் நன்றி.

மோகனன் said...

வருகைக்கு நன்றி தோழரே...

தங்களின் வேண்டுகோளை நிறைவேற்ற முயற்சிக்கிறேன்.. காலதாமதமாகலாம்.. அதுவரை காத்திருங்கள்..!

singaravel m said...

enakku migavum pititha padalgal varisiyil atikadi munumunukum padal nanri nanba

மோகனன் said...

நன்றி சிங்கார வேலரே...

Naguleswaran Navaratnam said...

'ஆற்றோரம் ஆலமரம்' நாட்டுப்புற பாடல் வரிகளை பதிவிட முடியுமா?