இப்படத்தின் நாயகர் டி.ஆர்.மகாலிங்கம் அவர்கள். அக்காலத்தில் கதாநாயகனாக நடிப்பவரே பாடலை பாடவும் செய்ய வேண்டும். அதாவது பாடியபடியே நடிக்க வேண்டும்...
பாடுவதில் டி.ஆர்.மகாலிங்கம் ஒரு தனி முத்திரை பதித்தவர்... அக்காலத்தில்... மிக ராகமாக இழுத்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்துதான் பாடுவார்கள்... அதை தகர்த்தெறிந்து, எளிமையான சொற்களை வைத்து மிக இனிமையாகப் பாடி எல்லோர் மனிதில் அப்போது சிம்மாசனமிட்டு அமர்ந்த பாடல்தான் இந்த 'செந்தமிழ் தேன்மொழியாள்... நிலாவெனச் சிரிக்கும் மலர்கொடியாள்...' பாடல்...
இப்படத்தை இயக்கியவர் G.R.நாதன். இப்பாடலுக்கு இசைச்சக்கரவர்த்திகளான எம்.எஸ். விஸ்வநாதன் - பி.ராமமூர்த்தி ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்துக் கலக்கினர். இப்பாடல் அன்று மட்டுமல்ல, இன்றும், ஏன் என்றென்றும் மிகச் சிறந்த பாடலாக ரசித்துக் கேட்கப்படுவது இதன் தனிச்சிறப்பாகும்..!
இப்பாடலை எழுதியது யார் தெரியுமா..?. இப்படத்தின் கதை வசனம், பாடல், தயாரிப்பு எல்லாம் நமது கவியரசு கண்ணதாசன்தான். மற்றொரு தகவல் என்னவென்றால் ஆச்சி மனோரமா இப்படத்தில்தான் அறிமுகமானார். அவரும் கண்ணதாசனின் கண்டுபிடிப்புதான்.
என்ன ஆச்சர்யமா இருக்கா...! உண்மைதான்... எல்லோரும் நம்மை மெட்டுக்கே பாட்டு எழுத சொல்கிறார்களே, நாமே படம் எடுத்தால் நமக்கு பிடித்த பாடல்களை எழுதிக் கொடுத்து இசையமைக்க சொல்லலாமே என்பதற்க்காக கண்ணதாசன் அவர்கள் தயாரித்த படம் இப்படம் என்றும் சொல்வார்கள்
இப்பாடலின் திரை வடிவம் (இதில் மூன்று சரணங்களும் இருக்கிறது என்பது தனிச் சிறப்பு)
Senthamizh Then Mozhiyal
Uploaded by justinraj. - College experience videos.
நன்றி: டெய்லி மோடன்
இப்படாலின் விருத்தம் பற்றிய சிறப்புத் தகவல்
'சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினுள்ளே
நில்லென்று சொல்லி நிறுத்தி வைத்துப் போனீரே' என்பது தமிழ்நாட்டில் கண்ணதாசனுக்கு முன்னே நீண்ட நெடுங்காலமாக வழங்கிவந்த ஒப்பாரிப் பாடலாகும். கவியரசு அதைத் தன் பாட்டில் இணைத்தது எப்படி..?
இதோ அதற்கான பதில்...
'இப்பாடலிற்கான பாடல் பதிவு நடந்து கொண்டிருந்தது. அந்த நேரம், 'தென்றல்' பத்திரிகை அலுவலகத்தில், கண்ணதாசன் எழுதிக் கொண்டிருந்தார். அப்போது, எம்.எஸ்.விசுவநாதனிடமிருந்து போன் வந்தது. "அண்ணே... பாட்டு நல்லா வந்திருக்கு... இருந்தும், ஏதோ ஒரு குறை தெரியுது... மனநிறைவா இல்லை. நேர்ல வாங்க... பாட்டைக் கேட் டுட்டு என்ன செய்யலாம்ன்னு யோசிக்கலாம்...'' என்றார். உடனே புறப்பட்டார் கவிஞர். பாடலைக் கேட் டார். பிரமாதமாக பாடியிருந்தார் டி.ஆர்.மகாலிங் கம். இருந்தாலும், ஒரு, 'பெப்' இல்லை என்பதை உணர்ந்து கொண்டார் கவிஞர்.
"விசு... கொஞ்சம் பொறு!'' என்றபடி வெளியே வந்து, மரத்தடியில் இங்குமங்கும் நடந்தபடி இருந்தார். அப் போது, அவர் காலில் ஒரு நெரிஞ்சி முள் குத்திவிட்டது; குனிந்து முள்ளை பிடுங்கி எறிந்து விட்டு நிமிர்ந்தவர், "விசு... விசு...'' என, கூவியபடி ஒலிப் பதிவு அறைக்கு வந்து, எழுதச் சொன்னார்...
"சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே, நில் லென்று கூறி நிறுத்தி வழி போனாளே! நின்றது போல் நின்றாள், நெடுந்தூரம் பறந் தாள், நிற்குமோ ஆவி, நிலைக்குமோ நெஞ்சம்! மணம் பெறுமோ வாழ்வே...'' என்று விருத்தம் பாடி, "அவள் செந்தமிழ்த் தேன் மொழியாள் என, பாடலைத் துவங்கச் சொல்!'' என்றார்.
ஒப்பாரிப் பாடலை...அழகான காதலிக்கு பாடலாக்கியது கவிஞரின் புலமைக்கு சான்றல்லவா..!
அன்பு நண்பர் திரு. ராஷா அவர்களின் வேண்டுகோளின்படி இப்பாடலை இங்கே பதிவிலிடுகிறேன்.. கேட்டு மகிழுங்கள்..!

"செந்தமிழ் தேன் மொழியாள்" - இந்த பாடல் இருந்தா பதிவிடுங்க நன்பா - நன்றி
28 December 2009 13:49